Word |
English & Tamil Meaning |
|---|---|
| எளிதம் | eḷitam n. <>id. See ஏளனம். (W.) . |
| ஏற்க | ēṟka adv. <>ஏல்-. See ஏற்கவே. (J.) . |
| ஏற்கநட - த்தல் | ēṟka-naṭa- v. intr. <>id.+. To behave properly; ஒழுங்காய் நடத்தல். (W.) |
| ஏற்கவே | ēṟkavē adv. <>id.+ ஏ. Before hand, early, in good time; முன்னமே. ஆபத்துவந்தபோது நம்மைத் தேடித்திரியவொண்ணா தென்று ஏற்கவே கடலிடங் கொண்டவனை (ஈடு, 3, 6, 2). |
| ஏற்கெனவே | ēṟkeṉavē adv. <>id.+ எனவே. See ஏற்கவே. . |
| ஏற்ப | ēṟpa <>id. part. An adverbial word of comparison; - adv. In accordance with; ஓர் உவமவுருபு. (தண்டி. 33); தக்கபடி. |
| ஏற்படு - தல் | ēṟpaṭu- v. intr. <>id.+. [T. K. ērpadu, M. ēlpedu.] 1. To come into existence; to become formed; to be produced, or created; உண்டாதல். அந்த ஊர் அவனால் ஏற்பட்டது. 2. To be engaged in; to enter upon, as business; 3. To agree, consent, become a party to a contract; |
| ஏற்படுத்து - தல் | ēṟpaṭuttu- v. tr. Caus. of ஏற்படு-. [T. ērparatsu, K. ērpadisu, M. elpedutu.] 1. To create, make, from, construct, establish; உண்டுபண்ணுதல். அவன் அந்த ஊரை ஏற்படுத்தினவன். 2.. To persuade, prevail upon, induce; 3. (Law.) To find, as guilty or not guilty; 4. To prepare, arrange; 5. To ordain, appoint, assign, institute, put into office; |
| ஏற்பாடு | ēṟpāṭu n. <>ஏற்படு-. [T. ērpāṭu, K. ērpādu.] 1. Arrangement, method, system, rule, established custom; ஒழுங்கு. அந்த ஏற்பாடு நன்றாயிருக்கிறது. 2. Appointment to an office; 3. Engagement, convenant; 4. Testament, as the Old and New Testament in the Bible; Chr. |
| ஏற்பு | ēṟpu n. <>ஏல்- 1. Appropriateness, fitness; பொருத்தம். ஏற்புற வணிதலும் (நம்பியகப். 125). 2. Acceptance, reception; |
| ஏற்புடைக்கடவுள் | ēṟpuṭai-k-kaṭavuḷ n. <>ஏற்பு+உடை+. Deity appropriate to the subject-matter dealt with in a book, dist. fr. வழிபடுகடவுள்; நூற்குரிமைபூண்டுள்ள கடவுள். (குறள், 1, உரை.) |
| ஏற்புழி | ēṟpuḻi adv. <>id.+ உழி. In the suitable place; ஏற்குமிடத்து. அடைகளை ஏற்புழி யெங்கும் ஒட்டுக (சிலப். 13, 155, உரை.) |
| ஏற்புழிக்கோடல் | ēṟpuḻi-k-kōṭal n. <>ஏற்புழி+. (Gram.) Application of rules and definition to cases where they might suitably apply, allowing of exceptions, one of 32 utti; பொருந்து மிடங்களிற் கொள்ளுகையென்னும் உத்தி. (நண். 227, விருத்.) |
| ஏற்போன் | ēṟpōṉ n. <>ஏல்- Beggar, mendicant; யாசிப்போன். (சூடா) |
| ஏற்றக்கால் | ēṟṟak-kāl n. <>ஏற்றம் + Frame for supporting a sweep or picottah for irrigation; துலாவைத் தாங்குங் கால். |
| ஏற்றக்குறைச்சல் | ēṟṟak-kuṟaiccal n. <>id.+. 1. Superiority and inferiority; highness and lowness; greatness and smallness; உயர்வு தாழ்வு. Colloq. 2. Disparity, difference, disagreement; |
| ஏற்றக்குறைத்தல் | ēṟṟak-kuṟaittal n. <>id.+. See ஏற்றக்குறைச்சல், 1. (S.I.I. ii, 114.) . |
| ஏற்றக்கோல் | ēṟṟak-kōl n. <>id.+. [K. ēta-kōlu.] Pole attached to a well sweep or picottah and supporting the bucket for drawing water; துலாமரத்தில் நீரிறைக்குங் கழி. |
| ஏற்றச்சால் | ēṟṟac-cāl n. <>id.+. Bucket used for irrigation by picottah; துலாச்சால். |
| ஏற்றணை | ēṟṟaṇai n. <>ஏறு2+அணை. Throne, supported by legs carved with the figure of the lion; சிங்காதனம். ஏற்றணையி னீங்கி (கந்தபு. இரண். சூரப. யுத். 29). |
| ஏற்றத்தாழ்ச்சி | ēṟṟat-tāḻcci n. <>ஏற்றம்+. See ஏற்றக்குறைச்சல், 1. . |
| ஏற்றது | ēṟṟatu n. <>ஏல்-. 1. That which is fit, proper; தகுதியானது. 2. That which is agreeable, pleasing; |
| ஏற்றப்பட்டரை | ēṟṟap-paṭṭarai n. <>ஏற்றம்+. Cultivable land surrounding a well from which water can be drawn by a sweep or picottah for purposes of irrigation; ஏற்றமிட்டிறைக்குங் கிணற்றைச்சூழ்ந்த விளைநிலம். Loc. |
| ஏற்றபடி | ēṟṟa-paṭi adv. <>ஏல்-+. 1. As is fit, meet, becoming, proper; தக்கவாறு. 2. As one likes; according to one's own pleasure; |
| ஏற்றம் | ēṟṟam n. <>ஏறு-. [K. ēta, M. ēttam.] 1. Mounting, as a ladder, a horse; ascending; மேல் ஏறுகை. 2. Ascent, acclivity; 3. Hoisting, as a flag; raising up; 4. Rising, as the flowing tide; 5. Praise, eulogy; 6. Heavy wooden rammar set to a frame for pounding parched rice. See இடிமரம், 2. 7. Increase, increment; 8. Excess; 9. Distinction, superiority, exaltation, preeminence; 10. Thought, meditation; 11. Confidence, boldness; 12. [T. Etamu.] Well sweep, picottah; |
