Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஓச்சம் 1 | ōccam n. <>ஒச்சு-. Eminence; உயர்வு. வெவ்வ ரோச்சம் பெருக (பதிற்றுப். 41, 20). |
| ஓச்சம் 2 | ōccam n. <>ojas. Celebrity; கீர்த்தி. ஊரோச்சம், வீடுபட்டினி. (J.) |
| ஓச்சல் 1 | ōccal n. <>ஓச்சு-. Height, elevation; உயர்வு. (பிங்.) |
| ஓச்சல் 2 | ōccal n. Corr. of ஓய்ச்சல். உடம்பு ஓச்சலாயிருக்கிறது. Loc. |
| ஓச்சன் | ōccaṉ n. <>உலச்சன். cf. ஓசன். [M. ōccan.] Male belonging to a caste, members of which usually officiate as priests in temples sacred to Piṭāri and other village goddesses; பிடாரிகோயிற் பூசை புரியுஞ் சாதியான். |
| ஓச்சன்கத்தி | ōccaṉ-katti n. <>ஓச்சன்+. Large billhook for beheading animals in sacrifices; பலியில் உபயோகிக்கும் வெட்டுவாள். Colloq. |
| ஓச்சு - தல் | ōccu- 5 v.tr. 1. To cast, throw, discharge, as a weapon; எறிதல். செழியன் செண்டெடுத்துந்தியன் றோச்சலும் (காஞ்சிப்பு. நகர. 67). (சூடா.) 2. To raise in order to strike, as the arm, a weapon; to lift up in a threatening manner; 3. To drive away, chase; 4. To cause to go; to ride; to govern; to wield; to sway, as a sceptre; 5. To insert, thrust into, stick in; 6. To excite, spur on, incite; |
| ஓச்சை | ōccai n. Fried food; வறையல். (திவா.) |
| ஓசம் | ōcam n. <>ōjas. 1. Light, splendour, effulgence, lustre; பிரகாசம். ஓசவன் றிகிரியோச்சி (பாரத. இந்திரப். 39). 2. Frame, honour; |
| ஓசரம் | ōcaram adv. [T. kōsaramu, K. ōskara.] For the sake of, on account of; பொருட்டு. உனக்கோசரம் வன்தேன். Loc. |
| ஓசரி | ōcari n. (W.) 1. Misfortune, fatality; கேடு. 2. Wonder; |
| ஓசழக்கு | ōcaḻakku n. Easiness; சிரமமின்மை. ஒருசிலாமாத்திரத்தை யெடுத்தாற்போலே ஓசழக்காகச் சொல்லுகிறான் (திவ். திருநெடுந். 13, வ்யாக்.) |
| ஓசன் | ōcaṉ n. cf. ojas. [K. ōja, M. ōccaṉ.] Preceptor, teacher; ஆசாரியன். (பிங்.) |
| ஓசனி - த்தல் | ōcaṉi- v. intr. prob. yōjanā. To flap the wings, as birds or as cocks in preparation for crowing; பறவைசிறகடித்தல். ஓசனிக்கின்ற வன்னம் (சீவக. 2652). |
| ஓசனை | ōcaṉai n. <>yōjanā. A measure of distance=4 kātam; நாற்காதம். இன்கருப்பூரமும் . . . ஓசனைகமழுமே (சீவக. 1901). |
| ஓசி 1 | ōci n. Loan; இரவல். Loc. |
| ஓசி 2 | ōci n. fem. of ஓசன். Wife of one's teacher; ஆசாரியன்மனைவி. |
| ஓசீவனம் | ōcīvaṉam n. <>upa-jīvana. Support, livelihood; ஜீவனாதாரம். (J.) |
| ஓசு | ōcu n. <>ōjas. Bodily strength, vigour; வலி. ஓசுள மைந்தரோ டுசாவி. |
| ஓசுநன் | ōcunaṉ n. prob. ஓச்சு- 1. Male of the Parava caste; பரவசாதியான். ஓசுநர்செறிந்த வூன்மலி யிருக்கையும் (சிலப். 5, 27). 2. Oilmonger; 3. Sailor; |
| ஓசுவனம் | ōcuvaṉam n. <>upa-jīvana. See ஓசீவனம். (J.) . |
| ஓசை 1 | ōcai n. [M. ōša.] 1. Sound; ஒலி. (நாலடி, 332.) 2. Vocal sound; 3. Atomic sound-matter from which ākācam is considered to have been evolved; 4. Utterance, pronunciation; 5. Rhythm of a verse; 6. cf. ōjas. Frame, renown, reputation; 7. Snake, by a pun on aravam which means both sound and snake; |
| ஓசை 2 | ōcai n. <>mōcā. Plantain; வாழை. (அக. நி.) |
| ஓசைசெய்தளை | ōcai-cey-taḷai n. <>ஓசை1+. An anklet; காலணி வகை. (திவா.) |
| ஓசையுடைமை | ōcai-y-uṭaimai n. <>id.+. (Pros.) Rhythm, one of ten nūl-aḷaku, q.v.; இன்னோசையுடைமையாக்கிய ஒரு நூலழகு. (நன். 13.) |
| ஓசையுண்(ணு) - தல் | ōcai-y-uṇ- v. intr. <>id.+. To have the proper rhythm, as a stanza; செய்யுளோசை இசைதல். (யாப். வி. 57.) |
