Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஒருமாதிரி | oru-mātiri <>id.+. n. A kind; - adj. Singular, peculiar; ஒருவிதம். குணம்வேறுபட்ட. அவன் ஒருமாதிரி மனிதன். |
| ஒருமாரை | orumārai n. <>ஒருமா + அரை. Mā and a half=1/20+1/40=3/40, ஒருமாவும் அரைமா வுஞ்சேர்ந்த ஒரு கீழ்வாயிலக்கம். (தொல். எழுத். 171, உரை.) |
| ஒருமி - த்தல் | orumi- 11 v. intr. <>ஒரு-மை. [M. orumi.] To be in unison, to unite; ஒன்றுசேர்தல். காதலிருவர் கருத்தொருமித்து (பெருந்தொ. 221). |
| ஒருமிக்க | orumikka adv. <>ஒருமி-. Together; ஒருசேர. மக்க ளொருமிக்கத் தொடர்ந்தும் (திருப்பு. 49). |
| ஒருமிடறா - தல் | oru-miṭaṟā- v. intr. <>ஒரு2+மிடறு+. 1. To join in one voice; ஏககண்டமாதல். இப்படியெல்லாரும் ஒருமிடறாயேத்தினாலும் (ஈடு, 4, 3, 10). 2. To be of one mind; |
| ஒருமிடறு | oru-miṭaṟu n. <>id.+. One draught of liquid; ஒருவாய்க்குள் அடங்கும்படி பருகுமளவு. இன்னும் ஒருமிடறு குடி. (J.) |
| ஒருமிப்பு | orumippu n. <>ஒருமி-. 1. Union, harmony; ஒற்றுமைப்படுகை. 2. Close or undivided attention to an object; |
| ஒருமுகம் | oru-mukam n. <>ஒரு2+. 1. The same direction; நேர்வழி. ஒருமுகமாய்ப் போ. 2. Union, harmony. 3. The same party; |
| ஒருமுகமாய்ப்பேசு - தல் | oru-mukamāy-p-pēcu- v. intr. <>ஒருமுகம்+. To speak with one voice; ஏகோபித்துப்பேசுதல். (W.) |
| ஒருமுகவெழினி | oru-muka-v-eḻiṉi n. <>id.+ எழினி. A kind of stage curtain; ஒரு வகைத் திரை. (சிலப். 3, 109.) |
| ஒருமுற்றிரட்டை | oru-muṟṟiraṭṭai n. <>ஒரு2+முற்று+இரட்டை. Verse in which all the feet in one line have the same etukai; ஓரடி முற்றெதுகையாய் வருவது. (யாப். வி. 51.) |
| ஒருமை | orumai n. <>ஒன்று. [T. Orima, M. oruma.] 1. Oneness, union; ஒற்றுமை. (பிங்.) 2. Singleness, loneliness; 3. Unchangeableness; 4. Peerlessness, uniqueness; 5. (Gram.) Singular number; 6. Concentration of mind; 7. Knowledge of God; 8. Decision, determination; 9. Final emancipation; 10. Truthfulness, veracity; 11. One birth in the round of births; |
| ஒருமைப்படு - தல் | orumai-p-paṭu- v. intr. <>ஒருமை+. 1. To become united; ஒற்றுமைப்படுதல். 2. To become concentracted; |
| ஒருமைப்பாடு | orumai-p-pāṭu n. <>id.+. Being united; ஒற்றுமைப்படுகை. |
| ஒருமைபன்மைமயக்கம் | orumai-paṉmai-mayakkam n. <>id.+. (Gram.) Use of the singular for the plural, or vice versa, as sanctioned by usage; வாக்கியத்துள் ஒருமைபன்மைகள் மயங்கிவழங்குகை. (சீவக. 2210, உரை.) |
| ஒருமைமகளிர் | orumai-makaḷir n. <>id.+. Chaste, faithful women; பிற ஆடவர்பாற் செல்லாதமனமுடைய மாதர். (குறள், 974.) |
| ஒருமொழி | oru-moḻi n. <>ஒரு2+. 1. Royal command, the authoritative word of a king; ஆணை. ஒருமொழி வைத்துலகாண்ட சேரலாதற்கு (சிலப். வாழ்த்துக். உரைப்பாட்டு). 2. (Gram.) Simple word, dist. fr. |
| ஒருலாகை | oru-lākai n. <>id.+ T. lāgu. One sort; ஒருவகை. (W.) |
| ஒருவண்ணம் | oru-vaṇṇam adv. <>id.+. In some manner, to a certain extent, in some degree; ஒருவாறு. ஒருவண்ணந் துயாநீங்கி (கம்பரா. கையடை. 12). |
| ஒருவந்தம் | oru-v-antam n. <>id.+anta. 1. certainty, indubitableness; நிச்சயம். ஒருவந்த மொல்லைக் கெடும் (குறள், 563). 2. Firm footing, stability; 3. Connection, relation; 4. Place of retirement, solitary or lonely place; |
| ஒருவயிற்றோர் | oru-vayiṟṟōr n. <>id.+. Children of the same parents; சகோதரர். ஒரு வயிற்றோர் செய்கடனும் (கந்தபு. சிங்கமு. 471). |
| ஒருவர் | oruvar n. <>ஒன்று. A person, male or female, an honorific term; ஒருவன் அல்லது ஒருத்தியைச் சிறப்புப்பற்றிப் பன்மையில் வழங்கும் பெயர். (நன். 289.) |
