Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| ஓத்திரி | ōttiri n. <>hōtr. Offerer of oblations in a sacrifice; யாகஞ்செய்வோன்.  | 
| ஓத்தின்சாலை | ōttiṉ-cālai n. <>ஓத்து +. Place for teaching the vēdas; வேதங்கற்பிகுமிடம். ஓத்தின்சாலையு மொருங்குடனின்று (சிலப். 22, 28).  | 
| ஓத்து | ōttu n. <>ஓது-. 1. Reciting; uttering, as a mantra, ஓதுகை. அஞ்செழுத்து மோத்தொழிந்து (தேவா. 586, 4). 2. The Vēda; 3. Section or chapter of a book; 4. Rule, principle, law;  | 
| ஓத்துமுறைவைப்பு | ōttu-muṟai-vaippu n. <>ஓத்து+. (Gram.) Arrangement in proper sequence of the chapers and sections of a work, one of 32 utti, q.v.; இயல்முதலியவற்றை முறைப்படி யமைத்தலாகிய உத்திவகை. (நன். 14.)  | 
| ஓத்துரைப்போன் | ōtturaippōṉ n. <>id.+. Teacher; உபாத்தியாயன். (பிங்.)  | 
| ஓதக்கலம் | ōtakkalam n. <>Fr. Eau-de cologne; ஒடுக்கலாமென்னுந் திராவகம். Fr. In.  | 
| ஓதக்கால் | ōta-k-kāl n. <>ஓதம்+ Elephant-iasis; ஆனைக்கால்.  | 
| ஓதப்புரோதம் | ōta-p-purōtam n. <>ōta+prōta. Warp and woof; நெசவின் நெட்டிழை குறுக்கிழைகள்.  | 
| ஓதம் | ōtam n. [M. ōtam.] 1. Moisture; dampness, as of floor; ஈரம். (பிங்.) 2. Flood, inundation, deluge; 3. Sea; 4. Wave, billow; 5. Affection of the testis, as hydrocele, hernia;  | 
| ஓதமிறங்கு - தல் | ōtam-iṟaṅku- v. intr. <>ஓதம்+. To have rupture; அண்டமிறங்குதல்.  | 
| ஓதமேறு - தல் | ōtam-ēṟu- v. intr. <>id.+. To become damp; ஈரமேறுதல்.  | 
| ஓதல் | ōtal n. <>ஓது-. Reciting, as the Vēda; கல்விபயிலுகை. (தொல். பொ. 25.)  | 
| ஓதலாந்தையார் | ōtal-āntaiyār n. <>ஓதல்+. Name of the author of the section relating to pālai in ai-ṅ-kuṟu-nūṟu; ஐங்குறுநூற்றிற் பாலைப் பகுதியின் ஆசிரியர்.  | 
| ஓதவனம் | ōtavaṉam n. <>ஓதம்+. Sea, as a great flood; கடல். அறையோதவனஞ்சூழ் புவி (பாரத. அருச்சுனன்றீர். 2).  | 
| ஓதளை | ōtaḷai n. Downy-folloaged cutch. See காசுக்கட்டி. .  | 
| ஓதனம் | ōtaṉam n. <>ōdana. 1. Boiled rice; சோறு. (திவா.) 2. Food;  | 
| ஓதா | ōtā n. <>hōtā nom. sing. of hor. Officiating priest at a sacrifice; யாகஞ்செய்யுமாசிரியருள் ஒருவன். நற்பிருகுவோதா (மச்சபு. சந்திரோ. 12).  | 
| ஓதி 1 | ōti n. <>ஓது-. 1. Knowledge, wisdom, spiritual perception; ஞானம். எல்லாமோதியி னுணர்ந்து கொண்டான் (சீவக. 951). 2. Learning, erudition; 3. Learned person; one who recites the Vēda and šāstras;  | 
| ஓதி 2 | ōti n. <>ஓந்தி. [K. ōti.] See ஓந்தி. .  | 
| ஓதி 3 | ōti n. 1. Closeness, thickness, crowd; செறிவு. (பிங்.) 2. Woman's hair; 3. See ஓதிமம், 2. 4. Close attack in battle;  | 
| ஓதி 4 | ōti n. See ஓது. (பிங்.) .  | 
| ஓதி 5 | ōti n. <>ஓதிமம். Swan; அன்னம். (திவா.)  | 
| ஓதிமம் | ōtimam n. 1. Swan; அன்னம். ஓதிம மொதுங்கக் கண்ட வுத்தமன் (கம்பரா. சூர்ப்ப. 5). 2. Hill, mountain; 3. Yak. See கவரிமா. (W.) 4. Tamarind tree. See புளி. (மலை.)  | 
| ஓதிமமுயர்த்தோன் | ōtimam-uyarttōṉ n. <>ஓதிமம்+. Brahmā, whose banner has the figure of a swan; பிரமன். (பிங்.)  | 
| ஓதிமவாகனன் | ōtimavākaṉaṉ n. <>id. +. Brahmā, whose vehicle is the swan; பிரமன். (பிங்).  | 
| ஓதிமவிளக்கு | ōtimaviḷakku n. <>id.+. Swan-shaped pendent lamp; அன்னப்புள்ளுகுவாய்ச் செய்யப்பெற்ற விளக்கு. யவன ரோதிமவிளக்கின் (பெரும்பாண். 317).  | 
| ஓதிமன் | ōtimaṉ n. <>id. Brahma, who rides on a swan; பிரமன். ஓதிமனை யோர்சிர மறச்செய்தது (பிரபோத. 26, 26).  | 
| ஓதியிடு - தல் | ōtiyiṭu- v. tr. <>ஓது- +. To present gifts on occasions like marriage with blessings, Vēdic mantras being recited with the announcement of the names of the donors; கலியாணமுதலியவற்றில் மொய்யிடுதல். Brah.  | 
| ஓதியிறைத்தல் | ōtiyiṟaittal v. intr. <>id.+ . To sprinkle, as consecrated water; மந்திரநீர் தெளித்தல். (W.)  | 
