| Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| எறிமணி | eṟi-maṇi n. <>id.+. Gong for striking the hours, also used in temples in daily worship; சேகண்டி. (பிங்.) | 
| எறிமுத்து | eṟi-muttu n. <>id.+. Chicken pox, varicella; சிறிய அம்மை. (W.) | 
| எறியாயுதம் | eṟi-y-āyutam n. <>id.+. See எரிபடை. . | 
| எறியால் | eṟiyāl n. A kind of fish; மீன் வகை. (சங். அக.) | 
| எறியீட்டி | eṟi-y-īṭṭi n. <>எறி1-+. Javelin. . | 
| எறியுப்பு | eṟi-y-uppu n. <>id.+. Rock-salt; கல்லுப்பு. (மூ. அ.) | 
| எறிவ | eṟiva n. <>id. Missiles; எறியப்படும் ஆயுதங்கள். படைதம்மு ளெறிவ வெல்லாம் (கந்தபு. திருவிளை. 47). | 
| எறிவல்லயம் | eṟi-vallayam n. <>id.+. Spear or lance, that is hurled, opp. to குத்துவல்லயம்; கைவிட்டெறியும் ஓர் ஆயுதம். (W.) | 
| எறிவளையம் | eṟi-vaḷaiyam n. <>id.+. Discus, used as a missile; சக்கராயுதம். (W.) | 
| எறிவாற்பந்து | eṟi-vāṟ-pantu n. <>id.+. Throw-ball, a boys' game in which a cloth tied into a ball with a streamer is tossed to and fro between the opposing parties; பேய்ப்பந்து விளையாட்டு. Loc. | 
| எறும்பி | eṟumpi n. prob. இரும்பு. Elephant; யானை. (திவா.) | 
| எறும்பு | eṟumpu n. [K. iṟumpu, M. eṟumbu.] Ant, emmet, Formicidae. எறும்புமூசா விறும்பூது மரபின் . . . பலி (பதிற்றுப். 30, 38). | 
| எறுழ் | eṟuḻ n. 1. Strength, might; வலிமை. சிலைநவி லெறுழ்த்தோ ளோச்சி (தொல். சொல். 388, உரை.) 2. Club; 3. Pillar, post; 4. A hill tree with red flowers; | 
| எறுழ்வலி | eṟuḻ-vali n. <>எறுழ்+. 1. Great strength; puissance; மிகுந்த வலி. இரும்பினாற் பின்னியன்ன வெறுழ்வலி முழவுத்தோளார் (சீவக. 785). 2. Mighty hero; | 
| எறுழம் | eṟuḻam n. <>id. See எறுழ், 4. . எரிபுரை யெறுழம் (குறிஞ்சிப். 66) | 
| எறுழி | eṟuḻi n. <>id. Pig; பன்றி. காதெயிற் றெறுழிவேந்தன் (திருவிளை. பன்றி. முலை. 26). | 
| எறே | eṟē part. See எறே. (அகநா. 41, உரை.) . | 
| என் 1 | eṉ <>எவன். Interrog. adv. Why, wherefore? -int. An exclamation expressive of contempt;- part. Particle having the force of whatever, whichever; என்ன. நீ வந்ததென்? ஓரிகழ்ச்சிக்குறிப்பு. (பிங்.) எது அல்லது எதையெனப் பொருள்படும் இடைச்சொல். என்னுடைய ரேனுமிலர் (குறள், 430). | 
| என் 2 | eṉ n. <>யான். Form that the pronoun யான் takes in declesion in oblique-cases; யான் என்பது வேற்றுமைப்படுகையில் அடையுந் திரிபு. | 
| என் 3 | eṉ part. 1. Ending of the 1st pers. sing. verb; தன்மை யொருமையில் வரும் வினைவிகுதி. (நன். 331.) 2. Expl. ending in nilai-maṇṭila-āciriyappā; | 
| என்(னு) - தல் | eṉ- 8 v. tr. To say, utter, express; என்று சொல்லுதல். என்னா மரபினவெனக்கூறுதலும் (தொல். சொல். 422). | 
| என்கை | eṉkai n. <>என்-. Saying; என்று சொல்லுகை. அகிலமெல்லா மவனென்கை (கந்தபு. மேடு. 26). | 
| என்ப 1 | eṉpa n. <>id. What are said to be; என்றுசொல்வன. எண்ணென்ப வேனை யெழுத்தென்ப (குறள், 392). | 
| என்ப 2 | eṉpa part. <>என்3. An expletive; அசைச்சொல். (தொல். சொல். 298, உரை.) | 
| என்பது | eṉpatu n. <>என்-. 1. An expletive word used to express either approval or disapproval of a statement; நன்றுரைத்தற்கண்ணும் இழித்தற்கண்ணும் வரும் அசைநிலை. (தொல். சொல். 280, சேனா) 2. An expletive word used as an adjunct and having mere attributive force; | 
| என்பவன் | eṉpavaṉ n. <>id. See என்பான். . | 
| என்பாபரணன் | eṉpāparaṇaṉ n. <>என்பு+ ā-bharaṇa. šiva, who wears bones a ornament; சிவன். (W.) | 
| என்பான் | eṉpāṉ n. <>என்-. 1. He who says; என்றுசொல்பவன். வள்ளுவ னென்பானோர் பேதை (வள்ளுவமா. 8). 2. He who is said to be; | 
| என்பி - த்தல் | eṉpi- 11 v. tr. caus. of என்-. [T. anipintsu.] To make one establish or prove, as a statement; ருசுப்படுத்துதல். அதை அவன்வாயினாலே உமக்கு என்பிப்பேன். (J.) | 
| என்பு 1 | eṉpu n. 1. Bone; எலும்பு. என்பு நைந்துருகி (திருவாச. 4, 80). 2. Body; | 
| என்பு 2 | eṉpu n. Grass; புல் (அக. நி.) | 
