Word |
English & Tamil Meaning |
---|---|
ஐம்பது | ai-m-patu n. <>id.+ பத்து. Fifty; the numeral fifty. . |
ஐம்பால் | ai-m-pāl n. <>id.+. 1. (Gram.) The five parts into which nouns and finite verbs are divided, viz., ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால். (தொல். பொ. 644.) 2. Woman's hair, from its being dressed in five modes; |
ஐம்பான்முடி | ai-m-pāṉ-muṭi n. <>id.+. Five modes of dressing woman's hair, viz., or the first three supra with அளகம், துஞ்சை கொண்டை, குழல், பனிச்சை, முடி, சுருள் (திவா.); அளகம், துஞ்சை (சீவக. 2437, உரை); மகளிர் கூந்தலின் ஐவகை முடி. |
ஐம்புலம் | ai-m-pulam n. <>id.+. The sensations of the five sensory organs, viz., சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்; பஞ்சேந்திரியங்கட்கு உரிய ஐவகையுணர்ச்சிகள். ஐம்புலனு மொண்டொடி கண்ணே யுள (குறள், 1101). |
ஐம்புலம்வென்றோன் | ai-m-pulam-veṉṟōṉ n. <>id.+. 1. Sage, who has subdued the five senses; பஞ்சேந்திரிய வுணர்ச்சிகட்கு வசப்படாதவனான முனிவன். 2. A prepared arsenic; |
ஐம்புலாதி | ai-m-pulāti n. <>id.+ புலம்+ ādhi. Anxiousness, being full of cares; கவலை. (J.) |
ஐம்பூதம் | ai-m-pūtam n.<>id.+bhūta. The five elements. See பஞ்சபூதம். (மணி. 27, 89.) . |
ஐம்பெருங்காப்பியம் | ai-m-peru-ṅ-kāppiyam n. <>id.+. The five great epics. See பஞ்சகாவியம். (நன்.387, மயிலை.) . |
ஐம்பெருங்குழு | ai-m-peru-ṅ-kuḻu n. <>id.+. The five chief officers of a king, viz., மந்திரியர், புரோகிதர், சேனாதிபதியர், தூதர், சாரணர்; அரசர்க்கு இன்றியமையாதவரான ஐவகை அரசியற்றலைவர். ஐம்பெருங்குழுவு மெண்பே ராயமும் (மணி. 1, 17). |
ஐம்பெரும்பாதகம் | ai-m-peru-m-pātakam n. <>id.+. The five heinous sins, viz., கொலை, பொய், களவு, கள்ளூண். குருநிந்தை; பஞ்சமாபாதகம். |
ஐம்பெருவேள்வி | ai-m-peru-vēḷvi n. <>id.+. See ஐவகைவேள்வி. . |
ஐம்பொறி | ai-m-poṟi n. <>id.+. The five organs of sense, viz., மெய், வாய், கண், மூக்கு, செவி; ப்ஞ்சேந்திரியம். (திவா.) |
ஐம்பொன் | ai-m-poṉ n. <>id.+. [M. aimbonnu.] The five chief metals, viz., பொன் வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம்; பஞ்சலோகங்கள் (W.) |
ஐம்மீன் | ai-m-mīṉ n. <>id.+. 1. The 13th nakṣatra, so called because of its five principal stars. See அத்தம்8. (பிங்.) . 2. The fourth nakṣatra. See உரோகினி. (வீமேசுர. 15.) |
ஐம்முகன் | ai-m-mukaṉ n. <>id.+. šiva, the five-faced; ஐந்து முகங்களையுடைய சிவன் (திவா.) |
ஐம்முகாஸ்திரம் | ai-m-mukāstiram n. <>id.+mukha+astra. Arrow with five points; ஐந்து முனைகளைக்கொண்ட ஒருவகை அம்பு. (W.) |
ஐம்முகி | ai-m-muki n. <>id.+. cf. simha mukhī. Castor-plant. See ஆமணக்கு. (W.) . |
ஐம்மை | ai-m-mai n. 1. Thinness and flatness, as of a plate; தகட்டுவடிவு. (பிங்.) 2. Closeness, crowdedness; |
ஐமவதி | aimavati n. <>Haimavatī. Pārvatī; பார்வதி. (திருவானைக். கோச்செங். 81.) |
ஐமிச்சம் | aimiccam n. prob. <>ஐயம்2+அச்சம். Mingled feelings of suspicion and fear; ஐயங்கலந்த அச்சம். அங்கே போக எனக்கு ஐமிச்சமா யிருக்கிறது. (J.) |
ஐய 1 | aiya adj. <>ஐ2. 1. Wonderful; வியக்கத்தக்க. ஐயகோங் குறைத்தர (கலித். 29). 2. Small weak; 3. Beautiful; |
ஐய 2 | aiya int. Voc. case of ஐயன். 1. An exclamation of wonder; அதிசயக் குறிப்பு. ஐயவின்னதொ ரற்புத மாயைய (திருவிளை. விடை.23). 2. An exclamation of pity, concern; |
ஐயக்கடிஞை | aiya-k-kaṭiai n. <>ஐயம்2+ Alms bowl; பிச்சைவாங்குங் கலம். ஐயக் கடிஞை கையினேந்தி (மணி. 13, 109). |
ஐயக்கணசூலை | aiya-k-kaṇa-cūlai n. <>ஐ2+. An arthritic disease; சூலைநோய்வகை. (W.) |
ஐயக்காட்சி | aiya-k-kāṭci n. <>ஐயம்2+. Vision or perception too dim to decide whether a thing is this or that; தோன்றினதொருபொருளை அதுவோ இதுவோ என்று இரண்டுறக் கருதுகை. (சி. சி. அளவை, 3, மறைஞா) |
ஐயகுன்மம் | aiya-kuṉmam n. <>ஐ2+. Disease from excess of phlegm; சிலேட்டும குன்மம். (சங். அக.) |
ஐயகோ | aiyakō int. of. ஐயோ. An exclamation of pity, sorrow; இரக்கம் துக்கங்களின் குறிப்பு. ஐயகோவென் றலம்வருவாள் (வெங்கைகோ. 246). |