| Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| எழுநரகம் | eḻu-narakam n. <>id.+. The seven hells or places of torment for sinners, viz. (a) கூடசாலம், கும்பிபாகம், அள்ளல், அதோகதி, ஆர்வம், பூதி, செந்து. (பிங்.) -or (b) (Jaina.) பெருங் களிற்றுவட்டம், பெருமணல்வட்டம், எரிபரல்வட்டம், அரிபடைவட்டம், புகைவட்டம், பெருங்கீழ்வட்டம், இருள்வட்டம். (திவா. எழுவகையான நரகங்கள். இனியார்புகுவா ரெழுநரகவாசல் (திவ். இயற். 1, 87). | 
| எழுநா | eḻu-nā n. <>id.+. 1. Agni, the god of fire, supposed to have seven tongues, viz., காளி, கராளி, மனோசவை, சுலோகிதை, சுதூம்பரவருணை, புலிங்கினி, விசுவரூபி; ஏழுநாவையுடையதாகிய அக்கினி. (திவா.) 2. Ceylon leadwort. See கொடுவேலி. (மலை.) | 
| எழுநாயிறு | eḻu-nāyiṟu n. <>எழு-+. See எழுஞாயிறு. (தைலவ. தைல. 29, உரை.) . | 
| எழுநிலைமாடம் | eḻu-nilai-māṭam n. <>ஏழு4+ Palace seven stories high; ஏழடுக்கு மாளிகை. இன்னகிலாவிவிம்மு மெழுநிலை மாடஞ்சேர்ந்தும் (சீவக. 2840). | 
| எழுநூறு | eḻu-nūṟu n. <>id.+. Seven hundred. . | 
| எழுப்பம் | eḻuppam n. <>எழு-. (J.) 1. Rising, getting up; எழுகை. 2. Growth, height, elevation; | 
| எழுப்பு 1 - தல் | eḻuppu - 5 v. tr. caus. of எழு- 1. To cause or help to rise; to erect, as a building; எழும்பச்செய்தல். 2. To awake, rouse; 3. To raise from the dead, resuscitate, restore to life; 4. To excite, stimulate, inspire; 5. To instigate, agitate; to inflame, as the passions; 6. To raise, as the voice in speaking or singing; to call forth, as melody, from an instrument; | 
| எழுப்பு 2 | eḻuppu n. <>எழுப்பு-. Rousing, waking; எழுப்புகை. (W.) | 
| எழுபது | eḻu-patu n. <>ஏழு+பத்து. Seventy. . | 
| எழுபவம் | eḻu-pavam n. <>id.+bhava. The seven kinds of births, in metempsychosis, viz., தேவர், மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர் வாழ்வன, தாவரம்; ஏழுவகையான பிறவி. (பிங்.) | 
| எழுபிறப்பு | eḻu-piṟappu n. <>id.+. 1. See எழுபவம். எழுபிறப்புந் தீயவைதீண்டா (குறள், 62). 2. See எழுமை2. (குறள், 107, உரை.) | 
| எழுபோது | eḻu-pōtu n. <>எழு-+. Time of sunrise; உதயகாலம். பட்டபோ தெழுபோ தறியாள் (திவ். திருவாய். 2, 4, 9). | 
| எழும்பு - தல் | eḻumpu- 5 v. intr. <>id. [M. eḻumbu.] See எழு-. . | 
| எழுமதம் 1 | eḻu-matam n. <>எழு+ mata. Seven kinds of attitude of an author towards a certain subject, viz., உடன்படல், மறுத்தல், பிறர்தம்மதமேற்கொண்டுகளைவு, தாஅனாட்டித்தனாதுநிறுப்பு, இருவர்மாறுகோளொருதலைதுணிவு, பிறர்நூற்குற்றங்காட்டல், பிறிதொடுபடாஅன்றன்மதங்கொளல்; நூலாசிரியருக்குரிய எழுவகைக்கொள்கை. (நன். 11.) | 
| எழுமதம் 2 | eḻu-matam n. <>id.+mada. Seven kinds of fluid exuding from seven parts of the body of the male elephant when he is in rut; கன்னமிரண்டு கண்ணிரண்டு கரத்துவாரமிரண்டு கோசம் ஒன்று என்னும் ஏழிடத்திலிருந்து யானைக்குத் தோன்றும் மதநீர். | 
| எழுமலை | eḻu-malai n. <>எழு-+. The Eastern Mountain from behind which the sun is supposed to rise; உதயகிரி. எழுமலை விழுமலை புடைமணி யாக (கல்லா. 19). | 
| எழுமான் | eḻumāṉ n. Spurge sprout, Boucerosia umbellata; ஒரு பூண்டு. (W.) | 
| எழுமான்புலி | eḻumāṉpuli n. See எழுமான். (W.) . | 
| எழுமீன் | eḻu-mīṉ n. <>எழு+. The seven principal stars of Ursa Major, Charles's Wain; சப்தரிஷிமண்டலம். கைதொழு மரபி னெழுமீன் போல (நற். 231). | 
| எழுமுகனை | eḻu-mukaṉai n. <>எழு-+முனை. Beginning, as of a process or of a period; தொடக்கம். (W.) | 
| எழுமுடி | eḻu-muṭi n. <>ஏழு+. Cēra's necklace fashioned out of the crowns of seven conquered kings; வெல்லப்பட்ட ஏழரசர் முடியாற் செய்த சேரன்மாலை. எழுமுடி கெழிஇய திருஞெம ரகலத்து (பதிற்றுப். 14, 11). | 
| எழுமுரசு | eḻu-muracu n. <>ஏழு-+. Drum beaten to announce the starting of a king on a journey; அரசனது பிரயாணத்தை யறிவிக்கும் முரசு. எழுக வான்பயண மென்றங் கெழுமுர சியம்புவித்தார் (கோயிற்பு. இரணிய. 116). | 
| எழுமுனிவர் | eḻu-muṉivar n. <>ஏழு+. The seven sages. See ஸப்தரிஷிகள். (சூடா.) . | 
| எழுமை 1 | eḻumai n. <>எழு-. [M. eḻuma.] Height; உயர்ச்சி. (திவா.) | 
