Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஐகான் | ai-kāṉ n. <>id.+. The letter ஐ; ஐயென்னுமெழுத்து. ஐகான் யவ்வழி (நன். 124). |
| ஐகிகம் | aikikam n. <>aihika. 1. That which pertains to this world; இம்மைக்குரியது. 2. This world; |
| ஐங்கணை | ai-ṅ-kaṇai n. <>ஐந்து+. [K. aygaṇa.] Arrows of Kāma, the God of sexual love tipped with five kinds of flowers. See பஞ்சபாணம். விரைமல ரைங்கணை (மணி. 5, 5). |
| ஐங்கணைக்கிழவன் | ai-ṅ-kaṇai-k-kiḻavaṉ n. <>id.+. Kāma, the God of sexual love who uses ai-ṅ-kaṇai; மன்மதன். ஐங்கணைக் கிழவன் காட்சியுண் மகிழ (கல்லா. 19, 10). |
| ஐங்கணையவத்தை | ai-ṅ-kaṇai-y-avattai n. <>id.+. Effect produced by ai-ṅ-kaṇai. See பஞ்சபாணாவஸ்தை. . |
| ஐங்கணைவில்லி | ai-ṅ-kaṇai-villi n. <>id.+. Kāma, the God of sexual love, the archer who uses arrows tipped with five kinds of flowers; மன்மதன். ஐங்கணை வில்லித னாண்மை (திவ். பெரியதி. 9, 5, 7). |
| ஐங்கதி | ai-ṅ-kati n. <>id.+. The five kinds of pace of the horse. See அசுவகதி. ஐங்கதி நடத்திக் காட்டி (திருவிளை. மெய்க்கா. 37). |
| ஐங்கரன் | ai-ṅ-karaṉ n. <>id.+kara. Gaṇēša, who has five arms, viz., his four arms and the proboscis; ஐந்துகைகளுள்ளவனான கணபதி. (திவா.) |
| ஐங்காயத்தூள் | ai-ṅ-kāya-t-tūḷ n. <>id.+ காயம்1+. A medicinal powder of five ingredients given to women after childbirth; பிரசவத்துக்குப் பின் கொடுக்கும் ஐந்துசரக்குக்கள் சேர்ந்த ஒருவகை மருந்து. (W.) |
| ஐங்காயம் 1 | ai-ṅ-kāyam n. <>id. + id. (Med.) The five vegetable stimulants, viz., கடுகு, ஓமம், வெந்தயம், உள்ளி, பெருங்காயம்; ஐந்து சம்பாரச் சரக்குகள். (தைலவ. தைல. 135, வரி, 111.) |
| ஐங்காயம் 2 | ai-ṅ-kāyam n. <>id.+ காயம்2. The five wounds on the body of the crucified Jesus; இயேசுநாதர் தேகத்திலுற்ற ஐந்துவடு. Chr. |
| ஐங்காயவரம்பெற்றவர் | ai-ṅ-kāya-varam-peṟṟavar n. <>id.+id.+. Stigmatist of the Christian Church; கிறிஸ்துவின் ஐங்காயம் தந்தேகத்தில் அமையப்பெற்ற பக்தர். Chr. |
| ஐங்குரவர் | ai-ṅ-kuravar n. <>id.+. The five elders entitled to respect, viz., அரசன், உபாத்தியாயன், தாய், தந்தை, தமையன்; மரியாதை செய்தற்குரிய ஐவகைப் பெரியோர். ஐங்குரவராணை மறுத்தலும் (திரிகடு. 97). |
| ஐங்குறுநூறு | ai-ṅ-kuṟu-nūṟu n. <>id.+. The short five hundred,' an ancient anthology of love-lyrics, containing 500 short akaval verses, one of eṭṭu-t-tokai, q.v. compiled by Kūṭalūr-kiḻār; எட்டுத்தொகையு ளொன்று. |
| ஐங்கூட்டுநெய் | ai-ṅ-kūṭṭu-ney n. <>id.+. A compound of five kinds of oil, viz., ஆமணக்கெண்ணெய், நல்லெண்ணெய், வேப்பெண்ணெய், புன்கெண்ணெய், புன்னையெண்ணெய்; ஐந்து எண்ணெயின் கூட்டு. (பதார்த்த. 164, தலைப்பு.) |
| ஐங்கூந்தல் | ai-ṅ-kūntal n. <>id.+. Woman's hair, as dressed in five modes; ஐம்பாலாகிய கூந்தல். நாறைங் கூந்தலு நரைவிரா வுற்றன (மணி. 22, 130). |
| ஐங்கோணம் | ai-ṅ-kōṇam n. <>id.+. Pentagon, pentangular figure; பஞ்சகோணம். (W.) |
| ஐங்கோலான் | ai-ṅ-kōlāṉ n. <>id.+. See ஐங்கணைக்கிழவன். ஐங்கோலா னடத்துங் கொடுங்கோலை. (பிரபோத. 6, 39). |
| ஐச்சுவரியம் | aiccuvariyam n. <>aišvarya. See ஐசுவரியம். . |
| ஐசாபைசாவாய் | aicāpaicā-v-āy- adv. <>U. aisāwaisā+. Yes or no; conclusively; to the finish; உண்டு இல்லை என இரண்டிலொன்றாய். இந்த வியாபாரம் ஐசாபைசாவாய்த தீரவேண்டும். |
| ஐசிலம் | aicilam n. Ironwood of Ceylon. See இருள்மரம். (L.) . |
| ஐசுகைசா - தல் | aicu-kaicā- v. intr. Redupl. of ஐது. To be exceedingly small or minute; அத்தியற்பமாதல். ஐசுகைசான இருட்கொழுந்துகளை (திவ். இயற். திருவிருத். 69, வ்யா. பக். 361). |
| ஐசுவரியம் | aicuvariyam n. <>aišvarya. 1. Wealth, riches; prosperity; சம்பத்து. 2. The quality or nature of the Lord; |
| ஐஞ்சந்தி | ai--canti n. <>ஐந்து+. Junction of five streets; ஐந்து தெருக்கள் கூடுமிடம். (திருமுரு. 225, உரை.) |
| ஐஞ்ஞூறு | ai--ūṟu n. <>id.+ நூறு. [T. ainūṟu, K. aynūṟu, M. aiūṟu, Tu. ainūdu.] The number 500; ஐந்துநூறு. ஐஞ்ஞூறு குடிநிறைந்தவூர். (திவா.) |
| ஐதபயிர் | aita-payir n. <>ஐது+ Thin crop of growing corn; அடர்த்தியற்ற பயிர். (W.) |
