Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஏகத்தொகை | ēka-t-tokai n. <>ēka+. Total amount; முழுத்தொகை. (W.) |
| ஏகதண்டி | ēka-taṇṭi n. <>id.+daṇdin. Ascetic who bears a single staff, dist. fr. திரிதண்டி; ஒற்றைக்கோல் திரிக்குஞ் சன்னியாசி. (குருபரம். ஆறா. 92.) |
| ஏகதந்தன் | ēka-tantaṉ n. <>id.+danta. Gaṇēša, the one-tusked; ஒற்றைத் தந்தத்தையுடையரான விநாயகர். (பிங்.) |
| ஏகதார் | ēka-tār n. <>U. ēk-tāra. One-stringed tamboura; ஒரு தந்தியுடைய வாத்தியம். |
| ஏகதாரவிரதன் | ēka-tāra-virataṉ n. <>ēka+dāra. One who adheres to one wife, monogamist; ஒருத்தியையே மனைவியாக்கொள்ளும் உறுதியுள்ளவன். (ஈடு. 4, 2, 8.) |
| ஏகதாளம் | ēka-tāḷam n. <>id.+. (Mus.) Variety of time-measure, one of catta-tāḷam, q.v.; சத்ததாளத்தொன்று. ஏகதாளத்துக் கிலகுவொன்றாமே (பரத. தாள. 24.) |
| ஏகதேசப்படு - தல் | ēka-tēca-p-paṭu- v. intr. <>ēka-dēša+. To be incorrect, as an account; வேறுபடுதல். கணக்கு ஏகதேசப்பட்டிருக்கிறது. (W.) |
| ஏகதேசம் | ēka-tēcam n. <>ēka-dēša. 1. One side; ஒருபுடை. (திருக்கோ. 70, உரை.) 2. Small degree; 3. Rareness, scarceness; 4. Anomaly, difference; 5. Blunder, mistake, discrepancy, inconsistency; 6. Unevenness; 7. Abuse; 8. That which is inferior, low in rank or character; |
| ஏகதேசவறிவு | ēka-tēca-v-aṟivu n. <>id.+. Limited knowledge; சிற்றுணர்வு. ஏகதேசவறிவைச் செய்தல் ஏகதேசப்படுந் தகுதியையுடைய பொருட்கேயன்றி ஏனையதற்குரித்தன்று (சி. சி. 1, 41, சிவஞா.) |
| ஏகதேசவுருவகம் | ēka-tēca-v-uruvakam n. <>id.+. (Rhet.) Metaphor in which the comparison is partially expressed; ஒரு பொருளின் ஏகதேசத்தை உருவகப்படுத்தும் உருவகவணி. (குறள், 24, உரை.) |
| ஏகதேசி | ēkatēci n. <>ēka-dēšin. That which is to be found only within a limited area; ஓரிடத்திருப்புடையது. இவ்வைங்கோசங்களில் .... ஏகதேசியாய்ப் போக்குவரவு செய்துநிற்கும் (சி. சி. 4, 23, சிவஞா.) |
| ஏகதேவன் | ēka-tēvaṉ n. <>ēka+. 1. One Supreme God; கடவுள். (W.) 2. Buddha; |
| ஏகநாதன் | ēka-nātaṉ n. <>id.+. God, the one Lord of the universe; தனித்தலைவன். |
| ஏகநாயகன் | ēka-nāyakaṉ n. <>id.+. See ஏகநாதன். ஏகநாயகனை மானதன் பிரவிருத்தியாலுதவும் (பிரபோத. 28, 2). |
| ஏகப்பசலி | ēka-p-pacali n. <>id.+. Land yielding one crop a year; ஒருபோக நிலம். |
| ஏகப்பிரளயம் | ēka-p-piraḷayam n. <>id.+. Huge flood; பெருவெள்ளம். Colloq. |
| ஏகப்பிழை | ēka-p-piḻai n. <>id.+. All error; முழுதும் வழு. colloq. |
| ஏகபத்திரிகை | ēka-pattirikai n. prob. id.+. Large Basil. See வெண்டுளசி. (மலை.) . |
| ஏகபத்தினிவிரதம் | ēka-pattiṉi-viratam n. <>ēka+. Faithful adherence to one wife, monogamy; ஏகதாரவிரதம். |
| ஏகபாதம் | ēka-pātam n. <>id.+. 1. Stanza of four lines all apparently alike but really made up of different sets of words and so conveying different meanings; நான்கடியும் ஒரேயெழுத்துத்தொடரால் அமைந்துவரும் மிறைக்கவி. (திவா.) 2. A one-legged savage creature; 3. A pose, one of nine irukkai, q.v.; |
| ஏகபாதர் | ēka-pātar n. <>ēka-pāda. A manifestation of šiva with one foot; ஒற்றைத்தாளர் ஆகிய சிவமூரித்தம். |
| ஏகபாவம் | ēka-pāvam n. <>ēka+bhāva. Unanimity; ஒத்த எண்ணம். |
| ஏகபாவனை | ēka-pāvaṉai n. <>id.+. Conception of oneness, as of the universe; ஒருமையாகப் பாவிக்கை. |
| ஏகபிங்கலன் | ēka-piṅkalaṉ n. <>id.+. Kubēra, having a yellow taint in one eye; பசப்படைந்த ஒற்றைக்கண்ணையுடைய குபேரன். (சூடா.) |
| ஏகபிராணன் | ēka-pirāṇaṉ n. <>id.+. Intimate friendship between persons, as if they were one; ஓருயிர்போன்ற நட்பு. (W.) |
| ஏகபுத்திரன் | ēka-puttiraṉ n. <>id.+. 1. Only son; ஒரேமகன். 2. One who has an only son; |
| ஏகபோகம் | ēka-pōkam n. <>id.+. 1. Sole enjoyment or possession; தனக்கே உரிய அனுபவம். 2. Single crop; |
