Word |
English & Tamil Meaning |
---|---|
ஐந்திரவியாகரணம் | aintira-viyākaraṇam n. <>id.+. Name of an ancient Sanskrit grammar ascribed to Indra; இந்திரனாற் செய்யப்பட்ட ஒரு வடமொழியிலக்கணநூல். (சிலப். 11, 99, உரை.) |
ஐந்திரி | aintiri n. <>aindrī. East, being Indra's quarter; இந்திரனைத் திக்குப்பாலகனாகக் கொண்ட கிழக்கு. (சூடா.) |
ஐந்து | aintu n. [T. aidu, K. aydu, M. anju, Tu. ainu.] The number five; ரு என்னும் எண். |
ஐந்துகில்போர்ப்போர் | ai-n-tukil-pōrppōr n. <>ஐந்து+துகில்+. Buddhists, as those who cover themselves with five clothes; ஐந்து துகில்கொண்டு போர்த்துக்கொள்பவராகிய பௌத்தர். ஐந்துகில் போர்த்துழலு நீதர் (தேவா. 239, 10). |
ஐந்துண்டி | aintuṇṭi n. <>id.+ உண்டி. See ஐந்துணவு. (திவா. 12, 71.) . |
ஐந்துணவு | aintuṇavu n. <>id.+. The five kinds of food differentiated accg. to the manner of taking them, viz., கடித்தல், நக்கல், பருகல், விழுங்கல், மெல்லல்; கடித்தல் முதலிய ஐந்து வகையால் உண்ணுதற்குரிய உணவுப்பண்டம். (சூடா.) |
ஐந்துப்பு | aintuppu n. <>id.+ உப்பு. The five kinds of salt, viz., கறியுப்பு, கல்லுப்பு, வெடியுப்பு, இந்துப்பு, வளையலுப்பு; ஐந்துவகை உப்பு. (மூ.அ.) |
ஐந்துபல்நங்கூரம் | aintu-pal-naṅkūram n. <>id.+. (Naut.) Grapnel anchor, having five flukes or prongs; நங்கூர வகை. |
ஐந்துபா | aintu-pā n. <>id.+. The five varieties of verse, viz., வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா and மருட்பா; ஐவகையான பா. (பாரத. பாயி. 15.) |
ஐந்துமுகத்தோன் | aintu-mukattōṉ n. <>id.+. šiva, the five-faced; ஐந்து முகங்களையுடைய சிவன். (உரி. நி.) |
ஐந்துருவாணி | ainturuvāṇi n. <>id.+ உருவு-+āni. Centre bolt binding together the five tiers of a car; தேரின் அச்சாணி. (W.) |
ஐந்துவிரன்மோதிரம் | aintu-viraṉ-mōtiram n. <>id.+. Five kinds of finger-rings worn by Parava women on the five fingers; கரண்டைக்காய் மோதிரம். |
ஐந்துறுப்படக்கி | aintuṟuppaṭakki n. <>id.+ உறுப்பு + அடக்கு- Tortoise, from its drawing in its four feet and head when alarmed; நான்கு பாதங்களையும் தலையையும் தனக்குள்ளே ஒடுக்கிக்கொள்ளுந் தன்மையதான ஆமை. (W.) |
ஐந்தை | aintai n. prob. ஐம்-மை. Indian mustard. See கடுகு. மறுமையை யைந்தை யனைத்தானுஞ் . . . சிந்தியார் (நாலடி, 329). |
ஐந்தொகை | ai-n-tokai n. <>ஐந்து+தொகை. Balance sheet, containing five particulars, viz., விழுமுதல், வரவு, செலவு, இருப்பு, ஆதாயம்; ஐவகை விவரங்காட்டுங் கணக்கு. Loc. |
ஐந்தொகைவினா | ai-n-tokai-viṉā n. <>id.+id.+. (Arith.) Rule of five, double rule of three; ஒருவகைக்கணக்கு. (W.) |
ஐந்தொழில் | ai-n-toḻil n. <>id.+. (šaiva.) Five functions of God. See பஞ்சகிருத்தியம். ஐந்தொழிற்கு மப்புறமாய் (குமர. பிர. கந்தர். 5). |
ஐந்தொழிலன் | ai-n-toḻilaṉ n. <>id.+. (šaiva.) šiva who performs five functions; பஞ்சகிருத்திய முடையனான சிவன். |
ஐந்நாட்குளி - த்தல் | ai-n-nāṭ-kuḷi- v. intr. <>id.+. To bathe for purification on the fifth day after attaining puberty; பூப்புக்குப்பின் ஐந்தாநாள் தலைமுழுகுதல். Loc. |
ஐந்நூறு | ai-n-nūṟu n. <>id.+. Five hundred. . |
ஐப்பசி | aippaci n. <>āšvayuj. 1. The seventh Tamil month, October-November; ஏழாவது மாதம். (உபதேசரத். 6.) 2. The first nakṣatra. See அசுவதி. (சீவக. 1770.) |
ஐப்பசிக்குழப்பம் | aippaci-k-kuḻappam n. <>ஐப்பசி+. Rough weather at the setting in of the north-east monsoon in October; ஐப்பசிமாதத்தில் தோன்றுகிற புயல். (J.) |
ஐப்பசிமுழுக்கு | aippaci-muḻukku n. <>id.+. Bathing in the Kāvēri during the month of Aippaci; துலாகாவேரிஸ்நானம். Loc. |
ஐம்படை | ai-m-paṭai n. <>ஐந்து+. 1. The five weapons of Viṣṇu. See பஞ்சாயுதம். (சூடா.) . 2. See ஐம்படைத்தாலி. |
ஐம்படைத்தாலி | ai-m-paṭai-t-tāli n. <>ஐம்படை+. A gold pendant worn by children in a necklace bearing in relief the five weapons of Viṣṇu, as an amulet; கழுத்திலே பிள்ளைகளணியும் பஞ்சாயுதவுருவமைந்த அணி. ஐம்படைத்தாலி . . . குறுநடைப் புரல்வர்க்கு (மணி. 7, 56). |
ஐம்படைப்பருவம் | ai-m-paṭai-p-paruvam n. <>id.+. Stage of childhood appropriate for wearing the aimpaṭai-t-tāli; ஐம்படைத்தாலியை யணிதற்குரிய குழந்தைப்பருவம். ஐம்படைப்பருவத்து வெம்படை தாங்கி (S.I.I. ii, 310). |
ஐம்பதவமிர்தம் | ai-m-pata-v-amirtam n. <>ஐந்து+. The five-syllabled mantra of the Jains. See பஞ்சநமஸ்காரம். பஞ்சநமஸ்காரம். (சீவக. 946.) |