Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஒரோவொன்று | orō-v-oṉṟu n. <>id.+. One in each; ஒவ்வொன்று. ஒரோவொன்றே அறமுந் துறக்கமும் பொருளும் பயத்தற்சிறப்பு நோக்கி (தொல். பொ. 25, உரை). |
| ஒல் | ol n. Limit, end; முடிவிடம். (திவா.) |
| ஒல்கு - தல் | olku- 5 v. intr. 1. To grow weak, or faint; to pine; to be disheartened; தளர்தல். ஒல்களுள்ளமொடு (புறநா. 135, 8). 2. To become reduced, thin, slender; to be emaciated; 3. To become soft, mellow; 4. To tremble from weakness or from being over-burdened; to bend with trembling; 5. To shrink; to flinch; 6. To shake, move; 7. To wave, move to a side; 8. To incline; 9. To walk, tread; 10. To become bent; 11. To be impoverished; 12. To come in contact; 13. To be self-controlled; 14. To be injured, spoilt; - tr. To receive, meet; |
| ஒல்லட்டை | ollaṭṭai n. <>ஒல்கு-. Thin, slender person; one reduced by disease or age; ஒல்லியானவன். (J.) |
| ஒல்லல் | ollal n. <>ஒல்லு-. 1. Being able, possible; இயலுகை. (திவா.) 2. Reconciling after a love quarrel; |
| ஒல்லாங்கு | ollāṅku adv. <>id.+. Appropriately, in the proper way, befittingly; பொருந்தும்வழியாதல். ஒல்லாங்கியாமிரப்பவும் (கலித். 3, 11). |
| ஒல்லாடி | ollāṭi n. <>ஒல்கு-. See ஒல்லட்டை. (J.) . |
| ஒல்லாதவர் | ollātavar n. <>ஒல்லு-+ஆ neg.+. Enemies; பகைவர். ஒல்லாதவரிற் பொருதேசில வும்பர்வீழ (கந்தபு. திருவிளை. 60). |
| ஒல்லாமை | ollāmai n. <>id.+. 1. Inability; இயலாமை; 2. Contempt; 3. Absence of desire; |
| ஒல்லார் | ollār n. <>id.+. Foes, enemies; பகைவர். ஒல்லார் நாண (தொல். பொ. 76). |
| ஒல்லி | olli n. <>ஒல்கு-. 1. Thin person; மெலிந்தவன். 2. Thinness, slenderness; 3. See ஒல்லித்தேங்காய். (J.) 4. Broom; |
| ஒல்லிக்காய்ச்சி | olli-k-kāycci n. <>ஒல்லி+. Coconut-palm that yields blighted fruit; உள்ளீடில்லாத காயுள்ள தென்னை. (J.) |
| ஒல்லித்தேங்காய் | olli-t-tēṅkāy n. <>id.+. Blighted, empty coconut, used as a buoy in swimming; உள்ளீடில்லாத தேங்காய். (J.) |
| ஒல்லிமேய் - தல் | olli-mēy- v. intr. <>id.+. To be empty, be blighted, as coconuts; தேங்காயில் உட்பசையறுதல். ஒல்லிமேய்ந்த தேங்காய். (J.) |
| ஒல்லியன் | olliyaṉ n. <>id. Thin man; மெல்லியவன். |
| ஒல்லு - தல் | ollu- prob 5 v [M. ollu.] intr. 1. To be able, possible, practicable; இயலுதல். ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே (குறள், 673). 2. To agree; 3. To be fit, suitable; 4. To combine, unite, join; 5. To occur, happen, take place; - tr. 1. To brook, tolerate; 2. To mend, as a net; to braid, as a basket; |
| ஒல்லுநர் | ollunar n. <>ஒல்லு-. Friends; associates; மித்திரர். (திவா.) |
| ஒல்லென | ol-l-eṉa adv. <>ஒல் (int.) 1. Quickly; விரைய. வல்வினை . .. ஒல்லெனவொப்ப (ஞானா.1, 33). 2. Publicly, openly; |
| ஒல்லெனல் | ol-l-eṉal n. Onom. Sounding in a certain way; ஒலிக்குறிப்பு. ஆயரொல்லென வொலிப்ப (சீவக. 438). |
| ஒல்லே | ollē adv. <>ஒல் (int.) Quickly; விரைவாக. நங்கை யென்னொ டுரையாய் நனியொல்லே (சீவக. 898). |
| ஒல்லை 1 | ollai adv. <>id. 1. Rapidly, quickly; வேகமாய். (சூடா.) 2. Promptly; 3. In a little while; |
| ஒல்லை 2 | ollai n. <>தொல்லை. Antiquity, oldness; பழமை. ஒல்லைபோற் கருங்காவியென (இரகு. இரகு. 3). |
