Word |
English & Tamil Meaning |
|---|---|
| என்னன் | eṉṉaṉ interrog. pron. <>எ3. See என்னவன்1. என்ன னெவ்விடத்தன் (இரகு. யாக. 96). |
| என்னாங்கு | eṉ-ṉ-āṅku adv. <>என்3+. To me, lit., to my place; என்னிடத்து. என்னாங்கு வாரா தோம்பனை (கலித். 23). |
| என்னுக்கு | eṉṉukku adv. <>எவன்2 What for; எதற்கு. என்னுக் கின்னும் பெருக்கின்றதே (திருக்கோ. 121). |
| என்னுங்காட்டில் | eṉṉuṅ-kāṭṭil conj. <>என்-+. More than; என்பதைக்காட்டிலும். (ஈடு.) |
| என்னும் | eṉ-ṉ-um adv. <>எ3+. 1. All; யாவும். (குறள், 430, உரை.) 2. Even a little; |
| என்னென்ன | eṉṉeṉṉa adv. <>என்ன+என்ன. Whatever. உமக்கு என்னென்ன வேணும்? |
| என்னே | eṉṉē int. <>என்1. 1. What; என்ன. 2. What, an exclamation of pity, wonder or surprise; |
| என்னை 1 | eṉṉai n. <>என்2+ஐ. 1. My father; என் பிதா. என்னைக்குக் கலத்தொடு செல்வதோ (கலித். 108). 2. My master, my lord; 3. My mother; |
| என்னை 2 | eṉṉai interrog. pron. <>என்1. See என்ன1. . |
| என்னோ | eṉṉō int. <>id. See என்னே. . |
| என்னோரும் | eṉṉōrum n. <>எ3+உம். 1. Persons of whatever kind; எத்தன்மையோரும். 2. All persons; |
| என | eṉa <>என்-. part. 1. See என்று1, 2. (தொல். சொல். 260.) . 2. A sign of comparison; |
| எனவ | eṉava n. <>யான். Mine, elliptical equivalent to My with a substantive supplied from the context; என்னுடையவை. எனவ கேண்மதி (புறநா. 35). |
| எனா | eṉā part. <>என்-. Connective of things enumerated, as in நிலனெனா நீரெனா; ஓரெண்ணிடைச் சொல். (நன். 428.) |
| எனின் | eṉiṉ conj. <>id. 1. If (it is) said so; என்று சொல்லின். 2. In consideration of; |
| எனினும் | eṉiṉum conj. <>எனின்+உம். 1. Even if (it is said so); என்று சொல்லினும். 2. Even if (it is so); |
| எனும் | eṉum adv. <>எ3. Even a little; சிறிதும். வழுவெனும் பாரேன் (சிலப். 16, 69). |
| எனை 1 | eṉai adv. <>என். What, why; என்ன. |
| எனை 2 | eṉai <>எ3. adj. All; - adv. However much; எல்லாம். சுட்டுணர்வெனப்படுவ, தெனைப்பொருளுண்மைகாண்டல் (மணி. 27, 62). எவ்வளவு. எனைப்பகை யுற்றாரும் (குறள், 207). |
| எனைத்து | eṉaittu adv. <>எனை2. See எனை2. எனைத்துள கேட்பன துன்பம் (கம்பரா. பள்ளி. 60). |
| எனைத்துணை | eṉai-t-tuṇai adv. <>id.+. See எனை2. (குறள், 144.) . |
| எனைத்தும் | eṉaittum n. <>எனைத்து+. All; the whole; முழுதும். சூர்கிளை யெனைத்தும் பொன்றும் (கந்தபு. மேரு. 78). |
| எனைப்பல | eṉai-p-pala adj. <>எனை2+. How many; very many; எத்தனையோ பல. எனைப் பல தீர்த்தங்கட்கும் (திருவிளை. தீர்த்த. 11). |
| எனையதும் | eṉaiyatum adv. <>id.+. Even a little; சிறிதும். நினையாது கழிந்த வைக லெனையதூஉம் வாழலென் (அகநா. 29). |
| எனையவன் | eṉaiyavaṉ pron. எ3. See எனைவன். . |
| எனையன் | eṉaiyaṉ pron. <>id. See எனைவன். . |
| எனைவர் | eṉaivar pron. <>id. Who ever; Whatever persons; யாவர் எனைவராயினும் (பெருங். வத்தவ. 3, 22). |
| எனைவன் | eṉaivaṉ pron. <>id. Who, what person; யாவன். |
| ஏ 1 | ē . Eight letter and vowel of the Tamil alphabet, the half-close front tense unrounded vowel in Tamil; எட்டாமுயிரெழுத்து. |
| ஏ 2 | ē n. 1. Increase, abundance; பெருக்கம், ஏபெற்றாகும் (தொல். சொல். 305). 2. Pile, row, tier, series; 3. Looking upward; 4. Pride, self-conceit, arrogance; 5. Letter of the 4th note of the gamut usu. denoted by ; |
| ஏ 3 | ē n. of ஏவு- 1. Shooting, as an arrow; எய்யுந்தொழில். ஏமாண்ட நெடும்புரிசை (பு. வெ. 5, 5). 2. Arrow; |
