Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஒன்றுமண்டடி | oṉṟu-maṇṭaṭi n. See ஒன்றடிமன்றடி. (J.) . |
| ஒன்றுமற்றவன் | oṉṟum-aṟṟavaṉ n. <>ஒன்றும்+. Destitute person; தரித்திரன். |
| ஒன்றுமன்றடி | oṉṟu-maṉṟaṭi n. See ஒன்றடிமன்றடி.(J) . |
| ஒன்றுமொழி - தல் | oṉṟu-moḻi- v. intr. <>ஒன்று+. To declare with an oath; வஞ்சினங்கூறுதல். இடியிசைமுரசமொ டொன்றுமொழிந்து (பதிற்றுப். 66, 4). |
| ஒன்றொழிபொதுச்சொல் | oṉṟoḻi-potu-c-col n. <>id.+. (Gram.) Term common to both genders, one only of which is intended, the other being excluded by the context; இருதிணையாண்பெணுள் ஒன்றனையொழிக்கும் பொதுச்சொல். (நன். 269.) |
| ஒன்றோ | oṉṟō part. <>id.+ ஓ5. 1. Not only but also; connective between nouns and sometimes verbs; எண்ணிடைச்சொல். பொய்படு மொன்றோ புனைபூணும் (குறள், 836). 2. Either-or; |
| ஒன்னப்பூ | oṉṉap-pū n. perh. கன்னப்பூ. An ear ornament worn by women; காதணியுளொன்று. (W.) |
| ஒன்னலன் | oṉṉalaṉ n. <>ஒன்று-+அல் neg.+. Enemy, foe; பகைவன். ஒன்னலர் மணிமுடியுரிஞ்சு தாளினான் (நைடத. நகரப். 39). |
| ஒன்னாதோர் | oṉṉātōr n. <>id.+ ஆ neg.+. Foes, enemies; பகைவர். இன்னாய் பெருமநின் னொன்னாதோர்க்கே (புறநா. 94, 5). |
| ஒன்னார் | oṉṉār n. <>id.+id.+. See ஒன்னாதோர். தன்னொன்னார் (நாலடி, 129). |
| ஒன்னான் | oṉṉāṉ n. <>ஒன்று. The boy who comes second to school and next to the first boy called eṟān; பள்ளிக்கூடத்திற்கு ஏறானையடுத்துவரும் பையன். |
| ஒன்னு - தல் | oṉṉu- 5 v. <>ஒன்று-. (used only in the neg.) intr. To agree; to be friendly; - tr. To endure; பொருந்துதல். ஒன்னாப்பூட்கைச் சென்னியர்பெருமான் (பதிற்றுப். 85, 3).பொறுத்தல். ஒன்னா முனையோர்க் கொழிக வினித்துயில் (பு. வெ. 4, 21). |
| ஒஸ்தி | osti n. Vul. of உயர்த்தி. 1. Greatness, excellence; மேன்மை. 2. One who is great; |
| ஓ 1 | ō n. The 11th vowel, lengthened grade of ஒ; பதினொராம் உயிரெழுத்து. |
| ஓ 2 | ō n. The symbol representing the sixth note of the gamut; விளரியென்னும் இசையின் எழுத்து. (திவா.) |
| ஓ 3 | ō n. 1. Going and staying; சென்று தங்குகை. ஓவற விமைக்கும் . . . ஒளி (திருமுரு. 3). 2. Shutter or other means to stop the flow of water; |
| ஓ 4 | ō int. 1. Oh! expressing superiority, as ஓஒ பெரியன், or inferiority, as ஓஓ கொடியன்; உயர்விழிவுகளின் சிறப்புக்குறிப்பு. (நன். 423.) 2. Alas! ah! expressing bereavement; 3. Ha! expressing joy; 4. Oho! expressing wonder; 5. O! expressing recollection; 6. Halloa! calling attention; |
| ஓ 5 | ō part. 1. Element signifying (a) ellipsis of a counterpart; (b) interrogation; (c) negation;(d) discrimination; (e) distinctiveness; (f) doubt; ஓழியிசை. படித்தற்கோ வந்தான்: வினா. அவனோ வந்தான்?: எதிர்மறை. யானோ செய்வேன்?: தெரிநிலை. ஆணோ அதுவுமன்று, பெண்ணோ அதுவுமன்று: பிரிநிலை. அவனோ கொண்டான்: ஐயம். பத்தோ பதினொன்றோ. 2. Expletive; |
| ஓ 6 - த்தல் | ō- 11 v.tr. [K. ōḷ.] Lit., to be of one mind, transf., to copulate; புணர்தல். (அக. நி.) |
| ஓஒ | ōo int. Oh! O! expressing wonder; அதிசயக்குறிப்பு. (பிங்.) |
| ஓக்கம் | ōkkam n. <>ஓங்கு-. 1. Height, elevation; உயரம். ஓக்கநீள் விசும்பு (சீவக. 836). 2. Increase, enlargement, bigness, largeness; |
| ஓக்காளம் | ōkkāḷam n. prob. <>ஓ (onom.)+kāra. [T. ōkara, K. ōkari, M. ōkkānam.] Retching, heaving, involuntary effort of the stomach in nausea; வாந்திகுணம். உள்ளியைமோந்தால் எனக்கு ஓக்காளம் வரும். |
| ஓக்காளி - த்தல் | ōkkāḷi- 11 v. <>ஓக்காளம். [T. ōkarintsu, K. okkarisu, M. ōkkāḷi.] intr. To heave; to nauseate; to retch from sickness; - tr. To vomit; வாந்திகுணமுண்டாதல். வாந்தியெடுத்தல். குழந்தை பாலயெல்லாம் ஓக்காளித்து விட்டது. |
