Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஒருவர்க்கொருவர் | oruvarkkoruvar adj. <>ஒருவர்க்கு + ஒருவர். Matual, reciprocal; பரஸ்பரம். ஊனுமுயிரு மனையா ரொருவர்க்கொருவர் (கம்பரா. வரைக். 69). |
| ஒருவழித்தணத்தல் | oru-vaḻi-t-taṇattal n. <>ஒரு2+. (Akap.) The lover's temporary absence from the place of his lady-love to avoid all tittle-tattle about him; அலரடங்குதற்பொருட்டுத் தலைமகன் சிலநாள் வேற்றிடத்துச்சென்று உறையும் அகத்துறை. (திருக்கோ. 181, அவ.) |
| ஒருவழிப்படு - தல் | oru-vaḻi-p-paṭu- v. intr. <>id.+. 1. To concentrate; ஒருமுகப்படுதல். படிப்பில் மனம் ஒருவழிப்படவேண்டும். 2. To be united; |
| ஒருவழியுறுப்பு | oru-vaḻi-y-uṟuppu n. <>id.+. A portion of the whole; ஏகதேசம். (தொல். சொல். 81.) |
| ஒருவன் | oruvaṉ n. <>id. [T. orudu, M. oruvan.] 1. A person of the male sex, man or demon; ஒருத்தன். குடிசெய்வ லென்னு மொருவதற்கு (குறள், 1023). 2. Incomparable one; |
| ஒருவாக்காக | oru-vākkāka adv. <>id.+. 1. In a peculiar way; ஒருமாதிரி. 2. In the same manner; 3. Once for all; 4. All together; |
| ஒருவாக்கு | oru-vākku n. <>id.+. 1. One word, truth, certainty; உறுதிமொழி. 2. United voice; |
| ஒருவாமை | oruvāmai n. <>ஒருவு-+ஆ neg. 1. Unchangeableness; பிறழாமை. ஒருவாமை வைத்தற்கு ஒள்ளியான் ஒருபுலவனால் உரைக்கப்படுவது (இறை. 1, 12). 2. Stability; |
| ஒருவாய்க்கோதை | oru-vāy-k-kōtai n. <>ஒரு2+. Drum with one face in the shape of a marakkāl; ஒருகட்பறை. மரக்காலன்ன வொருவாய்க்கோதை (கல்லா. 8, 27). |
| ஒருவாய்ப்படு - தல் | oru-vāy-p-paṭu- v. intr. <>id.+. To be spoken about as if with one voice; ஏககண்டமாகப் பேசப்படுதல். |
| ஒருவாற்றான் | oru-v-āṟṟāṉ adv. <>id.+ ஆறு1. See ஒருவாறு (1, 2.) . |
| ஒருவாறு | oru-v-āṟu adv. <>id. +id. 1. In a way; somehow; ஒருவிதமாக. 2. To a certain extent, in some degree; 3. Entirely, altogether; |
| ஒருவிதமா - தல் | oru-vitam-ā- v. intr. <>id.+. 1. To be peculiar; நூதனவகையாதல் 2. To be of a different attitude; 3. To be indifferent; |
| ஒருவு 1 - தல் | oruvu- 5 v. tr. 1. To abandon, renounce; விடுதல். ஒருவுக வொப்பிலார் நட்பு (குறள், 800). 2. To cross, pass over; 3. To resemble, equal; 4. To escape; - intr. To be excepted; |
| ஒருவு 2 | oruvu n. <>ஒருவு- Leaving, separation, renunciation; நீங்குகை. ஒருவில்வாழ்க்கை கொண்டிடும் (திருவானைக். கெசாரணி. 3). |
| ஒருவு 3 | oruvu n. cf. ஒரு1. Sheep; ஆடு.(பிங்.) . |
| ஒருவேளை | oru-vēḷai adv. <>ஒரு2+. 1. Once; ஒருமுறை. 2. Perhaps; |
| ஒரூஉ | orūu n. <>ஒருவு-. 1. See ஒருவு (தொல். பொ. 90இ உரை.) . 2. See ஒரூஉத்தொடை. |
| ஒரூஉத்தொடை | orūu-t-toṭai n. <>ஒரூஉ+. (Pros.) A concatenation by mōṉai, etc. in a line of four feet, of the first and the fourth feet but not of the second and the third; அளவடியுள் நடுவிருசீர்களொழிய முதற்சீர்க்கண்ணும் நான் காஞ்சீர்க்கண்ணும் மோனைமுதலாயின வரத் தொடுப்பது. (இலக். வி. 723.) |
| ஒரூஉதல் | orūutal n. <>ஒருவு- See ஒருவு2. (தொல். பொ. 90, உரை.) . |
| ஒரூஉவண்ணம் | orūu-vaṇṇam n. <>ஒரூஉ+. (Pros.) A rhythm of verse effected by composing it in the most straightforward order of construction, so that its flow is like the flow of a river; யாற்றொழுக்காகப் பொருள்கொண்டு செல்லுஞ் சந்தம். (தொல். பொ. 539.) |
| ஒரே | orē adj. <>ஒன்று+. Only, one; ஒன்றேயான. அவனுக்கு ஒரேகுமாரன். Colloq. |
| ஒரோவழி | orō-vaḻi adv. <>id.+. Sometimes, in some places; சிறுபான்மையாய். யாதானும் ஒரோவழி ஒருசாரார் மாட்டு . . . நிகழும் ஒழுக்கத்தினை (தொல். பொ. 3, உரை). |
| ஒரோவொருவர் | orō-v-oruvar n. <>id.+. Each person, individual; தனித்தனி ஒவ்வொருவர். ஒரோ வொருவர்க் கொல்காதோ ரொன்று படும் (சிறுபஞ். 27). |
