Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஓக்காளிப்பு | ōkkāḷippu n. <>ஓக்காளி-. Retching, incipient sickeness, squeamishness; வாந்திகுணம். ஜ்வரம் விட்டும் ஓக்காளிப்பு நீங்கவில்லை. |
| ஓக்கியம் | ōkkiyam n. <>yōgya. That which is fit., appropriate, worthy; ஏற்றது. உடலாக்குந் தன்மைக் கோக்கியசத்தி யுண்டாய் (சி.சி.2, 48). |
| ஓக்கு - தல் | ōkku- 5 v. tr. Caus. of ஓங்கு. 1. To raise, lift up; உயர்த்துதல். ஓக்கிய வொள்வாள் (நாலடி, 129) 2. To cause to raise; 3. To set apart; 4. To give, bestow; 5. To throw; 6. To make, produce; |
| ஓகம் | ōkam n. <>ōgha. 1. Flood; வெள்ளம். (சூடா.) 2. Crowd, multitude; |
| ஓகாரம் | ōkāram n. <>ஓ1+காரம். Letter used as a symbol for the peacock among the paca-pakṣī. Peacock; மயில். ஓகாரபரியின்மிசை வருவாயே (திருப்பு. 142). |
| ஓகாளம் | ōkāḷam n. prob. ஓ (onom.)+ kāra. See ஓக்காளம். சூளையர்க ளோகாளஞ் செய்யாமுன் (பதினொ. க்ஷேத். 13). |
| ஓகை | ōkai n. <>உவகை. Delight, joy; மகிழ்ச்சி. ஓகயோ டிருத்தி (பாரத. குருகுல. 93). |
| ஓகோ | ōkō int. Oho! expressing wonder, surprise, concern, pity, regret; அதிசயம் முதலிய மனநிலை காட்டுஞ் சொல். ஓகோ வுனைப்பிரிந்தார் (தாயு. பராபரக். 30). |
| ஓங்கல் | ōṅkal n. <>ஓங்கு-. 1. Height, elevation; உயர்ச்சி. (திவா.) 2.Rising; 3. Mountain; 4. Mound, elevation; 5. Mountain top; 6. Tree; 7. Bamboo; 8. Chief, leader, superior, king; 9. Strong man; 10. Descendant; 11. Boat, vessel; 12. Elephant; 13. Bird said to subsist on rain drops, Cuculus melanoeucus; 14. Retching, heaving, vomiting; |
| ஓங்கலுறவன் | ōṅkal-uṟavaṉ n. prob. ஓங்கல்+உறு-. A mineral poison; காந்தபாஷாணம். (மூ.அ.) |
| ஓங்காரம் | ōṅ-kāram n. <>ōm+kāra. Om, the mystic syllable; பிரணவம். ஓங்காரத் துட்பொருளாய் நின்றான் (தேவா. 320, 10). |
| ஓங்காரவுரு | ōṅkāra-v-uru n.<>id.+rūpa. (W.) 1. Deity considered as the personification of the mystic syllable Om; கடவுள். 2. A prepared arsenic. See கௌரிபாஷாணம். |
| ஓங்காரன் | ōṅkāraṉ n. <>id. See ஓங்காரவுரு, 1. . |
| ஓங்காரி - த்தல் | ōṅkāri- 11 v. intr. <>id. To repeat the mystic syllable Om; ஓங்காரத்தை உச்சரித்தல். (W.) |
| ஓங்காரி - த்தல் | ōṅkāri- 11 v. intr. <>ஓங் காளி-. To nauseate. See ஓக்காளி-. Loc. . |
| ஓங்காளம் | ōṅkāḷam n. <>ஓக்காளம். See ஓக்காளம். (J.) . |
| ஓங்காளி - த்தல் | ōṅkāḷi- 11 v. intr. <>ஓக்காளி-. See ஓக்காளி-. (J.) . |
| ஓங்கிப்பார் - த்தல் | ōṅki-p-pār- v. tr. <>ஓங்கு-+. To rise on tiptoe and look; உன்னிப்பார்த்தல். (W.) |
| ஓங்கிப்பிடி - த்தல் | ōṅki-p-piṭi- v.tr. <>id.+. To rise on tiptoe and catch; எழும்பிப்பிடித்தல். (W.) |
| ஓங்கியடி - த்தல் | ōṅki-y-aṭi- v.tr. <>id.+. 1. To raise the hand or a weapon and strike with a heavy blow; ஒச்சித்தாக்குதல். 2. To argue or affirm stoutly; to brush aside the opponent's arguments; to browbeat the opposite party; |
| ஓங்கில் | ōṅkil n. Tunny fish, bluish, Thynnus thunnina; மீன்வகை. ஆழமறியும் ஓங்கில், மேளமறியும் அரவம். |
| ஓங்கிவீடு | ōṅki-vīṭu n. <>ஓங்கு-+. The house in which a man lived and prospered; வாழ்ந்தவன் வீடு. Loc. |
| ஓங்கிற்சுறா | ōṅkiṟ-cuṟā n. <>ஓங்கில்+. Tunny-fish, which swims leaping, thynnus; சுறாவகை. (W.) |
| ஓங்கு - தல் | ōṅku- 5 v. [M. ōṅṅu.] intr. 1. To grow, rise high, as a tree; to ascend, as a flame; to be lofty, as a building or a mountain; உயர்தல். ஓங்கியவெண்குடை (இறை. 14, 95). 2. To spread, extend, expand; 3. To grow, as a child; 4. To be exalted, dignified, eminent; 5. To increase in wealth, in renown, in learning; to flourish; 6. To depart, as the spirit; 7. To heave, retch, vomit; - tr. To lift up, raise, as the arm or a weapon or a pestle; |
