Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஒவ்வு - தல் | ovvu- 5 v.intr. <>id. 1. To be like; to be similar; ஒத்திருத்தல். 2. To be congruous, consistent; |
| ஒவ்வுறு - தல் | ovvuṟu- v. intr. <>ஒவ்வு-+உறு-. To agree, to be like, equal; ஒப்பாதல். இதற்கொவ்வுறாதால். (பாரத.). |
| ஒவ்வொன்று | ovvoṉṟu pron. <>ஒன்று+ஒன்று. 1. Each; ஒன்றுவீதம். 2. One, here and there; |
| ஒவ்வோக்குழி | ovvō-k-kuḻi n. Redupl. of ஓ1+. Depression made in the earth by repeatedly tracing with the finger in the same groove the outline of the letter ஓ when children begin to learn the letters of the alphabet; நிலத்திலே விரலால் பாலர் எழுதும் அரிக்குழி. பகவத் விஷயத்தில் ஒவ்வோக்குழியிடாதேயிருக்கிற உங்களுக்கு (ஈடு, 5, 6, 2). |
| ஒவ்வோன் | ovvōṉ n. <>ஒவ்வான். One who has no equal; ஒப்பில்லாதவன். யாருமொவ்வோன் . . . உணர்தலுற்றான் (பாரத. பதினெட். 111). |
| ஒழி 1 - தல் | oḻi- 4 v. intr. 1. To cease, desist, stop; to discontinue; to be finished, ended; தீர்தல். பொய்க்கோலஞ் செய்ய வொழியுமே (நாலடி, 43). 2. To decline; to become extinct, annihilate; 3. To die, perish; 4. To remain; 5. To be settled, decided; 6. To be excepted; 7. To leave off, forbear; 8. To be at leisure; 9. To be empty, unoccupied; - aux. Auxiliary verb; |
| ஒழி 2 - த்தல் | oḻi- 11 v. tr. Caus. of ஒழி1-. [M. oḻi.] 1. To bring to an end, finish; முடித்தல். எல்லா வேலையையும் ஒழித்துக்கொண்டு வா. 2. To ruin, destroy, kill; 3. To put away, cast off, expel, dismiss, exclude; 4. To except, avoid, omit; 5. To clear out, empty, vacate; |
| ஒழிகடை | oḻi-kaṭai n. <>ஒழி1-+. State of being almost exhausted as stores, almost ended, nearly over; பெரும்பான்மை முடிந்த நிலை. (W.) |
| ஒழிச்சு - தல் | oḻiccu- 5 v. tr. Caus. of ஒழி1-. 1. To put an end to; to banish; போக்குதல். பல்பிறவியை யொழிச்சுவன் (பதினொ. ஆளு. திருக்கலம். 35.) 2. To vacate; 3. To destroy; |
| ஒழித்துக்காட்டணி | oḻittu-k-kāṭṭaṇi n. <>ஒழி2-+. (Rhet.) Figure of speech which consists in denying the existence of a thing in a particular place by showing its existence elsewhere; ஒருபொருளை ஓரிடத்தில்லையென மறுத்து மற்றோரிடத்துண்டென்று நியமித்துக்காட்டும் அணி. (அணியி. 53.) |
| ஒழிந்தவேளை | oḻinta-vēḷai n. <>ஒழி1-+. Leisure time; வேலையில்லாத சமயம். |
| ஒழிந்தார் | oḻintār n. <>id. Others, the rest; மற்றவர். ஒழிந்தாரைப் போற்றி (நாலடி, 49). |
| ஒழிப்பணி | oḻippaṇi n. <>ஒழிப்பு+அணி. (Rhet.) See அவநுதி. (அணியி. 11.) . |
| ஒழிப்பு | oḻippu n. <>ஒழி2-. Exclusion, dismissal, expulsion; விலக்கு. |
| ஒழிபியல் | oḻipiyal n. <>ஒழிபு+இயல். Residuary chapter of a work giving various items of information not mentioned in the several preceding chapters; நூலின்கண் முன்னியல்களிற்சொல்லா தொழிந்தவற்றைக் கூறுமியல். (நம்பியகப்.) |
| ஒழிபு | oḻipu n. <>ஒழி1-. 1. Remainder; எச்சம். 2. (Log.) Law of deduction by elimination; |
| ஒழிபொருள் | oḻi-poruḷ n. <>id.+. Anything defiled by contact with the mouth; எச்சில். (திவா.) |
| ஒழிய | oḻiya adv.<>id. Except, save; தவிர. பாடியென் . . . எந்தை பெம்மானை யொழியவே (திவ். திருவாய். 3, 9, 2). |
| ஒழியாவிளக்கம் | oḻiyā-viḷakkam n. <>id.+. See ஒழியாவிளக்கு. மொழிபெயர் தேத்தோ ரொழி யாவிளக்கமும் (சிலப். 6, 143). |
| ஒழியாவிளக்கு | oḻiyā-viḷakku n. <>id.+. Lamp that burns throughout the night; விடிவிளக்கு. (சிலப். 6, 143.) |
| ஒழியிசை | oḻi-y-icai n. <>id.+. That which suggests an implied meaning; ஒழிந்த பொருள்தருஞ் சொற்களைத் தருவது. (நன். 423.) |
| ஒழிவிலொடுக்கம் | oḻivil-oṭukkam n. <>ஒழிவு+இல்2+. A šaiva treatise by Kaṇṇuṭaiyavaḷḷalār, about 18th c.; கண்ணுடைய வள்ளலார் செய்த ஒரு சைவநூல். |
| ஒழிவு | oḻivu n. <>ஒழி1-. 1. Ceasing, forsaking; ஒழிகை. 2. End, termination; 3. Final dissolution of the world; 4. Want, defect, deficiency; 5. (Log.) Law of deduction by elimination; 6. Residue; 7. Leisure; 8. Non-attachment; |
