Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| ஓடு 2 | ōṭu n. [T. K. M. Tu. ōdu.] 1. Shell, as of a tortoise, of an egg; ஆமைமுதலியவற்றினோடு. 2. Hard outer covering, as of a nut; 3. Roofing tile; 4. Piece of broken earthen ware; potshered; 5. Earthen vessel; 6. Brick; 7. Skull; 8. Mendicant's bowl for receiving alms, as a potsherd;  | 
| ஓடு 3 | ōṭu part. With, together with, sign off the instrumental case; மூன்றனுருபு. (தொல். சொல். 74, உரை.)  | 
| ஓடுகரப்பான் | ōṭu-karappāṉ n. <>ஓடு-+ Erysipelas; கரப்பான்வகை. Loc.  | 
| ஓடுகால் | ōṭu-kāl n. <>id.+. Water channel; நீரோடுங் கால்வாய். (புறநா. 105, உரை.)  | 
| ஓடுகாலி | ōṭu-kāli n. <>id.+. Woman who is always running away from home; வீட்டிற்றங்காதபெண். ஓடுகாலி வீடுமறந்தாள்.  | 
| ஓடுதாவடி | ōṭu-tāvaṭi n. <>id.+. Bustle and confusion in preparing, as for a journey, for going abroad, for business; அவசரங்களில் நேருங்குழப்பம். (W.)  | 
| ஓடுதிருப்பு - தல் | ōṭu-tiruppu- v.intr. <>ஓடு2+. To turn tiles; ஓடுமாற்றிப் புதுப்பித்தல்.  | 
| ஓடுபடம் | ōṭu-paṭam n. <>ஓடு-+ paṭa. Curtain; இடுதிரை. (திவா.)  | 
| ஓடுபந்தல் | ōṭu-pantal n. <>id.+. Movable canopy supported on cords, etc.; நடைப்பந்தல். (J.)  | 
| ஓடுபரப்பு - தல் | ōṭu-parappu- v. intr. <>ஓடு2+ To tile, cover with tiles; ஓடுவேய்தல்.  | 
| ஓடும்பிள்ளை | ōṭum-piḷḷai n. <>ஓடு-+ Messenger of the Paḷḷas; பள்ளர்க்குப் பணிசெய் வோன். Loc.  | 
| ஒருமாற்று - தல் | ōṭu-māṟṟu- v.intr. <>ஒடு2 +. See ஓடுதிருப்பு .  | 
| ஓடுவாயு | ōṭu-vāyu n. <>ஓடு-+ Rheumatism; வாதநோய்வகை.  | 
| ஓடுவி - த்தல் | ōṭuvi- v. tr. Caus.of ஓடு-. To help a person to take ideas into the mind quickly; விரைவாக மனங்கொளச்செய்தல். மறை யோடிவித் திவரைவளர்த்தானும் (கம்பரா. குலமுறை.24).  | 
| ஓடுவிப்புருதி | ōṭu-vippuruti n. <>ஓடு-+ See ஓடுவிப்புருதிக்கடி. (W.) .  | 
| ஓடுவிப்புருதிக்கட்டி | ōṭu-vippuruti-k-kaṭṭi n. <>id.+. Pyaemic abscess, Metastolic abscess; புரையோடும் புண்வகை.  | 
| ஓடை 1 | ōṭai n. <>id. [M. ōDa.] 1. Large water course, channel for the conveyance of water, rivulet, dyke; நீறொடை. (பதார்த்த. 32.) 2. Tank, reservoir; 3. Moat, ditch round a fortification; 4. Mountain path; 5. Metal plate or badge for the forehead, as an ornament; 6. Frontlet for elephants; 7. Vessel for holding sandal, etc.;  | 
| ஓடை 2 | ōṭai n. 1. cf. உடை5. Buffalo Thorn cutch. See குடைவேல். . 2. Oval leaved wheel creeper, leane, l. cl., Combretum ovali-folium; 3. Battle wort. See கிலுகிலுப்பை. (மலை.) 4. Longer internoded stout Reed Bamboo, s. tr., ōchlandia travan-coriea;  | 
| ஓணப்பிரான் | ōṇa-p-pirāṉ n. <>šrōṇā+. Viṣṇu, the 22nd nakṣatra being sacred to Him; திருமால். ஓணப்பிரானு மொளிர்மாமல ருத்தமனும் (தேவா. 643, 10).  | 
| ஓணம் 1 | ōṇam n.prob. sōṇā. River; ஆறு. (பிங்.) கங்கையாதி யோணநீராடல் (சேதுபு. தோத்திர. 48).  | 
| ஓணம் 2 | ōṇam n. <>šrōṇa. [M. ōṉam.] The 22nd nakṣatra. See திருவோணம். (திவா.) .  | 
| ஓணவிழவு | ōṇa-viḻavu n. <>id.+. A festival in honour of Viṣṇu; திருமாலின் திருநாள். ஓண விழவி லொலியதிர (திவ். இயற். 4, 41).  | 
| ஓணான் | ōṇāṉ n. Blood-sucker, a common agamoid lizard, Calotes veisicolor; ஓந்தி. ஓணான் விழுந்தாலு முண்டு பரிகாரம் (தமிழ்நா. 241).  | 
| ஓணான்குத்தி | ōṇāṉ-kutti n. <>ஓணான்+ A hawk that kills and eats the blood-sucker; ஒருவகையிராசாளி. (W.)  | 
| ஓணான்கொத்தி | ōṇāṉ-kotti n.<>id.+. See ஓணான்குத்தி. .  | 
| ஓத்தி | ōtti n. <>ஓந்தி. 1. Chameleon, Cham-āeleo vulgaris; பச்சோந்தி. (பிங்.) 2. Blood sukar, Calotes versicolor;  | 
| ஓத்திரம் | ōttiram n. <>hōtra. Anything fit to be offered, as an oblation; ஓமத்திற்குரிய பொருள். ஓத்திரநெல்லி னொகந்தூ ரீத்து (பதிற்றுப். 70, பதி.).  | 
