| Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| எற்று 3 | eṟṟu <>எ3. v. Of what sort (is it)?, a tenseless finite verb of impers. sing.; - int. An exclamation of pity or wonder; எத்தனமைத்து. எற்றென்னை யுற்ற துயர் (குறள், 1256). அதிசய விரக்கக்குறிப்பு. | 
| எற்றுண்(ணு) - தல் | eṟṟuṇ- v. intr. <>எற்று-+உண்-. To be tossed about; எறியப்படுதல். இருவினையெனுந்திரையி னெற்றுண்டு (தாயு. தேசோ. 2). | 
| எற்றுநூல் | eṟṟu-nūl n. <>id.+. Carpenter's line for marking a board; மரமறுக்கப் போடும் நூல். உயிர்போழ்தற் கெற்றுநூல்போன் றிருந்ததுவே (நைடத. சந்திரோ. 33). | 
| எற்றே | eṟṟē int. <>எ3. See எற்று3. (பிங்.) . | 
| எற்றைக்கும் | eṟṟaikkum adv. <>என்று+. For all time, for ever; என்றென்றைக்கும். எற்றைக்கு மேழேழ் பிறவிக்கும் (திவ். திருப்பா. 29). | 
| எற்றோ | eṟṟō int. <>ஏ3. See எற்று3. எற்றோமற் றெற்றோமற் றெற்று (தனிப்பா. i, 109, 49). | 
| எறட்டு - தல் | eṟaṭṭu- 5 v.tr. To radiate, cast forth; வீசியிறைத்தல். சந்தரனுடைய கிரணங்களானவை நெருப்பையெறட்டிச்சுட (திவ். பெரியதி. 8, 5, 3, வ்யா.). | 
| எறி 1 - தல் | eṟi - 4 v. [M. eṟi.] tr. 1. To throw, cast, fling, discharge, hurl; வீசியெறிதல். கல்லெறிந் தன்ன (நாலடி, 66). 2. To hack, cut into pieces; 3. To chop, as mutton; 4. To shiver into pieces, smash; 5. To pick, as flowers; 6. To destroy; 7. To beat, as a drum; 8. To drive, as a nail; 9. To sting. as a scorpion; 10. To reject, brush aside, as advice; 11. To leave uneaten, said of part of food; 12. To drive off, scare, away, as birds from corn; 13. To throw into the shade, outvie; 14. To rob, plunder, sack, pillage; 15. To shower, as rain; 16. To fasten, as a ring on an elephant's tusk; 17. To cause to experience; 18. To displease, irritate, insult; 19. To finger the string of a musical instrument as a yāḻ; - intr. 1. To blow, as the wind;  2. To surge, as waves of the sea; 3. To pounce or dart upon, as a bird on its prey; 4. To kick; | 
| எறி 2 | eṟi [M. eṟi.] 1. Throw, fling; வீச்சு. ஓர் எறியில் விழச்செய்தான். 2. Kick; 3. Blowing, as the wind; 4. Hint, allusion, insinuation, innuendo; | 
| எறி 3 - த்தல் | eṟi - 11 v. intr. [M. eṟi.] 1. To shine, to glitter; ஒளிவீசுதல். காட்டுக் கெறித்த நிலா (தமிழ்நா. 237). 2. To nail, fasten with nails, pin; 3. To suffocate, as smoke; to affect; 4. To spread; | 
| எறிகால் | eṟi-kāl n. <>எறி1-+. Violent wind; பெருங்காற்று. (W.) | 
| எறிகாலி | eṟi-kāli n. <>id.+. Cow that kicks; உதைகாற்பசு. (W.) | 
| எறிப்பு | eṟippu n. <>எறி3-. 1. Lustre, brightness, glitter; பிரகாசம். எறிப்பொழிந்தாங் கருக்கன் சுருக்கி (திருக்கோ. 218). 2. Hot sun; | 
| எறிபடு - தல் | eṟipaṭu- v. intr. <>எறி1-+. To be rejected, cast off; ஒதுக்கப்படுதல். எறிபட்ட பொருள். | 
| எறிபடை | eṟi-paṭai n. <>id.+. Missile; கைவிடுபடை. ஆன்றமை யெறிபடையழுவத்து (கம்பரா. கரன்வதை. 52). | 
| எறிபத்தநாயனார் | eṟi-patta-nāyaṉār n. <>id.+bhakata+. A canonized šaiva saint, one of 63; அறுபத்து மூவர் நாயன்மாருள் ஒருவர். (பெரியபு.) | 
| எறிபாவாடை | eṟi-pā-v-āṭai n. <>id.+. Cloth waved before an idol or a great person, as an act of reverence; தெய்வங்களுக்கு முன்னும் பெரியோர் முன்னும் வீசும் பாவாடை விருது. (கோயிலொ. 88.) | 
