Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஏறுவட்டம் | ēṟu-vaṭṭam n. <>id.+. (W.) 1. Difference, less or more than 60 Indian hours in the passage of the moon through any of the nakṣatra; also the difference in the karaṇam and yōkam as affected thereby; நட்சத்திர முதலியனநாழிகையேறும் முறை. 2. Excess above, or deficiency in, equal shares in the division of the inheritance of lands, etc.; |
| ஏறுவாசி | ēṟu-vāci n. <>id.+. 1. Increase, as of price; ஏற்றம். விலை ஏருவாசியாயிருக்கிறது. 2. The length of a groove in a wall into which is inserted the edge of a beam or rafter; |
| ஏறுவால் | ēṟu-vāl n. <>id.+. Long tail, நீண்ட வால். பசு ஏறுவாலும் எருது கூழைவலும். (W.) |
| ஏறுவிடு - தல் | ēṟu-viṭu- v. intr. <>ஏறு2+. To set a bull at large to be captured, as a test of bravery, by a man who seeks the hand of a woman in marriage, a custom among herdsmen in ancient times; ஆயர் தம்மகளை மணம்புரியத்தக்கோர் தழுவிப்பிடிக்கும் பொருட்டு எருதுவிடுதல். |
| ஏறுவிடுத்தல் | ēṟu-viṭuttal n. <>id.+. The charitable act of furnishing covering bulls, one of muppattiraṇṭaṟam, q.v.; முப்பத்திரண்டறங்களுட் பொலியெருதுகளை உதவும் அறச்செயல். (திவா.) |
| ஏறுவெயில் | ēṟu-veyil n. <>ஏறு-+. Increasing heat and sunshine, as the sun advances towards the meridian, dist. fr. இறங்குவெயில்; முற்பகல் வெயில். |
| ஏறூர்ந்தோன் | ēṟūrntōṉ n. <>ஏறு2+ஊர்- šiva who rides on the bull; சிவன். (சூடா.) |
| ஏறெடு - த்தல் | ēṟeṭu- v.tr. <>ஏற+எடு-. To lift up, as the head, eyes; மேலெடுத்தல். |
| ஏறெடுத்துப்பார் - த்தல் | ēṟeṭuttu-p-pār- v.tr. <>ஏறெடு-+. To raise one's head and see; to look with favour upon; நிமிர்ந்து பார்த்தல். மற்றவரை யேறெடுத்துப் பாராள் (அருட்பா, vi, பாங்கிதலைவி. 5) |
| ஏன் 1 | ēṉ adv. <>ஏன்1. [K. M. ēṉ.] Why? what? wherefore? how? எதற்கு. அடுத்த வினையுளதாயி னிறையே னென்னில் (சிவப்பிர. 2, 6). |
| ஏன் 2 | ēṉ part. 1. First pers. sing. suffix (a) of a verb, as in வந்தேன்; (b) of a noun, as in அடியேன்; தன்மை யொருமைப் பெயர்வினைகளில் வரும் விகுதி. 2. Particle of exclusion, as in ஏனோன்; |
| ஏன் 3 | ēṉ n. <>ஏனம்2. Pig; பன்றி. ஏனொருவனாயெயிற்றில் தாங்கியதும் (திவ். இயற். நான். 70). |
| ஏன்றுகொள்(ளு) - தல் | ēṉṟu-koḷ- v. tr. <>ஏல்-+. 1. To receive, accept; to entertain; ஏற்றுக்கொள்ளுதல். அடியேனையு மேன்றுகொணீ (தேவா. 323, 6). 2. To defend, plead the cause of; |
| ஏன்றுகோள் | ēṉṟu-kōḷ n. <>ஏன்றுகொள்- Supporting, defending; ஆதரிக்கை. எனக்குறுப்பான ஏன்றுகோளையுடையனாய் (திவ். திருவாய். 2, 7, 6, பன்னீ.). |
| ஏன | ēṉa pron. <>ஏன்2. (Impers.) Others, the rest; பிற. முதலா வேன (தொல். எழுத். 66). |
| ஏனக்கோடு | ēṉakkōṭu n. Fetid Hoar hound. See வெதுப்படக்கி. (மூ. அ.) . |
| ஏனப்படம் | ēṉa-p-paṭam n. <>ஏனம்2+ Shield in the shape of a boar's head; பன்றிமுகக்கேடகம். ஏனப் படமுங் கிடுகின் படமும் (சிலப். 14, 172). |
| ஏனபானம் | ēṉa-pāṉam n. Redupl. of ஏனம் 1 Utensils, implements; தட்டுமுட்டு. |
| ஏனம் 1 | ēṉam n. 1. Palm leaf-vessel for drinking toddy from; ஓலைக்கலம். (திவா.) 2. Utensil, vessel; 3. Tool; 4. Jewel; |
| ஏனம் 2 | ēṉam n. Pig, wild hog; பன்றி. (தொல். பொ. 623.) |
| ஏனம் 3 | ēṉam part. Enumerative particle added to ஃ, as in அஃகேனம்; ஆய்த வெழுத்தின் சாரியை. (தொல். எழுத். 134, உரை.) |
| ஏனம் 4 | ēṉam n. <>ēnas. Sin, offence; பாவம். (சூடா.) |
| ஏனல் | ēṉal n. 1. Red millet. See செந்தினை. (திவா.) . 2. Black millet. See கருந்தினை. (சூடா.) 3. Millet field; 4. Ear of corn; |
| ஏனவாயன் | ēṉa-vāyaṉ n. prob. <>எனம்1+. Dolt, fool; பேதை. Loc. |
| ஏனாதி 1 | ēṉāti n. prob. sēnādi. 1. An ancient title conferred by a king on his minister; மந்திரி. சோழிக வேனாதி தன்முக நோக்கி (மணி. 22, 205). 2. General; 3. Soldier, warrior; 4. Kind of electuary; |
| ஏனாதி 2 | ēṉāti n. cf. T. ēnādi. 1. Barbar; நாவிதன். (பிங்.) 2. Name of a divison among Shāṇāns; |
