Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஒருபடித்தாய் | oru-paṭittāy adv. <>id.+. 1. In the same way; ஒரேவிதமாய். உள்ளும் புறம்பு மொருபடித்தாய் (அருட்பா, i, நெஞ்சறி. 621). 2. Passably, tolerably; |
| ஒருபது | oru-patu n. <>id.+. பத்து. Ten; பத்து. தாய்தந்தைக் கொருபதாகு நாளுளதாம் (கூர்மபு.உத். 22, 5). |
| ஒருபாட்டம் | oru-pāṭṭam n. <>id.+. Heavy downpour of rain; ஒருபாறல்மழை. ஒரு பாட்டம் மழைவிழுந்தாற்போலே (ஈடு, 4,5,2). |
| ஒருபாவொருபஃது | oru-pā-v-oru-paḵtu n. <>id.+. Poem of ten stanzas composed in any one of the three meters, akaval, veṇpā, or kalittuṟai; அகவல் வெண்பா கலித்துறை என்பவற்றுள் ஏதேனும் ஒருபாவிற் பத்துப்பாடல்களால் அமைக்கப்பட்ட ஒரு பிரபந்தம். (இலக்.வி.823.) |
| ஒருபான் | oru-pāṉ n. <>id.+. பத்து. See ஒருபது. (தொல்.எழுத். 199, உரை.) . |
| ஒருபிடி | oru-piṭi n. <>id.+. 1. A handful; கைப்பிடியளவு. முடிவிலொரு பிடிசாம்பராய் (பட்டினத் திருப்பா. திருத்தில்லை. 7.) 2. Firm determination, unshakeable resolve; 3. Firm trust or depedence; 4. Stubbornness, obstinacy; |
| ஒருபுடை | oru-puṭai <>id.+.adj. Partial, imperfect; ஏகதேசம். ஒருபுடையுவமை.- adv. On one side; ஒரு பக்கமாய். ஒருபுடை பாம்புகொளினும் (நாலடி, 148). |
| ஒருபுடையுவமை | oru-puṭai-y-uvamai n. <>ஒருபுடை+. Simile in which comparison applies only partially and not fully, dist. fr. முற்றுவமை; முழுவதும் ஒப்பாகாமல் சில தன்மையில்மாத்திரம் ஒத்திருக்கும் உவமை. ஒருபுடையுவமையாதலன்றி முற்றுவமையாதல் செல்லாமையானும் (சி.போ.சிற். 1, 2. 3). |
| ஒருபுடையொப்புமை | oru-puṭai-y-oppumai n. <>id.+. See ஒருபுடையுவமை. . |
| ஒருபூ | oru-pū n. <>ஒரு2+. Single crop; ஒருபோகம். (S.I.I. ii, 114.) |
| ஒருபொருட்கிளவி | oru-poruṭ-kiḷavi n. <>id.+. Synonym; பரியாயச்சொல். (தொல்.சொல். 1, சேனா.) |
| ஒருபொருட்பன்மொழி | oru-poruṭ-paṉmoḻi n. <>id.+. 1. Different words connoting the same thing; ஒருபொருளைத்தரும் பலசொற்கள். 2. Tautology for greater effect and emphasis; |
| ஒருபொருள் | oru-poruḷ n. <>id.+. God, the One Reality; கடவுள். (W.) |
| ஒருபொழுது | oru-poḻutu n. <>id.+. See ஒருசந்தி. . |
| ஒருபோக்கன் | oru-pōkkaṉ n. <>id.+. Man whose behaviour is of a singular of peculiear nature; வேறுபட்ட நடையுள்ளவன். |
| ஒருபோக்காய்ப்போ - தல் | oru-pōkkāy-p-pō- v. intr. <>id.+. To be gone once and for ever never to return, an expression used in anger or cursing; திரும்பி வாராதுபோதல். |
| ஒருபோக்கு | oru-pōkku n. <>id.+. 1. One kind; ஒருமாதிரி. 2. The same manner; 3. Peculiar, singular conduct; |
| ஒருபோகி | oru-pōki n. <>id.+ போ-. The ever constant entity; that which remains the same without variation, as time divested of all phenomena, like day, night, etc.; ஏகவிஷயம். காலத்தையடைய ஒருபோகியாக்கி (ஈடு, 9, 3, 10). |
| ஒருபோகு | oru-pōku n. <>id.+. 1. Land of uniform character, whether in regard to level or soil; ஒருபடித்தான நிலம். (தொல். பொ. 460, உரை.) 2. A species of ottāḻicai-k-kali; |
| ஒருபோது | oru-pōtu n. <>id.+. See ஒரு பொழுது. . |
| ஒருமட்டம் | oru-maṭṭam n. <>id.+. See ஒருமட்டு. . |
| ஒருமட்டு | oru-maṭṭu <>id.+.n. Equality in size or measure; - adv. In a way; to some extent; ஒத்த அளவு. ஒருவாறு. காரியம் ஒருமட்டுமுடிந்தது. |
| ஒருமடைசெய் - தல் | oru-maṭai-cey- v. tr. <>id.+. <>id.+. Lit., to bring many streams under one sluice, to conceive the various aspects of a thing together; ஏகமுகமாக்குதல். பகவத்குணங்களை ஒருமடைசெய்து புஜிக்கை (திவ். திருப்பா. 12, வ்யா. 130). |
| ஒருமனப்படு - தல் | oru-maṉa-p-paṭu- v. intr. <>id.+. 1. To be unanimous; ஏகமனமாதல். 2. To concentrate the mind intensely upon an object; to be deeply engaged in the pursuit of one object; |
| ஒருமனப்பாடு | oru-maṉa-p-pāṭu n. <>ஒரு மனப்படு-+. 1. Unanimity, concord; மனவிணக்கம். 2. Close or undivided application to an object; 3. Mental restraint; |
| ஒருமா | oru-mā n. <>ஒரு2+. The fraction 1/20; இருபதில் ஒருகூறாகிய பின்ன வெண். (ப). |
