| Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| எழுமை 2 | eḻumai n. <>எழு. 1. Seven successive births; ஏழுமுறை பிறக்கும் பிறப்பு. கல்வி யொருவற் கெழுமையு மேமாப்புடைத்து (குறள், 398). 2. Seven births in transmigration; | 
| எழுவகையளவை | eḻu-vakai-y-aḷavai n. <>id.+. Seven ways of measuring, viz., நிறுத்தளத்தல், பெய்தளத்தல், சார்த்தியளத்தல், நீட்டியளத்தல், தெறித்தளத்தல், தேங்கமுகந்தளத்தல், எண்ணியளத்தல். (தொல். எழுத். 7, உரை.) | 
| எழுவரைக்கூடி | eḻuvarai-k-kūṭi n. A mineral poison; சவ்வீரபாஷாணம். (மூ. அ.) | 
| எழுவாய் | eḻu-vāy n. <>எழு-+. 1. Beginning, origin, source; உற்பத்தி. எழுவா யிறுவா யிலாதன (தேவா. 292, 5). 2. The first; 3. (Gram.) Nominative case; 4. (Gram.) Subject; | 
| எழுவாயெழுஞ்சனி | eḻuvāy-eḻu-caṉi n. <>id.+. The 10th nakṣatra. See மகம். (திவா.) . | 
| எழுவான் | eḻuvāṉ n. <>id. The east, as the place of sunrise, opp. to படுவான், கிழக்குததிசை. எழுவான் றொடங்கிப் படுவான் மட்டும். | 
| எழுவு - தல் | eḻuvu 5 v. tr. caus. of எழு-. 1. To cause to rise, raise; எழச்செய்தல். எழுவுஞ்சீப்பு (சிலப். 15, 215). 2. To produce or call forth sound; | 
| எள் 1 | eḷ n. [M. M. eḷ, Tu. eṇme.] 1. Sesame, a plant cultivated for the oil obtained from its seed, Sesamum indicum; சிடிவகை. எட்பகவன்ன சிறுமைத்தே (குறள், 889). 2. A weight=8 mustard seeds; | 
| எள் 2 | eḷ n. <>எள்ளு-. Reproach, censure, condemnation; நிந்தை. எள்ளூறியகருமம் நேர்ந்தாளிவள் (கம்பரா. நகர்நீ. 109). | 
| எள்கு - தல் | eḷku- 5 v. tr. <>id. 1. To despise, slight; இகழ்தல். எள்கலின்றி . . . ஈசனைவழிபாடுசெய்வாள் (தேவா. 1049, 10). 2. To fear; 3. To deceive; - intr. 1. To be bashful, to hesitate; 2. To be in difficulty; | 
| எள்ள | eḷḷa part. <>id. An adverbial word of comparison; ஓர் உவமவுருபு. எள்ளவிழைய . . . பயனிலையுவமம் (தொல். பொ. 289). | 
| எள்ளல் | eḷḷal n. <>id. Reproach, laughing to scorn; இகழ்ச்சி. எள்ளவிளமை. . . மடனென்று . . . நகைநான்கென்ப (தொல். பொ. 252). | 
| எள்ளளவும் | eḷ-ḷ-aḷavum adv. <>எள்1+. Not even a little, not even as much as a sesamum seed; சிறிதளவும். யானெனுமகந்தைதா னெள்ளளவு மாறவிலை (தயு. ஆனந்த. 9). | 
| எள்ளற்பாடு | eḷḷaṟ-pāṭu n. <>எள்ளு-.+. Scorn, reproach; இகழ்ச்சி. எள்ளற்பா டுள்ளிட்டெல்லாம் (சீவக. 2799). | 
| எள்ளிடை | eḷ-ḷ-iṭai n. <>எள்1+. Merest trifle; எள்ளளவு. | 
| எள்ளு 1 - தல் | eḷḷu - 5 v. tr. 1. To ignore, disregard; இகழ்தல். உருவுகண் டெள்ளாமை வேண்டும் (குறள், 667). 2. To ridicule, deride, laugh at; 3. To equal; | 
| எள்ளு 2 | eḷḷu n. Sesame. See எள்1. . | 
| எள்ளுக்கட்டை | eḷḷu-k-kaṭṭai n. <>எள்ளு+. Sesamum stubble; எள்ளுத்தாள். (W.) | 
| எள்ளுச்சாதம் | eḷḷu-c-cātam n. <>id.+. See எள்ளோதனம். . | 
| எள்ளுச்செவி | eḷḷu-c-cevi n. prob. id.+. A small plant; ஒரு பூடு. (சங். அக.) | 
| எள்ளுண்டை | eḷ-ḷ-uṇṭai n. <>எள்1+. Pastry balls made of sesame; எள்ளும் வெல்லமுங் கலந்து செய்யப்படும் சிற்றுண்டி. இடியவலோடெள்ளுண்டை (பதினொ. கபி. மூத். 3). | 
| எள்ளுந்தண்ணீருமிறை - த்தல் | eḷḷuntaṇṇīrum-iṟai- v. intr. <>id.+. To offer water with sesame on sacrificial grass to the spirits of the dead; பிதிருதருப்பணஞ்செய்தல். | 
| எள்ளுநர் | eḷḷunar n. <>எள்ளு-. Scorners, revilers; இகழ்பவர். எள்ளுநர்கள்சாய (சீவக. 847). | 
| எள்ளுப்பிண்ணாக்கு | eḷḷu-p-piṇṇākku n. <>எள்ளு+. Oil cake of pressed sesame; எண்ணெயாடியெடுத்த எட்கோது. | 
| எள்ளுருண்டை | eḷ-ḷ-uruṇṭai n. <>எள்1+. See எள்ளூண்டை. . | 
| எள்ளுரை | eḷ-ḷ-urai n. <>எள்ளு-+. Disrespectful, disparaging, speech; இகழ்ச்சியுரை. இதுதக் கென்போர்க் கெள்ளுரையாயது (மணி. 18, 10). | 
| எள்ளோதனம் | eḷ-ḷ-ōtaṉam n. <>எள்1+. Cooked rice mixed with sesame powder and ghee; சித்திரான்னவகை. (சங். அக.) | 
| எள்ளோரை | eḷ-ḷ-ōrai n. <>id.+. See எள்ளோதனம். Colloq. . | 
