Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஏற்றுத்தொழில் | ēṟṟu-t-toḻil n. <>ஏறு-+. Art of riding on elephants, horses, etc.; யானை முதலியவற்றை ஏறிநடத்துந் தொழில். (சீவக. 1758, உரை.) |
| ஏற்றுதுறை | ēṟṟu-tuṟai n. <>ஏற்று-+. Place of export or embarkation; சரக்கைக் கப்பலிலேற்றுந் துறைமுகம். (W.) |
| ஏற்றுப்பனை | ēṟṟu-p-paṉai n. <>ஏறு2+. See ஏற்றைப்பனை. ஏற்றுப் பனையெல்லா நிறைந்த குலைகளாய் (பெரியபு. திருஞானா. 980) |
| ஏற்றுமதி | ēṟṟumati n. <>ஏற்று-. [T. K. egumati.] 1. Export; கப்பலிற் பண்டமேற்றுகை. 2. Exported cargo; |
| ஏற்றுமுதல் | ēṟṟu-mutal n. <>id.+. Cargo exported in boats, etc.; தோணி முதலியவற்றி லேற்றப்படுஞ் சரக்கு. (சங். அக.) |
| ஏற்றுவாகனன் | ēṟṟu-vākaṉaṉ n. <>ஏறு2+. šiva, whose vehicle is the bull; சிவன். (திவா.) |
| ஏற்றெழு - தல் | ēṟṟeḻu- v. intr. <>ஏறு-+. 1. To rise after recovery of consciousness from a swoon, from sleep; மயக்கந்துயில்களினின்றும் எழுதல். மெய்யறிந் தேற்றெழுவேனாயின் (கலித். 37.) 2. To ascend, as a flame; 3. To proceed against; |
| ஏற்றை | ēṟṟai n. <>ஏறு2. Male of any animal remarkable for physical strength; ஆற்றலோடுகூடிய ஆண்பால் விலங்கு. (தொல். பொ. 604.) |
| ஏற்றைப்பனை | ēṟṟai-p-paṉai n. <>ஏற்றை+. Male palmyra; ஆண்பனை. இடுகாட்டு ளேற்றைப்பனை (நாலடி, 96). |
| ஏற | ēṟa adv. <>ஏறு-. 1. So as to exceed; more than; அதிகமாக. அரைப்படிக்கு ஏறக்கொடு. 2. On high, in the air, above; 3. Completely, entirely; 4. In advance, forward; |
| ஏறக்கட்டித்தூக்கு - தல் | ēṟa-k-kaṭṭi-t-tūkku- v. tr. <>ஏறக்கட்டு-+. (W.) 1. To hang up ; தொங்கும்படி உயரக் கட்டிவைத்தல். |
| ஏறக்கட்டு - தல் | ēṟa-k-kaṭṭu- v. tr. <>ஏற+. Colloq. 1. To build up; உயரக்கட்டுதல். 2. To put off selling so that the price may rise; 3. To withhold or keep back, as clouds their showers; 4. To collect together scattered articles, as grain into a heap; 5. To give up altogether, as a person his studies; |
| ஏறக்குறைய | ēṟa-k-kuṟaiya adv. <>id.+. More or less, about; சுமார். |
| ஏறக்குறையப்பேசு - தல் | ēṟa-k-kuṟaiya-p-pēcu- v. tr. <>id.+. To vilify, abuse; இகழ்ந்துகூறுதல். Loc. |
| ஏறங்கோட்பறை | ēṟaṅ-kōṭ-paṟai n. <>ஏறு2+. See ஏறுகோட்பறை. (திவா.) . |
| ஏறங்கோள் | ēṟaṅ-kōḷ n. <>id.+. See ஏறுகோட்பறை. ஏறங்கோண் முழங்க (சீவக. 489). |
| ஏறச்சங்கு | ēṟa-c-caṅku n. <>எறு-+. Conch that is blown in honour of a chief or a liberal donor of a temple as he mounts his vehicle, dist. fr. இறங்கச்சங்கு; கோயிற்கு உபகரித்த பெரியோர் சிவிகை முதலியவற்றில் ஏறும்போது மரியாதையாக ஊதப்படுஞ் சங்கு. Loc. |
| ஏறடு - தல் | ēṟaṭu- v. tr. <>id.+ இடு-. 1. To place over; மேல்வைத்தல். கொம்பினிடத்தே யேறட்ட தம்கையிடத்தே (முல்லைப். 34, உரை). 2. To take upon one's self; |
| ஏறண்டம் | ēṟaṇṭam n. <>id.+aṇda. Rupture, hernia; குமுறலண்டம். (சீவரட். 112.) |
| ஏறத்தாழ | ēṟa-t-tāḻa adv. <>id.+. See ஏறக்குறைய. . |
| ஏறப்பற - த்தல் | ēṟa-p-paṟa- v. intr. <>id.+. 1. To fly on high; உயரப்பறத்தல். அந்தரமாறா . . . ஏறப் பறக்கெனில் (சீவக. 2156). 2. To attempt the impossible; |
| ஏறப்போ - தல் | ēṟa-p-pō- v. tr. <>id.+. To go towards, proceed in the direction of; குறித்துச்செல்லுதல். ஊரேறப்போக (சீவக. 1875, உரை.) |
| ஏறவாங்கு - தல் | ēṟa-vāṅku- v. <>id.+. intr. 1. To be aloof; விலகியிருத்தல். ஸர்வேஸ்வரன் . . . ஏறவாங்கி நிற்குமாகில் (ஈடு). 2. To be drawn up, twisted, as the neck by cold; - tr. 1. To purchase outright; 2. To buy cheaply; |
| ஏறவிடு - தல் | ēṟa-viṭu- v. tr. <>id.+. 1. To allow to ascend; ஏறும்படிசெய்தல். ஏறவிட்டேணியைவாங்கினதுபோல. 2. To keep off from the shore, as a vessel; 3. To sail close to the wind; 4. To turn towards the shore, as a vessel; 5. To allow to spread; to circulate, as poison; |
