Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஏறு 3 - தல் | ēṟu- n. <> ஏறி-. 1. Throw; எறிகை. காயாத மரமீது கல்லேறு செல்லுமோ (தாயு. சச்சி. 8). 2. Beating, as of a drum; 3. Stroke, as of a sword; sting, as of scorpion; 4. Pouncing upon, as an eagle; 5. Thunderbolt; 6. Destroying; 7. Scar; |
| ஏறுக்குமாறு | ēṟukku-māṟu n. Redupl. of மாறு. Improper, unruly behaviour; perverseness, contrariety; தாறுமாறு. Colloq. |
| ஏறுகடை | ēṟu-kaṭai n. <>ஏறு-+. The very end, extremity; கடைசிமுடிவு. (W.) |
| ஏறுகுதிரை | ēṟu-kutirai n. <>id.+. Riding horse; ஏறிச்சாரிப்போதற்குரிய குதிரை. |
| ஏறுகோட்பறை | ēṟu-kōṭ-paṟai n. <>ஏறு2+. Drum used in ēṟu-kōḷ tournaments in forest-pasture tracts; ஏறுதழுவுதற்குரிய முல்லை நிலப்பறை. (இறை. 1, உரை, பக். 18.) |
| ஏறுகோடல் | ēṟu-kōṭal n. <>id.+. See ஏறுகோள், 1. கைக்கிளையுள் ஆசுரமாகிய ஏறுகோடல் (தொல். பொ. 53, உரை). |
| ஏறுகோள் | ēṟu-kōḷ n. <>id.+. 1. Capture of the bull at large as a proof of bravery, by a man seeking in marriage the hand of a woman, a custom among herdsmen in ancient times; ஆயர் குலவழக்கின்படி ஒரு பெண்ணை வரைந்துகொள்வதற்காக ஏறுதழுவுகை. (திருக்கோ. 136, உரை.) 2. See ஏறுகோட்பறை. (பிங்.) |
| ஏறுங்கூறுமாய் | ēṟuṅ-kūṟum-āy adv. prob. ஏறுமாறு+. Improperly, indecently; தாறுமாறாய். Loc. |
| ஏறுசலாகை | ēṟu-calākai n. <>ஏறு-+. Large wooden peg passing through the ends of rafters in a building; கைம்மரங் கோக்குஞ்சட்டம். (J.) |
| ஏறுசெடி | ēṟu-ceṭi n. <>id.+. Shrubby creeper; அடர்ந்த கொடி. (J.) |
| ஏறுண்(ணு) - தல் | ēṟuṇ- v. intr. <>ஏறு3-+. 1. To be cut off; அறுக்கப்படுதல். வாளுந் திகிரியு முதலியவற்றா லேறுண்டதலை (தொல். பொ. 71, உரை.) 2. To be pierced, transfiexd; 3. To be thrown down; |
| ஏறுதழுவு - தல் | ēṟu-taḻuvu- v. intr. <>ஏறு2+. To capture a bull at large as proof of bravery in ēṟu-kōḷ contests, a custom among herdsmen in ancient times; ஆய்க்குலக் காளையர் மணமுடிக்கும்பொருட்டு இடபத்தைத் தழுவிப்பிடித்தல். அந்நிலத்தியல்புபற்றி ஏறுதழுவி (தொல். பொ. 53, உரை). |
| ஏறுதுறை | ēṟu-tuṟai n. <>ஏறு-+. See ஏற்று துறை. (W.) . |
| ஏறுநெற்றி | ēṟu-neṟṟi n. <>id.+. High forehead; அகன்ற நெற்றி. Loc. |
| ஏறுபடி | ēṟu-paṭi n. <>id.+. 1. Extra batta to a servant; extra allowance for expenditure in the temple; அதிகப்படித்தரம். (W.) 2. Sloping roof; |
| ஏறுபெட்டி | ēṟu-peṭṭi n. <>id.+. Basket for taking toddy which a toddy drawer carries about his waist while engaged in tree tapping; மரமேறிகள் கள்ளூற்றுமாறு அரையிற்கட்டிக்கொள்ளும் பெட்டி. (J.) |
| ஏறுபொழுது | ēṟu-poḻutu n. <>id.+ Forenoon, time of the sun's advancing towards the meridian; முற்பகல். |
| ஏறுமாறு | ēṟu-māṟu n. Redupl. of மாறு. 1. Improper, unruly behaviour; தாறுமாறு. ஏறுமாறாக விருப்பாளே யாமாயின் (தனிப்பா. i, 95, 14). 2. Competing, rivalling; |
| ஏறுமிராசி | ēṟum-irāci n. <>ஏறு-+. The six signs of the Zodiac through which the sun passes in its northern course, dist. fr. இறங்குமிராசி; சூரியன் உத்தராயணத்திற் சஞ்சரிப்பதற்கு இடமாய்; மகரமுதல் மிதுனம்வரையுமுள்ள ஆறிராசிகள். (W.) |
| ஏறுமுகக்கண்டிகை | ēṟu-muka-k-kaṇṭikai n. See ஏறுமுகவுருத்திராட்சம். . |
| ஏறுமுகம் | ēṟu-mukam n. <>ஏறு-+. Waxing state, state of increase; வளருநிலை. என்றுன்பமனைத்தும் . . . ஏறுமுகங்கொண்டதல்லால் (அருட்பா, v, தனித்திருத். 12). |
| ஏறுமுகவுருத்திராட்சம் | ēṟu-muka-vuṟuttirāṭcam n. <>id.+. Garland of Rudrākṣa beads in which the number of faces of the beads is in a progressively ascending scale; உருத்திராட்சமணிகள் முறையே முகங்கள் அதிகம்பெறக் கோக்கப்படும் மாலை. |
