Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஒருகாலும் | oru-kā-lum adv. <>id.+. At any time whatesoever, used with a negative; எந்தக்காலத்திலும். ஒருகாலும் நடவாது. |
| ஒருகாலே | oru-kāl-ē <>id.+. At once, at one stroke; ஒரேமுறையில். ஒருகாலே யெல்லாம் வாங்குக. |
| ஒருகிடை | oru-kiṭai n. <>id.+. 1. Being bedridden; state of being unable to move from bed; கிடந்தகிடை. 2. Lying on one side; |
| ஒருகுலைக்காய் | oru-kulai-k-kāy n. <>id.+. Lit., a fruit of the same bunch, a consanguineous group of persons; ஒருகுலத்தில் உதித்தவன். |
| ஒருகுழையவன் | oru-kuḻaiyavaṉ n. <>id.+. Balarāma, who wore a ring in only one of his ears; பலராமன். ஒருகுழையவன் மார்பிலொண்டார்போ லொளிமிக (கலித். 105, 11). |
| ஒருகுறி | oru-kuṟi adv. <>id.+. Once; ஒருமுறை. ஒருகுறி கேட்போ னிருகாற் கேட்பின் (நன். 42). |
| ஒருகூட்டு | oru-kūṭṭu n. <>id.+. Close union, compact; ஒருசேர்க்கை. |
| ஒருகை | oru-kai n. <>id.+. 1. United party; கட்சியின் ஐக்கியம். 2. Clique; |
| ஒருகைபரிமாறு - தல் | oru-kai-parimāṟu- v. intr. <>id.+. 1. To serve food in one of two opposite rows at dinners; விருந்தினர் வரிசையில் ஒரு புறமாகப் பரிமாறுதல். 2. To deal out one course at a feast; |
| ஒருகைபார் - த்தல் | oru-kai-pār- v. intr. <>id.+. To make a determined effort to win; வெல்லமுயலுதல். உனக்காச்செனக்காச்சென் றொருகைபாராமல் (இராமநா. யுத்த. 2). |
| ஒருகையாயிரு - த்தல் | oru-kai-y-āy-iru- v. intr. <>id.+. To join hands as against a common enemy; எதிர்க்கட்சிக்கு விரோதமாக ஒற்றுமையாயிருத்தல். |
| ஒருகைவிளையாடு - தல் | oru-kai-viḷaiyāṭu- v. intr. <>id.+. To play one round of a game; எல்லாருக்கும் ஒருமுறைவர ஆடுதல். (W.) |
| ஒருகோலுடையார் | oru-kōl-uṭaiyār n. <>id.+. A class of Brahman ascetics holding a single staff in hand; ஏகதண்டி சந்நியாசிகள். (தொல். பொ. 625, உரை.) |
| ஒருங்கவிடு - தல் | oruṅka-viṭu- v. tr. <>ஒருங்கு-+. To bring together, unite; பலவற்றை ஒன்றுசேர்த்தல். அவற்றை யொருங்கவிட்டு (திவ். திருநெடுந். 17, வ்யா. 134.) |
| ஒருங்கியலணி | oruṅkiyal-aṇi n. <>id.+. (Rhet.) Figure of speech connecting different ideas together. See புணர்நிலையணி. (வீரசோ அல. 13.) |
| ஒருங்கு 1 - தல் | oruṅku- 5 v. intr. <>ஒன்று. [M. oruṅṅu.] 1. To be concentrated; to have a singleness of aim or purpose; ஒருபடியாதல். நினதா ளொருங்கப்பிடித்து (திவ். திருவாய். 5, 8, 8). 2. To join together; 3. To sink, decline; to become reduced; 4. To be ruined, to perish; |
| ஒருங்கு 2 | oruṅku <>ஒருங்கு- adv. 1. Altogether; 2. Simultaneously; - n. 1. Entirety, totality; முழுதும். தூணிப்பதககென் றொருங்கொப்பக் கொண்டானாம் (நாலடி, 387). ஏககாலத்தில். முழுமை. (திவா.) 2. Suppression, restraint; |
| ஒருங்கே | oruṅkē adv. <>id. 1. Thoroughly, fully; முழுதும். 2. To the fullest extent or measure; |
| ஒருச்சரி - த்தல் | oru-c-cari- v. <>ஒரு2+. intr. To lean on one side; To shut partially, as a door; ஒருபக்கமாய்ச் சாய்தல். - tr. ஒருபக்கமாய்ச்சாய்த்தல். கதவை ஒருச்சரித்து (ஈடு, 10, 8, 3). |
| ஒருச்சாய் - த்தல் | oru-c-cāy- v. tr. <>id.+. To shut partially, as a door; ஒருபக்கஞ்சாய்த்தல். |
| ஒருச்சாய்வு | oru-c-cāyvu n. <>id.+. Leaning on one side; ஒருபுறமாகச்சாய்கை. |
| ஒருசந்தி | oru-canti n. <>id.+. Vow of taking only one meal in a day; ஒருநாளைக்கு ஒருமுறைமட்டும் உணவு கொள்ளும் விரதம். நாயறியா தொருசந்தி (தண்டலை. 23). |
| ஒருசாய்வு | oru-cāyvu <>id.+. n. Leaning to one side, partiality; 1. Altogether; 2. Continuously; பட்சபாதம். - adv. ஒருமிக்க. (J.) இடைவிடாமல். (W.) |
| ஒருசாயல் | oru-cāyala n. <>id.+. Having them same features, resemblance; உருவொப்பு. இக்குழந்தை தந்தையோ டொருசாயலாக இருக்கிறது. |
| ஒருசார் | oru-cār n. <>id.+. 1. One side; ஒருபக்கம். ஒருசா ரருவியார்ப்ப (புறநா. 115, 1). 2. One party; 3. Partiality; |
| ஒருசார்பு | oru-cārpu n. <>id.+. See ஒரு சார். . |
