Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஐதரேயம் | aitarēyam n. <>Aitarēya. Name of an Upaniṣad; நூறெட் டுபநிடதங்களுள் ஒன்று. |
| ஐதிகப்பிரமாணம் | aitika-p-piramāṇam n. <>aitihya+. Evidence or authority from tradition; உலகுரையாகிய அளவை. |
| ஐதிகம் | aitikam n. <>aitihya. 1. Tradition; உலகுரை. 2. See ஐதிகப்பிரமாணம். |
| ஐதிகளவை | aitika-v-aḷavai n. <>id.+. See ஐதிகப்பிரமாணம். (மணி. 27, 49.) . |
| ஐது | aitu n. <>ஐம்-மை. 1. That which is beautiful; அழகுள்ளது. பெற்றியு மைதென (மணி. 10, 2). 2. Beauty; 3. That which is minute, fine, subtle; 4. That which is thin, light, slender, soft; 5. That which is wonderful 6. Fluidity; 7. Sparseness, standing near but not in contact; |
| ஐதுநொய்தாக | aitu-noytāka adv. <>ஐது+. Very little; மிக்க இலேசாக. அனந்தன்பாலுங் கருடன்பாலு மைது நொய்தக வைத்து (திவ். பெரியாழ். 5, 4, 8). |
| ஐந்தச்சு | aintaccu n. Dial. var. of அந்தச்சு1. . |
| ஐந்தடக்கு - தல் | aintaṭakku- v. intr. <>ஐந்து+. To control the five senses; பஞ்சேந்திரியங்களையும் ஒடுக்குதல். ஆமைபோ லைந்தடக்க லாற்றின் (குறள், 126). |
| ஐந்தரு | ai-n-taru n. <>id.+taru. The five trees in the world of Indra. See பஞ்சதரு. (திவா.) |
| ஐந்தருச்செல்வி | ai-n-taru-c-celvi n. <>ஐந்தரு+. Wife of Indra; இந்திராணி. (பிங்.) |
| ஐந்தருநாதன் | ai-n-taru-nātaṉ n. <>id.+. Indra, lord of the five celestial trees; பஞ்ச தருக்களுக்குத் தலைவனான இந்திரன். (பிங்.) |
| ஐந்தலைநாகம் | ai-n-talai-nākam n. <>ஐந்து+. Five-headed cobra; ஐந்துதலைகளையுடைய நாகப்பாம்பு. ஐந்தலி நாக நன்மணி யும்பெறலாம் (தஞ்சைவா. 18). |
| ஐந்தவத்தை | aintavattai n. <>id.+avasthā. (šaiva.) The five conditions or states of the embodied soul, viz., சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம்; உடம்பினுட்பட்ட ஆன்மா அனுபவிக்கும் ஐவகை நிலை. (திருமந்.) |
| ஐந்தவி - த்தல் | aintavi- v. intr. <>id.+ அவி2-. See ஐந்தடக்கு-. ஐந்தவிததா னாற்றல் (குறள், 25). |
| ஐந்தறிவுயிர் | aintaṟivuyir n. <>id.+ அறிவு+உயிர். See ஐயறிவுயிர். (திவா.) |
| ஐந்தனுருபு | aintaṉ-urupu n. <>id.+. Case ending of the ablative, viz., இல் or இன், denoting separation, similitude, limitor means; ஐந்தாம் வேற்றுமையினுருபு. |
| ஐந்தாங்கால் | aintāṅ-kāl n. <>id.+. 1. The first post of the marriage shed planted on the fifth day before the date fixed for the marriage; விவாகத்திற்கு ஐந்துநாள்முன்பு நடும் பந்தற்கால். (W.) 2. A forfeit game which consists in throwing five stones up into the air and catching them in various ways; |
| ஐந்தாம்வேதம் | aintām-vētam n. <>id.+. The Mahābhārata, regarded as the fifth vēda; நான்கு வேதங்களோடுசேர்த்து ஐந்தாவதுவேதமென்றுசொல்லப்படும் பாரதம். ஐந்தாம்வேத மொழிச் செய்கை யன்றோ (பிரபோத. 4, 23). |
| ஐந்தார் | aintār n. perh. ஐந்து + taru. Palmyra-Palm. See பனை. (மலை) . |
| ஐந்தானம் | aintāṉam n. <>ஐந்து+ ahan. The fith nakṣatra. See மிருகசீரிடம். (பிங்.) . |
| ஐந்திணை | ai-n-tiṇai n. <>id.+ திணை. 1. Love between man and woman as manifested in five situations pertaining to the five tracts of land; அன்புடைக்காமம். (நம்பியகப். 4, உரை.) 2. The five tracts of land, viz., |
| ஐந்திணைச்செய்யுள் | ai-n-tiṇai-c-ceyyuḷ n. <>ஐந்திணை+. Poem describing the ain-tiṇai; உரிப்பொருள்தோன்ற ஐந்திணையையுங் கூறும் பிரபந்தம். (இலக். வி. 849.) |
| ஐந்திணைஎழுபது | ai-n-tiṇai-y-eḻupatu n. <>id.+. An ancient love-poem of 70 stanzas by Mūvātiyār, one of patiṉeṇ-kīḻ-k-kaṇakku, q.v.; பதினெண்கீழ்க்கணக்குக்களுள் மூவாதியார் செய்த நூல். |
| ஐந்திணையைம்பது | ai-n-tiṇai-y-aimpatu n. <>id.+. An ancient love-poem of 50 stanzas by Māṟam-poṟaiyaṉār, one of patiṉeṇ-kīḻ-k- kaṇakku, q.v.; பதினெண்கீழ்க்கணக்குக்களுள் மாறம்பொறையனார் செய்த நூல். |
| ஐந்திரம் | aintiram n. <>aindra. 1. See ஐந்திரவியாகரணம். ஐந்திர நிறைந்த தொல்காப்பியன் (தொல். பாயி.). 2. East, as Indra's quarter; 3. (Astrol.) A division of me, one of 27 yōkam, q.v.; 4. Name of a treatise on architecture; |
