Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஏமாசலம் | ēmācalam n. <>hēman+a-cala. Mt. Mēru; மகாமேரு. ஓங்கு மேமாசலமன்ன சங்கற்பனும் (பிரபோத. 26, 93). |
| ஏமாந்துபோ - தல் | ēmāntu-pō- v. intr. <>ஏமா-+. To be disappointed; ஏமாறுதல். அவன் ஏமாந்து போனான். Colloq. |
| ஏமாப்பிரகம் | ēmāppirakam n. <>hēman+abhraka. Gold-coloured mica, phlogopite; அப்பிரகவகை. (மூ. அ.) |
| ஏமாப்பு | ēmāppu n. <>ஏமா-. 1. Security, safeguard; அரணாகை. எழுமையு மேமாப்புடைத்து (குறள், 126). 2. Support, stay; 3. Hauteur, pride; 4. Object, intention, purpose; |
| ஏமார் 1 - தல் | ēmār - v. intr. <>ஏமம்+ஆர்1-. To be confused, bewildered; மனங்கலங்குதல். ஏமார்ந் தனமெனச் சென்றுநா மறியின் (நற். 49). |
| ஏமார் 2 - த்தல் | ēmār - v. tr. <>id.+ ஆர்2-. To strengthen, establish firmly, make secure; பலப்படுத்துதல். சலத்தாற் பொருள்செய் தேமார்த்தல் (குறள், 660). |
| ஏமாளி | ēmāḷi n. <>id.+ ஆள்-. [M. ēmāḷi.] Simpleton, dunce, fool; பேதை. நெறியிலாத வேமாளி. (திருப்பு. 530). |
| ஏமாற்றம் | ēmāṟṟam n. <>ஏமாறு-. 1. State of being defrauded; வஞ்சத்துக்குள்ளாகை. 2. Deceit, fraud; 3. Confusion of mind, perplexity; |
| ஏமாற்று 1 - தல் | ēmāṟṟu - 5 v. tr. Caus. of ஏமாறு-. To hoodwink, deceive; வஞ்சித்தல். மகனுத்தியினா லவரை யேமாற்ற (இராமநா. உயுத்த. 57). |
| ஏமாற்று 2 - தல் | ēmāṟṟu - v. tr. <>ஏமம்+ஆற்று-. To protect, defend; ஏமஞ்செய்தல். மாற்றேமாற்றலிலையே (பரிபா. 4, 53). |
| ஏமாறு - தல் | ēmāṟu- 5 v. intr. <>ஏமம்1+மாறு-. To be beguiled; to be inveigled; மோசம்போதல். மோக வலியூடே யேமாறி (திருப்பு. 622). |
| ஏமிலாந்தி | ēmilānti n. <>ஏமிலாந்து-. (J.) 1. One who is despondent, confounded; திகைத்து நிற்பவன். 2. Absent-minded, forgetful person; |
| ஏமிலாந்து - தல் | ēmilāntu- v. intr. (J.) 1. To despair, stand aghast; to be at one's wit's end; திகைத்து நிற்றல். 2. To stare about, not knowing what to do; to be in a fix; to be amazed; |
| ஏமிலாப்பு | ēmilāppu n. <>ஏமிலாந்து-. Confusion, bewilderment; மனத்தடுமாற்றம். (யாழ். அக.) |
| ஏமின்கோலா | ēmiṉ-kōlā n. Flying-fish. See பறவைக்கோலா. . |
| ஏமுறு - தல் | ēmuṟu- 6 v. intr. <>ஏமம்1+உறு-. 1. To be delighted; மகிழ்வுறுதல். ஏமுறு விளையாட் டிறுதிக்கண்ணும் (தொல். பொ. 147). 2. To be changed in nature or disposition; 3. To be vexed; 4. To be mad, insane; 5. To be perplexed, bewildered; 6. To be protected, saved; 7. To be suited, be appropriate; |
| ஏய் 1 - தல் | ēy - 4 v. intr. 1. To be suited; பொருந்துதல். ஏய்ந்தபேழ்வாய் (திவ். பெரியதி. 1, 7, 3). 2. To be fit; -tr. 1. To be similar to; 2. To meet; |
| ஏய் 2 - த்தல் | ēy - 11 v. tr. Caus. of ஏய்1-. [M. ē.] 1. To tell a seeming truth; பொருந்தச் சொல்லுதல். பொய் குறளை யேய்ப்பார் (பழ. 77). 2. To resemble; to be like, be similar to; 3. To deceive, cheat, defraud; |
| ஏய்ப்ப | ēyppa part. <>ஏய்2-. An adverbial word of comparison; ஓர் உவமவுருபு. (தொல். பொ. 290.) |
| ஏய்ப்பு | ēyppu n. <>id. Deceit, fraud; வஞ்சகம். |
| ஏய்ப்புக்காட்டு - தல் | ēyppu-k-kāṭṭu- v. tr. <>ஏய்ப்பு+. To dupe, circumvent, deceive, defraud; நயவஞ்சகஞ் செய்தல். |
