Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஏற்றம்போடு - தல் | ēṟṟam-pōṭu- v. intr. <>ஏற்றம்+. 1. To set up a well sweep or picottah; துலாமரம் அமைத்தல். 2. To punish or humble one's self by taking hold of the right ear with the left hand and the left ear with the right hand and then raise and lower the body many times in quick succession; |
| ஏற்றம்வற்றம் | ēṟṟam-vaṟṟam n. <>id.+ வற்று-. Ebb and flow of the tides; கடலின் பெருக்கும் வற்றும். |
| ஏற்றமடல் | ēṟṟa-maṭal n. <>id.+. Fulcrum on which the well sweep or picottah is pivoted and which is attached to a pillar planted in the ground; துலாமரந் தாங்குங் கால். (W.) |
| ஏற்றமரம் | ēṟṟamaram n. <>id.+. Long lever or yard pivoted on an upright post in an irrigating machine as the well sweep or picottah; துலாமரம். |
| ஏற்றமொழி | ēṟṟamoḻi n. <>id.+. Praise, eulogy; புகழ்ச்சியுரை. (திவா.) |
| ஏற்றரவு | ēṟṟaravu n. <>ஏல்-. Loc. 1.The near future; மிகக்கிட்டினகாலம். 2. Front, first in place or time; |
| ஏற்றல் | ēṟṟal n. <>ஏல்-. Disputation, polmics; எதிர்க்கை. அறுவகைச் சமயமு மேற்றல். (பெருங். உஞ்சைக்.36, 243). |
| ஏற்றவாறு | ēṟṟa-v-āṟu adv. <>id.+. Suitably; ஏற்றபடி. |
| ஏற்றார் | ēṟṟār n. <>id. Foes, enemies; பகைவர். ஏற்றார் மூதூ ரெழினகை யெரியின் வீழ்வித்து (திருவாச. 3, 158). |
| ஏற்றாற்போல | ēṟṟāṟ-pōla adv. <>id.+ Appropriately, in accordance with; ஏற்றபடி. |
| ஏற்றியல் | ēṟṟiyal n. <>ஏறு2+. Taurus, a sign of the Zodiac; இடபராசி. உருகெழு வெள்ளிவந் தேற்றியல் சேர (பரிபா. 11, 4). |
| ஏற்றியிறக்கு - தல் | ēṟṟi-y-iṟakku- v. tr. <>ஏற்று-+. To perform the ceremony of waving lights, etc., before a person to avert the evil eye; திருஷ்டிகழிக்குங் சடங்குநிகழுத்துதல். |
| ஏற்றிலக்கை | ēṟṟilakkai n. <>id.+ இலக்கை. High salary; அதிகசம்பளம். ஏற்றிலக்கை பெற்றுண்கிற மிடுக்கையுடைய (ஈடு, 7, 4, 5). |
| ஏற்றிழிவு | ēṟṟiḻivu n. <>ஏற்று+இழிவு. 1. Greatness and smallness; பெருமை சிறுமை. (தொல். பொ. உரை.) 2. Hill and dale; mountain and valley; up and down; uneven surface; |
| ஏற்று 1 - தல் | ēṟṟu - 5 v. tr. Caus. of ஏறு-. [M. ēṟṟu.] 1. To lift up, raise, hoist; தூக்குதல். உத்தரத்தை யேற்றினான். 2. To increase, as price; 3. To load, as a cart or ship; to impose, as a responsibility; 4. To run over, as a wheel over a person; 5. To pile up, stow away, pack; 6. To eulogise, praise; 7. To colonize, populate; 8. To found, establish; 9. To put in, cause to enter, insert; to drive in, as a nail; 10. To ascribe, foist upon; 11. To export; 12. To light, as a lamp; 13. To think, consider; 14. To decide; 15. To offer, as an oblation; Wooden platform; |
| ஏற்றுக்கொண்டுவா[வரு] - தல் | ēṟṟu-k-koṇṭu-vā- v. intr. <>ஏல்-+. To come forward to support another; ஒருவனைத் தாங்க வருதல். அவனுக்கு ஏற்றுக்கொண்டுவந்தான். |
| ஏற்றுக்கொள்(ளு) - தல் | ēṟṟu-k-koḷ- v. tr. <>id.+. 1. To receive, admit, accept, acknowledge; அங்கீரித்துக் கொள்ளுதல். 2. To undertake, engage in, take charge of; |
