Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஒருதலைக்காமம் | oru-talai-k-kāmam n. <>id.+. (Akap.) Onesided love, unreciprocated love; ஒருபக்கமான காதல். கைக்கிளை யுடையதொருதலைக் காமம் (நம்பியகப். 3). |
| ஒருதலைதுணிதல் | oru-talai-tuṇital n. <>id.+. (Gram.) Decision, accepting one or the other of two contrary opinions or views, one of 32 utti, q.v.; ஒன்றுக்கொன்று மாறுபாடான இரண்டு கொள்கைகளில் ஒன்றை ஏற்றலாகிய உத்தி. (நன். 14.) |
| ஒருதலைநியாயம் | oru-talai-niyāyam n. <>id.+. See ஒருதலைவழக்கு. . |
| ஒருதலைப்படு - தல் | oru-talai-p-paṭu- v. intr. <>id.+. To come to a conclusion; ஒரு முடிவுபெறுதல். எத்துணை யுரைப்பினு மொருதலைப்படாது (இறை. 1, 7). |
| ஒருதலையுள்ளுதல் | oru-talai-y-uḷḷutal n. <>id.+. (Akap.) Constant thought of the lover, a mood in love, one of ten kinds of avattai, q.v.; அவத்தைபத்தனுள் ஒன்றாகிய இடைவிடா நினைவு. (நம்பியகப். 36, உரை.) |
| ஒருதலைவழக்கு | oru-talai-vaḻakku n. <>id.+. Partial judgment, onesided or biassed description or statement; leaning to one side or party; பட்சபாதமான தீர்ப்பு. |
| ஒருதன்மை | oru-taṉmai n. <>id.+. 1. Being of one and the same kind; ஒரேவிதம். 2. Incomparableness; 3. Unchangeableness; |
| ஒருதனி | oru-taṉi id.+. n. Peerlessness, uniqueness; - adv. Quite alone, in absolute solitude; ஒப்பில்லாத தனி. (சீவக. 280, உரை.) தன்னந்தனி. |
| ஒருதாரை | oru-tārai n. <>id.+dhārā. 1. One form, one method; ஒரு ரீதி. அந்த நூல் ஒருதாரையாய் நடந்து வருகிறது. Loc. 2. Edge in only one side; 3. Uninterrupted flow of water; |
| ஒருதிறம்பற்று - தல் | oru-tiṟam-paṟṟu- v. intr. <>id.+. To range oneself on oneside; ஒரு பட்சமாக இருத்தல். அறங்கூ றவையத் துரைநூல்கோடி யொருதிறம் பற்றினும் (சிலப். 5, 136). |
| ஒருதுவலி | orutuvali n. An ancient measure; பண்டைக்காலத்துவழங்கிய ஓர் அளவுப்பெயர். (தொல். எழுத். 170, உரை.) |
| ஒருநாயகம் | oru-nāyakam n. <>ஒரு2+. Universal dominion; ஒரே ஆட்சி. ஒருநாயகமாயோட வுலகுட னாண்டவர் (திவ். திருவய். 4, 1, 1). |
| ஒருநாளைக்கொருநாள் | oru-nāḷaikkoru-nāḷ adv. <>id.+. Day by day; நாள்செல்லச்செல்ல. |
| ஒருநெல்லுப்பெருவெள்ளை | oru-nellu-p-peru-veḷḷai n. A kind of rice; ஒருவகை நெல். (W.) |
| ஒருநெறிப்படு - தல் | oru-neṟi-p-paṭu- v. intr. <>ஒரு2+. To stand together; to be placed together; ஒருவழிப்படுதல். (தொல். பொ. 510.) |
| ஒருநேரம் | oru-nēram n. <>id.+. 1. Unseasonable time; அகாலம். இவன் இராத்திரி ஒருநேரத்தில் என் வீட்டுக்குவந்தான். (W.) 2. Half day; |
| ஒருப்படு - தல் | oru-p-paṭu- v. intr. <>id.+. 1. To become one, unite, coalesce; ஒருதன்மையாதல். (சி. சி. 2, 5, மறைஞா.) 2. To consent, agree; 3. To have the mind fixed on one object; to be abstracted from outward objects; 4. To venture, dare; 5. To attempt, try; 6. To come together; 7. To appear; |
| ஒருப்படுத்து - தல் | oru-p-paṭuttu- v. tr. <>id.+. 1. To bring together, reconcile; ஒன்று கூட்டுதல். 2. To bid adieu; 3. To finish, settle; 4. To bring to an agreement, cause to consent; |
| ஒருப்பாடு | oru-p-pāṭu n. <>ஒருப்படு-. 1. Endeavour, effort; முயற்சி. உங்களொருப்பாடு கண்டேனுக்கு (ஈடு, 6, 1, 8). 2. Consent; 3. Unanimity, concord; 4. Fixing the mind on a single aim, concentration of mind; 5. Resoluteness, constancy; |
| ஒருபடம் | oru-paṭam n. <>ஒரு2+ paṭa. Curtain; இடுதிரை. (திவா.) |
| ஒருபடி | oru-paṭi <>id.+. n. 1. A kind; ஒருவகை. 2. The same manner; - adv. Tolerably; in some degree, to some extent; with some difficulty; |
