Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஒருசாராசிரியர் | oru-cār-āciriyar n. <>ஒருசார்+. Writers belonging to one particular school of thought; ஆசிரியருள் ஒரு கொள்கையினர். |
| ஒருசாரார் | oru-cārār n. <>id.+. 1. Persons on one side; those belonging to one party; ஒருபக்கத்தவர். அஞ்சின ரார்த்தா ரொருசாரார் (காரிகை, செய். 6, உரை). 2. Some; |
| ஒருசாலுழு - தல் | oru-cāl-uḻu- v. tr. <>ஒரு2+. To turn once with the plough; ஒருமுறை உழுதல். |
| ஒருசாலைமாணாக்கர் | oru-cālai-māṇākkar n. <>id.+. Pupils of the same school, schoolmates; ஒருபள்ளியிற்படித்த மாணாக்கர். (தொல். பொ. 666, உரை, பக். 653.) |
| ஒருசிம்புப்புகையிலை | oru-cimpu-p-pukai-y-ilai n. <>id.+. Small bit of tobacco; single leaf of tobacco; புகையிலை நறுக்கு. (J.) |
| ஒருசிறிது | oru-ciṟitu n. <>id.+. A little; அற்பம். உய்த்துணர்ந்திடு நீரரே யொருசிறி துணர்வார் (கந்தபு. சூரன்மைச். 129). |
| ஒருசிறை | oru-ciṟai n. <>id.+. 1. One side; ஒருபக்கம். கோயி லொருசிறைத் தங்கி (பொருந. 90). 2. Separate place; 3. One part or portion; |
| ஒருசிறைநிலை | oru-ciṟai-nilai n. <>id.+. Style of verse whose compostion follows the sequence of the events narrated; சொல்லப்பட்ட பொருள் ஒருவழிநிற்கப் பாடலமைந்துள்ள முறை. (இறை. 56, உரை, 194.) |
| ஒருசீரானவன் | oru-cīr-āṉavaṉ n. <>id.+. One who maintains a uniform character, he who has moderation of temper; ஒரேதன்மையாக இருப்பவன். (W.) |
| ஒருசேர | oru-cēra adv. <>id.+. Entirely, completely; ஒருமிக்க. |
| ஒருசொல் | oru-col n. <>id.+. 1. Word of assurance; உறுதிச்சொல். அவர்சொல்லிய சொல்லொரு சொல்லன்றோ (கம்பரா. குகப். 15). 2. Expression which while consisting of two or more words connotes but a single idea; |
| ஒருசொல்வாசகன் | oru-col-vācakaṉ n. <>id.+. Man, true to his word; man who keeps his word; சொற் பிறழாதவன். (W.) |
| ஒருசொல்விழுக்காடு | oru-col-viḻukkāṭu n. <>id.+. Superfluous, expletive word in a sentence; யாதொருபொருளுமின்றி வாக்கியத்திடை வழங்கும் சொல். (சீவக. 1886, உரை.) |
| ஒருசொற்பல்பொருள் | oru-coṟ-pal-poruḷ n. <>id.+. Different meanings of the same word; ஒரு பதத்துக்குரிய பல பொருள்கள். (பிங்.) |
| ஒருசொன்னீர்மை | oru-coṉṉīrmai n. <>id.+. Nature of the compound word which expresses a single idea; சொற்கள் இணைந்து ஒருபொருளேதருந் தன்மை. (புறநா. 206, உரை.) |
| ஒருஞார் | oruār n. An ancient measure; பண்டைக்காலத்து வழங்கிய ஓர் அளவுப்பெயர். (தொல். எழுத். 170, உரை.) |
| ஒருத்தல் | oruttal n. Male of certain animals, viz., புல்வாய், புலி, உழை, மரை, கவரி, கராம், யானை, பன்றி, எருமை (தொல். பொ. 590, 591, 592) கரடி (சூடா.); ஒருசார்விலங்கின் ஆண்பெயர். |
| ஒருத்தலை | oru-t-talai n. <>ஒரு2+. One side; ஒருபக்கம். ஒருத்தலைப்பரத் தொருத்தலைப் பங்கு வினூர்தி (கம்பரா. அயோத். மந். 66). |
| ஒருத்தலைநோவு | oru-t-talai-nōvu n. <>id.+. See ஒருத்தலைவலி. ஒருத்தலை நோவா முடம்பு சுரத்தால் வருத்தமாம் (பணவிடு. 248). |
| ஒருத்தலையிடி | oru-t-talai-y-iṭi n. <>id.+. See ஒருத்தலைவலி. . |
| ஒருத்தலைவலி | oru-t-talai-vali n. <>id. +. Headache on one side only, megrim ஒருபக்கமான தலைவலி |
| ஒருத்தன் | oruttaṉ n. <>ஒன்று [Kur. ort= one person.] 1. A certain man; ஒருவன். வடமொழியிலே வல்லா னொருத்தன்வரவும் (தாயு. சித்தர் கண. 10). 2. A unique Being; an incomparable One; |
| ஒருத்தி | orutti n. <>id. [T. orti.] Fem. of ஒருத்தன். A woman; ஒரு பெண். ஒருத்திமகனாய்ப் பிறந்து (திவ். திருப்பா. 25). |
| ஒருத்து | oruttu n. <>id. Concentration of mind; மனவொருமைப்பாடு. ஒன்று சொல்லியொருத்தினி னிற்கிலாத வோரைவர் (திவ். திருவாய். 7, 1, 7). |
| ஒருதந்தன் | oru-tantaṉ n. <>ஒரு2+. Gaṇēša, who has only one tusk; ஒற்றைக்கொம்பையுடைய விநாயகர். |
| ஒருதரம் | oru-taram n. <>id. + 1. Once; ஒருதடவை. 2. One and the same kind; |
| ஒருதலை | oru-talai n. <>id.+. 1. Onesidedness; ஒருசார்பு. ஒருதலையா னின்னாது காமம் (குறள், 1196). 2. Positiveness, certainty; |
