Word |
English & Tamil Meaning |
---|---|
ஒக்கம் | okkam n. cf. ugra-gandhikā. See ஓமம். (மலை.) . |
ஒக்கல் 1 | okkal n. <>ஒ-. 1. Relations; kinsfolk; சுற்றத்தார். தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான் (குறள், 43). 2. Sewing together two pieces of any material; |
ஒக்கல் 2 | okkal n. prob. ஒஃகு-. [M. okku.] See ஒக்கலை. . |
ஒக்கல்போற்றல் | okkal-pōṟṟal n. <>ஒக்கல்1+. Supporting or maintaining one's relations, one of the qualities of character of the Vēḷāḷas; சுற்றத்தாரைப் போற்றுவதாகிய வேளாண்மாந்த ரியல்பு. (திவா.) |
ஒக்கலி 1 - த்தல் | okkali- 11 v. intr. prob. ஒக்க-கல்-. 1. To shout in joy, hulla-baloo, as a mark of triumph. See ஆவலங்கொட்டு-. பேய்கள்கூடி யொன்றினை யொன்றடித் தொக்கலித்து (பதினொ. திருவாலங்காட்டு. மூத்த. 1, 11). 2. To converse freely, hold friendly communion with one's relations; |
ஒக்கலி 2 - த்தல் | okkali- 11 v. intr. <>ஒக்கல்1. (W.) 1. To encourage one's relations, maintain them, give them medical aid, etc.; பந்துக்களைப் பரிபாலித்தல். 2. To become reconciled; |
ஒக்கலிடு - தல் | okkal-iṭu- v. intr. <>ஒக்கலி1+இடு-. See ஒக்கலி1-. . |
ஒக்கலை | okkalai n. <>ஒக்கல்2. Hip; side of the body; இடுப்பு. ஒக்கலை வேண்டி யழல் (பழ. 290). |
ஒக்காதிக்கொடி | okkāti-k-koṭi n. Species of Wagatea. See புலிநகக்கொன்றை. (L.) |
ஒக்கிடு - தல் | okkiṭu- v. tr. <>ஒக்க-இடு-. To repair; செப்பனிடுதல். Loc. |
ஒக்கிலியன் | okkiliyaṉ n. <>K. okkaliga. Member of a caste of cultivators from the Kannada province who have settled themselves in the Tamil country mainly in the districts of Madura and Coimbatore; தமிழ்நாட்டிற் குடியேறிய ஒரு கன்னட சாதியான். |
ஒக்கு - தல் | okku- 5 v.tr. (W.) 1. To gargle; கொப்புளித்தல். 2. To leave behind; |
ஒக்கோலை | okkōlai n. Dial. var. of ஒர்க்கோலை. (W.) |
ஒகரம் | okaram n. <>ஒ. Name of the pea-cock from the symbol ஒ standding for the bird among pacapaṭci; மயில். (சூடா.) |
ஒச்சட்டை | occaṭṭai n. See ஒஞ்சட்டை. . |
ஒச்சந்தம் | occantam n. See உச்சந்தம். (J.) . |
ஒச்சம் 1 | occam n. <>ஒச்சி- Bashfulness; shyness; நாணம். (W.) |
ஒச்சம் 2 | occam n. <>T. occemu. Defect; குறைவு. அவளுடைய வடிவத்தில் ஓர் ஒச்சமும் சொல்ல முடியாது. |
ஒச்சி 1 | occi n. See ஒஞ்சி. Nurs. . |
ஒச்சி 2 - த்தல் | occi- 11 v.intr. <>ஒசி1- See ஒஞ்சி-. (W.) . |
ஒச்சியஞ்சொல்(லு) - தல் | occiya-col- v. intr. <>ஒச்சியம்+. To speak libidinously; காமவீச்சையாய்ப்பேசுதல். (W.) |
ஒச்சியம் | occiyam n. <>ஒச்சி- (W.) 1. Bashfulness; shyness; கூச்சம். 2. Amorous speech; tender, loving words; 3. Contempt; |
ஒச்சை | occai n. perh. ஒற்று-. (W.) 1. Listening attentively, as to a distant sound; உற்றுக்கேட்கை. 2. Charred food; |
ஒச்சைகொடுத்துக்கேள்[ட்] - த[ட]ல் | occai-koṭuttu-k-kēḷ- v. tr. <>ஒச்சை+. To listen attentively; உற்றுக்கேட்டல். ஒச்சைகொடுத்துக்கேட்காதே. (W.) |
ஒசி 1 - தல் | oci- 4 v. intr. 1. To break, become broken, as a stick; முறிதல். (பிங்.) 2. To bend under a weight, as the tender branch of a tree or the waist of a woman; 3. To lean, incline; 4. To be coy, bashful; 5. To suffer; 6. To grow tired, become wearied; |
ஒசி 2 - த்தல் | oci- 11 v.tr. Caus. of ஒசி1-. 1. To break, as a stick; முறித்தல். யானைபோர்க்கோ டொசித்தனவும் (திவ். இயற். 1, 27). 2. To move, shake, wave; |
ஒசிந்தநோக்கு | ocinta-nōkku n. <>ஒசி1-+. Side-glance; ஒதுங்கிப்பார்க்கும் பார்வை. உரையினர் பாட்டின ரொசிந்தநோக்கினர் (சிலப். 1, 55). |
ஒசியல் | ociyal n. <>id. Tree, a branch of which has been broken; கிளைமுறிக்கப்பட்ட மரம். நிலம்படாஅ நாருடை யொசிய லற்றே (குறுந். 112). |
ஒஞ்சட்டை | ocaṭṭai n. cf. ஒச்சட்டை. Being tall and lean; ஒல்லி. |
ஒஞ்சட்டையன் | ocaṭṭaiyan n. <>ஒஞ்சட்டை Tall, lean man; ஒல்லிமனிதன். |
ஒஞ்சரி - த்தல் | ocari- 11 v. <>ஒருச்சரி-. tr. To close partially, as a door; -intr. To go sideways; கதவைச்சிறிது சாத்துதல். மதனசுந்தரி கதவை யொஞ்சரி. ஒருபக்கஞ்சார்தல். (W.) |