Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஏரின்வாழ்நர் | ēriṉ-vāḻnar n. <>id.+. Agriculturists, as those who live by the plough; உழவினால் சீவனஞ்செய்பவர். (திவா.) |
| ஏருழவர் | ēr-uḻavar n. <>id.+. Ploughmen; ஏர்கொண்டுழுபவர். வில்லே ருழவர் பகைகொளினும் (குறள், 872). |
| ஏருழவு | ēr-uḻavu n. <>id.+. 1. Ploughing, tillage, agriculture; வேளாண்மை. 2. Extent of land that can be ploughed by two pairs of oxen in a day; |
| ஏரெழுபது | ēr-eḻupatu n. <>id.+. Name of a poem by Kamban containing 70 stanzas in praise of the plough; ஏரைப்புகழ்ந்து கம்பர்பாடிய ஒரு நூல். |
| ஏரோட்டு - தல் | ēr-ōṭṭu- v. tr. <>id.+. To plough; உழுதல். |
| ஏரோர் | ērōr n. <>id. Ploughmen; உழுவோர். ஏரோர் களவழித் தேரோர் தோற்றிய (தொல். பொ. 76.) |
| ஏல் [ற்] 1 - த[ற]ல் | ēl - 10 & 3 v. intr. 1. cf. இயல்-. [M. ēl.] To be suitable, convenient, just; தகுதல். ஏலா விடரொருவ ருற்றக்கால் (நாலடி, 113). 2. To change; 3. To awake from sleep; 4. To happen, occur; 5. To be excessive; to abound; -tr. 1. To receive, welcome; 2. To admit, accept, consent, concede; to embrace, adopt; 3. To stretch out the hands in supplication; to beg, as alms; 4. To undertake, enter upon, engage in, take charge of; 5. To love; 6. To |
| ஏல் 2 | ēl n. <>ஏல்-. 1. [M. ēl.] Suitability, appropriateness, fitness பொருத்தம். மாலை யேலுடைத்தாக... அணிந்தும் (திருவாச. 2, 114). 2. Revival, esp. of one in swoon or in depressing grief; |
| ஏல் 3 | ēl n. <>ஏரல். See ஏரல். (W.) . |
| ஏல் 4 | ēl part. A neg. imp. sing. ending, as in விலக்கேல்; எதிர்மறை யேவலொருமை விகுதி. |
| ஏல் 5 | ēl pple. <>எனில். If, used as an ending in a conjunctional sense, as in வந்தாயேல்; என்றால். |
| ஏல்வை | ēlvai n. prob. ஏல்-. 1. Time, period, season; காலம். அரசாள்கின்ற வேல்வை (உத்தரரா. சம்புவன். 6). 2. Day; 3. Tank; large expanse of water; |
| ஏல | ēla adv. <>ஏல்-. 1. Already; beforehand; முன்னமே. பிரளயம் வருமென் றேலக் கோலி (ஈடு, 2, 8, 7). 2. Liberally, vastly; |
| ஏலக்காய் | ēla-k-kāy n. <>ēlā+. Cardamon; ஏலச்செடியின்காய். |
| ஏலங்கூறு - தல் | ēlaṅ-kūṟu- v. intr. <>Port. leilao+. To cry out the bid at an auction; கேட்கப்பட்ட ஏலவிலையைப் பலரறியக்கூவுதல். |
| ஏலங்கோள்[ட்] - த[ட]ல் | ēlaṅ-kēḷ- v. intr. <>id.+. To bid at an auction; ஏலவிலையை ஏற்றி அல்லது குறைத்துக்கேட்டல். |
| ஏலச்சீட்டு | ēla-ccīṭṭu n. <>id.+. Periodical deposit of money by the subscribers to a joint co-operative association, the net collections being auctioned away to the lowest bidder on each occasion; ஏலங்கேட்டெடுக்குங் கூட்டுச் சீட்டு. |
| ஏலநிதி | ēla-niti n. <>id.+. Chit fund or voluntary co-operative association among a group of persons, which receives periodical deposits of money from subscribers, and deals with the net collection each time according to the rules of the ēla-c-cīṭṭu; ஒரு வகை ஐக்கிய நாணய சங்கம். (G. Tn. D. i, 194.) |
| ஏலப்பாட்டு | ēla-p-pāṭṭu n. <>ஏலேலோ+. Boatmen's song in which the words ēlō, ēlēlō occur again and again; கப்பற்பாட்டு. (W.) |
| ஏலம் 1 | ēlam n. <>ēlā. 1. Cardamon-plant, l. sh., Elettaria cardamomum; செடி வகை. 2. Cardamon; 3. Unguent for perfuming the hair of women; |
| ஏலம் 2 | ēlam n. 1. Spikenard. See சடாமாஞ்சி. (மலை.) . 2. Mistletoe berry thorn. See சங்கஞ்செடி. (மலை.) 3. Satin-wood. See முதிரை. (மலை.) |
| ஏலம் 3 | ēlam n. <>Port. leilao. [T.Tu. elamu, K. elām, M. ēlam.] Auction; போட்டியிற் பலர்முன் ஏற்றும் விலை. |
| ஏலரிசி | ēlarici n. <>ஏலம்1+. See ஏலவரிசி. . |
