Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஏறவிறங்கப்பார் - த்தல் | ēṟa-v-iṟaṅka-p-pār- v. tr. <>id.+. To stare at, survey from head to foot; கீழும் மேலும் பார்த்தல். அவன் என்னை ஏறவிறங்கப்பார்த்தான். |
| ஏறழிஞ்சில் | ēṟaḻicil n. <>id.+ அழிஞ்சில். Sage-leaved alangium , s. tr., Alangium lamarckii, so called from the notion that when its fruits fall they climb up the tree and stick to the trunk; அழிஞ்சில்வகை. Loc. |
| ஏறன் | ēṟaṉ n. <>ஏறு2. See ஏறு2, 5 ஏருதேறன்வந்தது (நன். 392, மயிலை.). |
| ஏறாங்கடை | ēṟāṅ-kaṭai n. prob. ஏறு-+ஆம்+. Inconvenient engagement, unsuitable contract; ஒவ்வாச்செயல். (W.) |
| ஏறாங்கடைசி | ēṟāṅ-kaṭaici n. <>ஏறு-+ id.+. See ஏறுகடை. (W.) . |
| ஏறாண்முல்லை | ēṟāṇ-mullai n. <>id.+ ஆண்மை+. (Puṟap.) Theme of eulogising the traditional military renown of an eminent warrior family; ஆண்மை மிகுந்த வீரக்குடியினொழுக்கத்தைப் புகழும் புறத்துறை. (பு. வெ. 8, 22.) |
| ஏறாந்தலை | ēṟān-talai n. <>id:+ ஆம்+. Outer limits of the water of a tank; ஏரியின் நீர்ப்பிடியிறுதி. Rd. |
| ஏறாமேடு | ēṟā-mēṭu n. <>id.+ ஆ neg.+. 1. High level which one cannot reach or to which water cannot rise; உயர்ந்த மேடு. 2. Enterprise above one's power; 3. See ஏறாங்கடை. (W.) |
| ஏறாவழக்கு | ēṟā-vaḻakku n. <>id.+. Unreasonable dispute; அடாவழக்கு. ஏறாவழக்குத் தொடுக்கின்றார் (அருட்பா, i, இங்கித. 13). |
| ஏறாவேணி | ēṟā-v-ēṇi n. <>id.+. Horizontal beam set against the wall and used as a shelf; கோக்காலி. நிரம்பகல் பறியா வேறா வேணி (பதிற்றுப். 43, 33). |
| ஏறாளர் | ēṟāḷar n. <>ஏறு2+ஆள்- Warriors; soldiers; படைவீரர். (திவா.) |
| ஏறான் | ēṟāṉ n. <>ஏறு-. First boy to be present at school; பள்ளிகூடத்துக்கு முதன்முதல் வருபவன். Tinn. |
| ஏறிட்டுப்பார் - த்தல் | ēṟiṭṭu-p-pār- v. <>ஏறிடு-+. intr. To look up; - tr. To take notice of, care for; நிமிர்ந்துபார்த்தல். கவனித்தல். அவர் என்னை ஏறிட்டுப்பார்க்கவில்லை. |
| ஏறிடு - தல் | ēṟiṭu- v. tr. <>ஏறு-+இடு-. 1. To cast upon; to superimpose, as blame; ஆரோபித்தல். 2. To bend, as a bow; 3. To life up; 4. To raise; 5. To probe into; to cause to penetrate; |
| ஏறியது | ēṟiyatu n. <>id. See ஆரூடம். (சினேந். 145.) . |
| ஏறியருளப்பண்ணு - தல் | ēṟi-y-aruḷa-p-paṇṇu- v. tr. <>id.+. (Vaiṣṇ.) 1. To transcribe on a palm leaf, as the sacred books; சாத்திரங்களை யெழுதுதல். பட்டோலை பிடித்து ஏறியருளப்பண்ணிக்கொண்டு வருகையில் (குருபரம். 172, ஆறா.) 2. To cast, as an idol or image; |
| ஏறியவீரி | ēṟiya-vīri n. <>id.+vīrya. A mineral poison; சவ்வீரபாஷாணம். (W.) |
| ஏறு 1 - தல் | ēṟu- 5 v. [K. M. Tu. ēṟu.] intr. 1. To go up, as the eyebrows, in anger; உயர்தல். ஏறியு மிழிந்து மூளும் புருவங்கண் முரிய (சீவக. 2507). 2. To rise, ascend, as the heavenly bodies; to mount, climb; 3. To terminate; To abound in number, weight, measure; to increase in price, quality; 5. To spread; to be diffused, as poison; 6. To become possessed; 7. To grow; 8. To enter, to penetrate; to run into, as a thorn; 9. To settle, to be domiciled; 10. To be laden, as cargo; - tr. To cross, pass over; - aux. Auxiliary verb, as in நடந்தேறுதல்; |
| ஏறு 2 - தல் | ēṟu- n. <>ஏறு- 1. Height; உயரம். ஏறுடை வானந்தன்னுள் (பெரியபு. கண்ணப்ப.6). 2. Bull; 3. Nandhi, the chief of šiva's hosts whose face is like that of a bull or who has the form of a bull; 4. Taurus, a sign of the Zodiac; 5. Males of certain animals, as 6. Male shark; 7. Male conch; 8. The 1st nakṣatra. See அச்சுவினி. (திவா.) |
