Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஒயின் | oyiṉ n. <>E. Wine; திராட்சரசம். Mod. |
| ஒயின்மரம் | oyiṉmaram n. Pillory, stocks; தொழுமரம். ஒயின்மரத்திலே மாட்டினான். (W.) |
| ஒர்லோஸ்கட்டை | orlōs-kaṭṭai n. [Fr. horooge, Port. relogio.] Clock, timepiece; கெடியாரம். Fr. In. |
| ஒரட்டுக்கை | oraṭṭu-k-kai n. prob. ஓர்+அட்டம்+. Left hand; இடக்கை. Loc. |
| ஒரணை | ōraṇai n. <>ஒர்+இணை. Pair; இரட்டை. திருக்கைக்காறை ஒரணை (S.I.I. ii, 226). |
| ஒராங்கு | orāṅku adv. <>ஒன்று+ஆங்கு. See ஓராங்கு. மாந்த ரொராங்குக் கைசுமந்தலறும் பூசல் (பதிற்றுப். 31, 2). |
| ஒரால் | orāl n. <>ஒருவு-. Withdrawing, receding; நீக்குகை. வேந்தர் தாரழிந் தொராலின் (பதிற்றுப். 23, 17). |
| ஒரானொரு | orāṉ-oṟu adj. <>ஒரு2+. A certain, some one; ஏதோ ஒன்று. ஒரானொருநாளில் (குருபரம். 217, பன்னீ.). |
| ஒரி - த்தல் | ori- 11 v. intr. prob. ஒருமி-. To be united, in harmony; ஒற்றுமையாயிருத்தல். (யாழ். அக.) |
| ஒரு 1 | oru n. cf. ruru. Sheep; ஆடு. (பிங்.) |
| ஒரு 2 | oru adj. <>ஒன்று. [K. or, M. oru.] (Used before a consonant.) A or an; one; unique; special. ஒரு மகன். |
| ஒரு 3 | oru n. Sage-leaved alangium. See அழிஞ்சில். (L.) அழிஞ்சில். (L.) |
| ஒருக்க | orukka adv. <>ஒருங்கு-. 1. Ever, always; எப்பொழுதும். காம மொருக்க வொருதன்மை நிற்குமோ (பரிபா. 6, 72). 2. For each; |
| ஒருக்கடு - த்தல் | orukkaṭu- v. tr. <>ஒருங்கு+அடு-. To make no distinction; to consider equally; சமமாக நினைத்தல். திருக்கடித்தானமு மென்னுடைச்சிந்தையும், ஒருக்கடுத்து (திவ். திருவாய். 8, 6, 2). |
| ஒருக்கணி - த்தல் | oru-k-kaṇi- 11 v. <>ஒரு2+கண்-. intr. To lie on one side; To shut partially; to set slantingly; to put sidewise; to leave ajar, as a door; ஒருபக்கமாய்ச்சாய்தல். ஒருக்கணித்தோ மல்லாந்தோ கண் வளர்ந்தருளுகிறது (திவ். திருமாலை, 23, வ்யா. 81). - tr. ஒருச்சரித்தல். கதவை ஒருக்கணி. (J.) |
| ஒருக்கணிப்பு | orukkaṇippu n. <>ஒருக்கணி-. Lying or leaning on one side; ஒருபக்கமாய்ச்சாய்கை. (J.) |
| ஒருக்கம் | orukkam n. <>ஒருங்கு-. 1. Concentration of mind; மனவொடுக்கும். மனத்தையொருக்கு மொருக்கத்தினுள்ளே (பதினொ. திருவி. மும். 24). 2. Oneness, sameness; |
| ஒருக்கல் | orukkal n. prob. ஒருங்கு-. A defective note in music; ஓர் அபசுரம். (திருவாலவா. 57, 26.) |
| ஒருக்களி - த்தல் | orukkaḷi- 11 v. intr. <>ஒருக்கணி-. See ஒருக்கணி-. . |
| ஒருக்கால் | oru-k-kāl adv. Dial. var. of ஒருகால். See ஒருகால். ஒருக்காலழிதேரன்றியும் (பாரத. பதின்மூன். 111). |
| ஒருக்கிடை | oru-k-kiṭai n. <>ஒரு2+. See ஒருகிடை, 2. . |
| ஒருக்கு - தல் | orukku- 5 v. intr. Caus. of ஒருங்கு-. 1. To bring together; to gather; ஒன்று சேர்த்தல். ஒருக்கின பண்டங்களைக் கொண்டுபோகின்றமை (சீவக. 60, உரை.) 2. To subdue, control; 3. To kill, slay; |
| ஒருகட்பகுவாய் | oru-kaṭ-paku-vāy n. <>ஒரு2+கண்+. A kind of drum with one large face for beating; பறைவகை. (பிங்.) |
| ஒருகட்பறை | oru-kaṭ-paṟai n. <>id.+id.+. See ஒருகட்பகுவாய். (பிங்.) . |
| ஒருகண்டசீராய் | oru-kaṇṭa-cīr-āy adv. <>id.+. Uniformly, in the same manner; ஒரே விதமாய். ஒருகண்டசீராய் மழைபெய்கிறது. |
| ஒருகண்ணுக்குறங்கு - தல் | oru-kaṇṇukkuṟaṅku- v. intr. <>id.+. To take a short nap; சிறிதுதூங்குதல். (W.) |
| ஒருகணக்கு | oru-kaṇakku n. <>id.+. 1. Uniform manner; ஒரேவிதம். ஒருகணக்காய் நடந்து வருகிறது. 2. A triennial statement of account of the trade carried on in a foreign country by an agent of a Nāṭṭukkōṭṭai Chetti; |
| ஒருகால் | oru-kāl adv. <>id.+. 1. Once; ஒரு முறை. (திருவாலவா. நூல்வர. 3.) 2. Perhaps; 3. Sometimes; |
| ஒருகாலிநில்[ற்] - த[ற]ல் | orukālinil- v. intr. <>id. +. To be firmly resolved; to be unflinching, a simile from an ascetic standing resolutely on one leg while doing penance; உறுதியாயிருத்தல். அதை முடிக்க ஒரு காலில் நிற்கிறான். |
