Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஓராட்டு 1 - தல் | ōrāṭṭu 5 v. tr. <>ஓலாட்டு-. To lull, lullaby; தாலாட்டுதல். (J.) |
| ஓராட்டு 2 | ōrāṭṭu n. <>ஓராட்டு-. Lullaby; தாலாட்டு. (J.) |
| ஓராட்டுப்பட்டோலை | ōr-āṭṭu-p-paṭṭōlai n. prob. ஒன்று+ஆண்டு+பட்டோலை. A complete balance sheet; சதுர்ப்பட்டோலை. (P.) |
| ஓராண்காணி | ōr-āṇ-kāṇi n. <>ஒன்று+ஆண்+. Estate under a single owner; ஒருவனுக்கே உரியபூமி. ஓராண்காணியா யரசாள (இராமநா. உயுத்த. 74). |
| ஓராண்வழி | ōr-āṇ-vaḻi n. <>id.+. Unbroken lineage from individual to individual; ஒருதொடராய்வரும் பரம்பரை. நம்மாசாரியர்கள் . . . ஓராண்வழியாய்க்கொண்டுபோந்த இத்தை (ஈடு, 6, 10, 4). |
| ஓராயம் | ōr-āyam n. <>id. + ஆயம். 1. Combination, union; சேர்க்கை. ஓராயமே யுலகம் படைத்தது (திருமந். 407). 2. Obliqueness, slantingness; 3. The leeward or leaning side of a boat or other vessel; 4. The close joining of two boards; |
| ஓரானொரு | ōrāṉ-oru adj.<>id.+. Certain, some one; ஏதோ ஒன்று. ஓரானொருநாளில் (குருபரம். 217, பன்னீ). |
| ஓரி | ōri n. [M. ōri.] 1. Old jackal; முது நரி. (பிங்.) 2. Male jackal; 3. Male lemur; 4. Lair of beast; 5. Man's hair; 6. Mane; 7. Dark blue colour of matured honey; 8. Name of a liberal chief, one of seven kaṭai-vaḷḷal, q.v.; 9. The name of the horse of ōri, a chief of the ancient Tamil country; |
| ஓரிசு | ōricu n. perh. ஓரது. Arrangement, settlement of a business, amicable settlement; தீர்மானம். (W.) |
| ஓரிதழ்த்தாமரை | ōr-itaḻ-t-tāmarai n. <>ஒன்று+. A pasture weed; small plant with its lateral petals so close together at the base as to appear like a single undivided petal, lonidium suffruticosum; சிறுபூண்டு. (பதார்த்த்த. 318) |
| ஓரியர் | ōriyar n. 1. Emperors of the mountains of Cakkaravāḷam; சக்கரவாளசக்கரவர்த்திகள். (புறநா. 175, 6, முதற்பதிப்பு.) 2. Super natural beings said to dwell in mountains, and to possess magical power; 3. Nāgas; |
| ஓரிலைத்தாமரை | ōr-ilai-t-tāmarai n. <>ஒன்று+. A small plant; ஒரு சிறுபூண்டு. (பதார்த்த. 317.) |
| ஓரிலைத்துத்தி | ōr-ilai-t-tutti n. <>id.+. A species of Mallow, Lida accuminata; துத்தி வகை. (W.) |
| ஓரீற்றா | ōr-īṟṟā n. <>id.+ ஈற்று+ஆ8. Cow that has calved but once; ஒருமுறையீன்ற பசு. |
| ஓரும் | ōrum part. Poetic expletive; ஓர் அசைச்சொல். (குறள், 40.) |
| ஓருள்ளிப்பூடு | ōr-uḷḷi-p-pūṭu n. <>ஒன்று+. Solid root off garlic, not divided into cloves; பலபல்லில்லாத உள்ளி. (W.) |
| ஓரெடை | ōreṭai n. An ancient small measure. See ஓரடை. (தொல். எழுத். 28, இளம்பூர). . |
| ஓரெலியீரெலி | ōr-eli-y-īr-eli n. <>ஒன்று+. A game among Paravas; பரவர் விளையாட்டுவகை. |
| ஓரெழுத்துமடக்கு | ōr-eḻuttu-maṭakku n.<>id.+. (Rhet.) A figure of orthography consisting in the consecutive repetition of the same letter in a verse, as in நாநாநாதங்கூடிசைநாடுந் தொழிலோவா; வந்தஎழுத்தே மடக்கிவரும் சொல்லணி. (தண்டி. 94.) |
| ஓரை 1 | ōrai n.prob. ஒரு-மை. 1. Concourse of women; மாதர்கூட்டம். (பிங்.) 2. Women's play; 3. Playground for women; 4. A kind of ancient dance wiht hands joined in a circle, the performers singing while dancing; |
| ஓரை 2 | ōrai n. <>hōrā, 1. Sign of the Zodiac; இராசி. ஓரையுநாளுந் துறந்த வொழுக்கம் (தொல். பொ. 135). 2. A division of time commencing with the rising of a zodiacal sign; 3. Time; 4. An hour of 60 minutes; |
| ஓரை 3 | ōrai n. [T. Oremu.] Boiled rice; a general term used to indicate rice that is mixed up with other edibles such as tamarind, sesamum, etc.; சித்திரான்னம். எள்ளோரை. |
| ஓரை 4 | ōrai part. Connective particle; ஓர் இடைச்சொல். (பிங்.) |
| ஓரை 5 | ōrai n. A kind of owl; கூகை. (W.) |
