Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஏவல்வினை | ēval-viṉai n. <>id.+. 1. (Gram.) Verb in the imperative mood; முன்னின்றாரை ஏவும் வினை. 2. The act of commanding a devil by witchcraft to do harm to a person; |
| ஏவலன் | ēvalaṉ n. <>id. Attendant, servant; பணிவிடைசெய்வோன். ஏவலர் தொழின் முறை யியற்ற (கந்தபு. வரைபுனை. 17). |
| ஏவலாள் | ēval-āḷ n. <>id.+. See ஏவலன். . |
| ஏவற்காரப்பேய் | ēvaṟ-kāra-p-pēy n. <>id.+. 1. See ஏவற்பேய். . 2. Name of a demon that serves Kāḷi as a messenger; |
| ஏவற்காரன் | ēvaṟ-kāraṉ n. <>id.+. See ஏவலன். (யாழ். அக.) . See ஏவலன். (யாழ். அக.) |
| ஏவற்சிலதி | ēvaṟ-cilati n. <>id.+. Maid-servant of a household; kitchen-maid; குற்றேவல்புரியும் பெண். பூவிலை மடந்தைய ரேவற்சிலதியர் (சிலப். 5, 51). |
| ஏவற்பணி | ēvaṟ-paṇi n. <>id.+. Services commanded, often used as a compliment in epistolary writings and in polite conversation; ஏவியவேலை. (W.) |
| ஏவற்பணிவிடை | ēvaṟpaṇiviṭai n. <>id.+ See ஏவற்பணி. . |
| ஏவற்பேய் | ēvaṟ-pēy n. <>id.+. 1. A little sprite or devil serving under a greater demon; பெரியபேய்க்கு ஊழியஞ் செய்யும் குட்டிப்பிசாசு. ஏவற்பேய்கூரையைப் பிடுங்கும். 2. Demon conjured and urged against a person by witchcraft; |
| ஏவறை 1 | ē-v-aṟai n. <>ஏ3+. Retreat constructed in the battlement of a fort from where bowmen might shoot arrows against the enemy unobserved; மறைந்து அம்பெய்தற்குரிய மதிலுறுப்பு. (பு. வெ. 6, 5, உரை.) |
| ஏவறை 2 | ēvaṟai n. Belching, eructation; ஏப்பம். (J.) |
| ஏவன் | ēvaṉ pron. <>ஏ1 Who? யாவன். |
| ஏவாகனம் | ēvākaṉam n. cf. yamānī. Bishop-weed seed. See ஓமம். (சங். அக.) . |
| ஏவாங்கம் | ēvāṅkam n. See. ஏவாகனம். (மூ. அ.) . |
| ஏவாங்கனம் | ēvāṅkaṉam n. See ஏவாகனம். (மூ. அ.) . |
| ஏவிளம்பி | ēviḷampi n. <>hēma-lamba. The 31st year of the Jupiter cycle of 60 years; ஒரு வருஷம். |
| ஏவு 1 - தல் | ēvu - 5 v. tr. 1.To command, order, direct; கட்டளையிடுதல். 2. To incite, prompt, urge, instigate; to conjure and set on, as a demon; 3. To inspire, as God; 4. To hurl; to discharge, as an arrow; to throw, as a dart; |
| ஏவு 2 | ēvu n. <>ஏவு-. Arrow; அம்பு. மாறி லேவு பூட்டி (கந்தபு. காமதக. 66). |
| ஏவுண்ணு - தல் | ēvuṇṇu- v. intr. <>ஏவு+. To be injure by an arrow; அம்பு பாயப் படுதல். பகழியி னேவுண்டு (இறை. 6, 64). |
| ஏவுதற்கருத்தா | ēvutaṟ-karuttā n. <>ஏவு-+. (Gram.) Indirect agent who causes a thing to be done, as in அரசன் ஆலயங் கட்டினான், dist. fr. இயற்றுதற்கருத்தா; செய்விக்கும் வினைமுதல். |
| ஏவுவான் | ēvuvāṉ n. <>id. Master, director; கட்டளையிடுபவன். (பிங்.) |
| ஏழ் | ēḻ n. See <ஏழு. (தொல். எழுத். 388.) . |
| ஏழ்ச்சி | ēḻcci n. <>எழுச்சி. Springing forth; manifestation; தோற்றம். ஏழ்ச்சிக் கேடின்றி (திவ். திருவாய். 3, 2, 4). |
| ஏழ்பரி | ēḻ-pari n. <>ஏழ்+. The seven horses yoked to the chariot of the sun; சூரியன் தேரிற் பூட்டப்படும் சப்தமா. |
| ஏழ்பரியோன் | ēḻ-pariyōṉ n. <>id.+. The sun, who drives in a chariot drawn by seven horses; சூரியன். (சூடா.) |
| ஏழ்புழை | ēḻ-puḻai n. <>id.+. Read pipe that has seven holes; வேய்ங்குழல் வகை. ஏழ்புழை யைம்புழை யாழிசை கேழ்த்தன்ன (பரிபா. 8, 22). |
| ஏழ்மை | ēḻ-mai n. <>id. Seven; ஏழு. ஏழ்மைப் பிறப்புக்குஞ் சேமம் (திவ். திருவய். 4, 6, 9). |
| ஏழகம் | ēḻakam n. <>ēḷaka. cf. Pkt. ēḷaka. Sheep, ram, goat; ஆடு. (சூடா.) |
| ஏழரைகழி - தல் | ēḻ-arai-kaḻi- v. intr. <>ஏழ்+அரை+. To pass away as Saturn after exercising his malignant influence for seven years and a half; கொடிய ஏழரையாண்டுச்சனி நீங்குதல். (W.) |
| ஏழரைநாட்டுச்சனி | ēḻarai-nāṭṭu-c-caṉi n. <>ஏழரையாட்டைச்சனி. See ஏழரையாண்டுச்சனி. Colloq. . |
| ஏழரையாண்டுச்சனி | ēḻarai-y-āṇṭu-c-caṉi n. <>ஏழரை+. (Astrol.) Saturn in his malign influence for 71/2 years when passing through the zodiacal sign of one's star at birth, the one previous and the one after; சந்திர லக்கினத்திலிருந்து, 12, 1, 2-ஆம் தானங்களில் ஏழரையாண்டிருந்து பீடிக்குஞ் சனி. (W.) |
