Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஏய்வு | ēyvu n. <>ஏய்1-. Comparison, likeness, resemblance; உவமை. (திவா.) |
| ஏய | ēya part. <>id. An adverbial word of comparison; ஓர் உவமவுருபு. (தண்டி. 33.) |
| ஏயம் | ēyam n. <>hēya. That which deserves to be abandoned; தள்ளத்தக்கது. இது ஏயம், இது உபாதேயம்...என்று நிச்சயித்து (சி. சி. 2, 58, சிவாக்.) |
| ஏயர் | ēyar n. <>haihaya. Descendants of Hēhaya, one of Yādhava races; ஹேஹய வமிசத்தோர். ஏயர்க்கென்று நிலத்தொடு தொடர்ந்த குலப்பகை (பெருங். வத்தவ. 8, 44). |
| ஏயர்கோன்கலிக்காமநாயனார் | ēyar-kōṉ-kalikkāma-nāyaṉār n. <>id.+. Name of a canonized šaiva saint, one of 63; அறுபத்து மூவர் நாயன்மாருள் ஒருவர். (பெரியபு.) |
| ஏயான் | ēyāṉ n. <>ஏய்1-+ஆ neg. He who is too exalted to do an act; ஒரு தொழிலைச்செய்யத்தகாதவன். மாவலியை யேயானிரப்ப (திவ். பெரியதி. 1, 5, 6). |
| ஏயில் | ēyil n. <>எழில். Song, music; இசை. (ஈடு, 4, 6, 2.) |
| ஏயெனல் | ē-y-eṉal n. Onom. expr. of rapidity as uttering the sound 'ē'; ஒரு விரைவுக்குறிப்பு. ஏயெனு மாத்திரத்து (கம்பரா. பள்ளி. 72). |
| ஏயே | ē-y-ē int. <>ஏ5+ஏ5. An exclamation expressive of ridicule; பரிகாசக் குறிப்பு. (திவா.) |
| ஏர் 1 - தல் | ēr - 4 v.intr. To rise; -tr. To be like, similar; எழுதல். பனிக்கடல் பருகிவலனேர்பு (முல்லைப். 4). ஒத்தல். முத்தேர்முறுவலார் (இனி. நாற். 2). |
| ஏர் 2 | ēr n. <>ஏர்-. [T. K. ēru, M. ēr.] 1. Plough; கலப்பை. ஏரி னுழாஅ ருழவர் (குறள், 14). 2. Team of oxen and the plough; 3. Yoke of oxen; 4. Ploughing, agriculture, as an occupation; 5. As much land as can be ploughed in a day; 6. Beauty; 7. Fine appearance, bearing; 8. Development, growth; 9. Goodness; |
| ஏர்க்கட்டு | ēr-k-kaṭṭu n. <>ஏர்+. First ploughing; ஏர்ப்பூட்டு. |
| ஏர்க்களம் | ēr-k-kaḷam n. <>id.+. Threshing floor; நெற்களம். ஏர்க்களம் படும் பொருநரும் போர்க்களம் பாடும் பொருநரும் (தொல். பொ. 91, உரை.) |
| ஏர்க்களவுருவகம் | ēr-k-kaḷa-v-uruvakam n. <>id.+. (Puṟap.) Theme of metaphorically describing the battle-field as a threshing floor; போர்க்களத்தை ஏர்க்களமாக உருவகப்படுத்தும் புறத்துறை. (புறநா. 369.) |
| ஏர்க்காணிக்கை | ēr-k-kāṇikkai n. <>id.+. Plough tax; ஏர்வரி. (M. M.) |
| ஏர்க்கால் | ēr-k-kāl n. <>id.+. Shaft, as of a plough or of a carriage; thill; கலப்பை வண்டியிவற்றின் நுகங் கொளுவும் உறுப்பு. |
| ஏர்க்குறிப்பு | ēr-k-kuṟippu n. <>id.+. Daily account of ploughs at work; ஏர்விடுதலைக் குறிக்கும் தினசரிக் கணக்கு. (M. M.) |
| ஏர்கட்டு - தல் | ēr-kaṭṭu- v. intr. <>id.+. To yoke the plough; உழுபடையில் உழவுமாட்டைப்பூட்டி உழத்தொடங்குதல். நல்ல அந்தியேர் கட்டுகிற நேரம். |
| ஏர்ச்சீர் | ēr-c-cīr n. <>id.+. 1. Implements of husbandry; உழவுத்தொழிலுக்குரிய கருவிகள். ஏர்ச்சீரில்லாதவன். 2. Wealth produced by husbandry; |
| ஏர்த்தாயம் | ēr-t-tāyam n. <>id.+. Ploughing in season; பருவகாலத்துழவு. (W.) |
| ஏர்த்தொழிலர் | ēr-t-toḻilar n. <>id.+. Agriculturists, husbandmen; உழுதுண்போர். (திவா.) |
| ஏர்நாழி | ēr-nāḻi n. <>id.+. Small circular piece of wood with a hole in the centre to receive the cord, vaṭa-k-kayiṟu, by which ploughmen can regulate the depth of a furrow; கலப்பையி னோருறுப்பு. (W.) |
| ஏர்ப்ப | ērppa part. <>ஏர்-. An adverbial word of comparison; ஓர் உவமவுருபு. (தொல். பொ. 286, உரை.) |
| ஏர்ப்பு | ērppu n. <>ஈர்2-. Lock-jaw. See ஈர்ப்பு. 2. . |
| ஏர்ப்பூட்டு | ēr-p-pūṭṭu n. <>ஏர்+. Ploughing for the first time in the season on an auspicious day, begun with appropriate ceremonies; முதலுழவு. |
| ஏர்பு | ērpu n. <>ஏர்-. Ascent, elevation; rising of a heavenly body; எழுச்சி. (பிங்.) |
| ஏர்பூட்டு - தல் | ēr-pūṭṭu- v. intr. <>ஏர்+. To yoke the oxen to the plough; ஏரில் மாடுகட்டுதல். ஏர்பூட்டினல்லது (ஏரெழு. 17). |
| ஏர்மங்கலம் | ēr-maṅkalam n. <>id.+. Ancient song of benediction sung at the commencement of ploughing; பொன்னேர்பூட்டிப் பாடும் மங்கலப்பாட்டு. ஏரொடு நின்றோ ரேர்மங்கலமும். (சிலப். 10, 135.) |
