Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஒளியோன் | oḷiyōṉ n. <>id. See ஒளியவன். (பிங்.) . |
| ஒளிர் - தல் | oḷir- 4 v. intr. prob. ஒளி 1. To shine; to emit light; to be resplendent; ஒளிசெய்தல். உள்ளத்து ளொளிர்கின்ற வொளியே (திருவாச. 37, 5). |
| ஒளிர்முகம் | oḷir-mukam n. <>ஒளிர்-+. Diamond; வயிரக்கல். (W.) |
| ஒளிர்வா[வரு] - தல் | oḷir-vā- v. intr. <>id.+. See ஒளிர்-.. கண்ணொளிர் வரூஉங் கவின்சாபத்து (புறநா. 7, 4). |
| ஒளிர்வு | oḷirvu n. <>id. Brightness; radiance; பிரகாசம். அவருடைய முகவொளிர்வைப்பார். (W.) |
| ஒளிவட்டம் | oḷi-vaṭṭam n. <>ஒளி1+. 1. Mirror; கண்ணாடி. ஒளிவட்டத்துப் பாவையின் (இரகு. குச. 17). 2. Discus; 3. Halo of light; 4. Moon; |
| ஒளிவட்டி | oḷivaṭṭi n. A camphorated preparation; பச்சைக்கருப்பூரம். (சங். அக.) |
| ஒளிவளவாய் | oḷivaḷavāy adv. <>ஒளிவு1+அளவாய். Privily; இரகசியமாய். (W.) |
| ஒளிவாடு - தல் | oḷivatu- v. intr. <>ஒளிவு2+. See ஒளிர்-. (W.) . |
| ஒளிவிடு - தல் | oḷi-viṭu- v. intr. <>ஒளி1+ஆடு-. See ஒளிர்-. (திவா.) . |
| ஒளிவிளங்குமேனி | oḷi-viḷaṅku-mēṉi n. <>id.+. A mineral poison; பிறவிப்பாஷாண வகை. (W.) |
| ஒளிவீசு - தல் | oḷi-vīcu- v. intr. <>id.+. See ஒளிர்-. . |
| ஒளிவு 1 | oḷivu n. <>ஒளி2 Place of concealment; மறைவிடம். (W.) |
| ஒளிவு 2 | oḷivu n. <>ஒளிர்-. See ஒளிர்வு. (W.) . |
| ஒளிவை - த்தல் | oḷi-vai- v. intr. <>ஒளி+. (W.) 1. To set a snare for animals or birds; கண்ணிவைத்தல். 2. To place a decoy; |
| ஒளிவைத்துப்பார் 1 - த்தல் | oḷi-vaittu-p-pār- v. intr. <>id.+. To lie in wait for game after having set a snare; கண்ணிவைத்துக் காத்திருத்தல். (W.) |
| ஒளிவைத்துப்பார் 2 - த்தல் | oḷi-vaittu-p-par- v. tr. <>ஒளி1+ To stare at a person; உற்றுப்பார்த்தல். |
| ஒளிறு 1 - தல் | oḷiṟu- 5 v. intr. cf. ஒளிர்-. To shine, glitter; விளங்குதல். ஒளிறுவாண் மறவரும் (மணி. 1, 68). |
| ஒளிறு 2 | oḷiṟu- n. <>ஒளிறு-. Splendour, light; பிரகாசம். ஒளிற்றுறு கலன் மார்பெய்தி (கந்தபு. அசமுகிநகர். 24). |
| ஒற்கம் | oṟkam n. <>ஒல்கு-. 1. Poverty; indigence; destitution; want; வறுமை. (தொல். சொல். 360.) 2. Feebleness; weakness; 3. Defficiency, dearth; 4. Diffidence, modesty; |
| ஒற்கு - தல் | oṟku- 5 v. intr. <>id. 1. To be deficient; to be wanting; குறைதல். ஒற்காமரபிற் பொதியிலன்றியும் (சிலப். 25, 117). 2. To fall short, droop; |
| ஒற்றடம் | oṟṟaṭam n. <>ஒற்று-. Fomentation; வெப்பம்பட ஒற்றுகை. Colloq. |
| ஒற்றடிச்செருப்பு | oṟṟaṭi-c-ceruppu n. <>ஒற்றையடி+. Slippers; sandals; ஒற்றைத்தோ லட்டையாலமைந்த செருப்பு. (W.) |
| ஒற்றளபு | oṟṟaḷapu n. <>ஒற்று+அளபு. See ஒற்றளபெடை. (நன். 60.) . |
| ஒற்றளபெடை | oṟṟaḷapeṭai n. <>id.+. (Gram.) Lengthening the mutes ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், வ், ல், ள், ஃ after one or two short syllables for the sake of metre, as in கண்ண், இலங்ங்கு, the said consonant being doubled in writing, to indicate the prolongation, one of ten cārpeḻuttu, q.v.; குறித்த மெல்லின இடையின மெய்யெழுத்துக்கள் தமக்குரிய மாத்திரையின் மிக்கொலிக்கை. (நன். 92.) |
| ஒற்றறு - த்தல் | oṟṟaṟu- v. intr. <>id.+. To keep time with the hands or with cymbals in singing; தாளத்தை அறுதியிடுதல். (திவா.) |
| ஒற்றன் | oṟṟaṉ n. <>ஒற்று-. Male spy; வேவுகாரன். ஒற்றனிவனென வுரைத்து (மணி. 26, 27). |
| ஒற்றாடல் | oṟṟāṭal n. <>ஒற்று+ஆள்-. Employing and directing spies; வேவுகாரரை விடுத்து வினைசெய்கை. (குறள், 59, அதி.) |
| ஒற்றாள் | oṟṟāḷ n. <>id.+ ஆள். Spy; வேவுகாரன். ஒள்ளிய வொற்றாள் குணம் (திரிகடு. 85). |
| ஒற்றி 1 - த்தல் | oṟṟi- 11 v. intr. <>ஒன்று-. 1. To be united with; to become one with; ஒற்றுமைப்படுதல். அவற்றினான் ஆன்மா ஒற்றித்துக் காணினல்லது (சி. போ. சிற். 5, 1). 2. To be odd, as numbers; |
