| Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| என்புதின்றி | eṉpu-tiṉṟi n. Kind of a small plant; கழுதைக்குடத்திப்பூண்டு. (சங். அக.) | 
| என்புருக்கி | eṉpurukki n. <>என்பு1+உருக்கு-. See எலும்புருக்கி. . | 
| என்ற | eṉṟa part. <>என்-. An adjectival expression signifying comparison; ஓர் உவமவாய் பாடு. வாயென்ற பவளம் (தொல். பொ. 286, உரை). | 
| என்றவன் | eṉṟavaṉ n. <>என்று3. 1. Sun; சூரியன். என்றவன் மதலையேவும் (பாரத. பதினே. 102). 2. See என்பான். | 
| என்றா | eṉṟā part. <>என்-. A numerical connective particle; ஓரெண்ணிடைச்சொல். ஒப்பிற் புகழிற் பழியி னென்றா (தொல். சொல். 73). | 
| என்றால் | eṉṟāl conj. <>id.+. 1. If (it is) said so; என்று சொல்லின். 2. If (it is) so; | 
| என்றாலும் | eṉṟāl-um conj. <>id.+. 1. Though (it is said so); என்று சொன்னாலும். 2. Though (it is so); | 
| என்றிய | eṉṟiya adv. <>எ3. 1. What for? எதற்காக. (ஈடு, 7, 9, 2.) 2. In what way, how, by what means; | 
| என்று 1 | eṉṟu <>என்-. 1. That, used as a relative part. When it ends a quotation and connects it with the following part of the sentence; என்றுசொல்லி. 2. In special or elliptical constructions, in which it is used as a connective part. (a) between verbs, as in நரை வரு மென்றெண்ணி (நாலடி, 11): (b) between a noun and a pronoun, as in பாரியென் றெருவனுளன்: (c) between an int. and a verb, as in திடீரென்றுவந்தான்: 3. An expletive; | 
| என்று 2 | eṉṟu n. <>எ3. [K. endu, M. ennu.] What day, when, what time; எந்த நாள். இன்றுகொ லன்றுகொ லென்ருகொ லென்னாது (நாலடி, 36). | 
| என்று 3 | eṉṟu n. <>எல். Sun; சூரியன். என்றைத்தொட விண்ணி லெழுந்துறலால் (கந்தபு. விந்தகிரி. 4). | 
| என்றும் | eṉṟum adv. <>என்று2+. See என்றைக்கும். . | 
| என்றுமபாவம் | eṉṟum-apāvam n. <>என்றும்+. (Log.) Negation of an impossible thing, as in 'The hare has no horns'; ஒருபோது மில்லாமையைத் தெரிவிக்கும் அபாவம். (சி. சி. அளவை, 1, மறைஞா.) | 
| எண்றுமின்மை | eṇṟum-iṉmai n. <>id.+ See என்றுமபாவம். (வேதா. சூ. 35.) . | 
| என்றூழ் | eṉṟūḻ n. <>என்று3+ஊழ்- 1. Summer; கோடைகாலம். என்றூழ் வாடுவறல்போல (புறநா. 75). 2. Sunshine; 3. Sun; | 
| என்றூழி | eṉṟūḻi adv. <>என்று2 + ஊழி. See என்றைக்கும். (யாழ். அக.) . | 
| என்றென்றைக்கும் | eṉṟeṉṟaikkum adv. <>id.+. See என்றைக்கும். . | 
| என்றைக்கு | eṉṟaikku adv. <>id.+. What day; எந்நாள். அல்லலொழிவதென்றைக்கு (தாயு. பரா. 305). | 
| என்றைக்கும் | eṉṟaikkum adv. <>id.+. 1. (With affirmative verb.) For ever; எக்காலத்தும். 2. (With negative verb.) Even a day; 3. Even once, at any time; | 
| என்ன 1 | eṉṉa <>எ3. [M. enna.] interrog. pron. What? -v. Tenseless verb signifying what avail; யாது. என்னபயன். என்னபோதித்தும் என்ன (தாயு. தேசோ. 7). | 
| என்ன 2 | eṉṉa part. <>என்-. A sign of comparison; ஓர் உவமவுருபு. அடித் தேரல ரென்ன வஞ்சுவ னின்னைய ரென்னின் (திருக்கோ. 216). | 
| என்னணம் | eṉṉaṇam adv. <>என்ன1+வண்ணம். How, in what manner; எவ்வகையாக, என்னணஞ் சென்றனள் (திருக்கோ. 231). | 
| என்னது | eṉṉatu pron. <>எ3. What; எது. நீ என்னது சொல்கிறாய்? | 
| என்னதும் | eṉṉatum adv. <>என்னது+. Even a little; சிறிதும். என்னதூஉங் கடிமர்ந் தடிதலோம்பு (புறநா. 57) | 
| என்னர் 1 | eṉṉar pron. <>எ3+அர் suff. Who? யாவர். அருந்தொடைச் சித்திர மதனை யென்னரே யளந்தறிபவர் (இரகு. திக்கு. 196). | 
| என்னர் 2 | eṉṉar adv. <>id.+ அர் expl. Even a little; சிறிதும். என்னருங் கருதான் (பெருங். நரவாண. 2, 41). | 
| என்னவன் 1 | eṉṉavaṉ interrog. pron. <>id. 1. Who? யாவன். 2. What kind of a man; | 
| என்னவன் 2 | eṉ-ṉ-avaṉ n. <>என்3+. One who is mine; எனக்குரியவன். என்னவன் னகைப்பூண் மார்பகஞ் சேரக்கருது (மறைசை. 94). | 
