| Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| எழுத்துச்சீலை | eḻuttu-c-cīlai n. <>id.+. Chintz; சீத்திரந்தீட்டிய சீலை. (W.) | 
| எழுத்துச்சுருக்கம் | eḻuttu-c-curukkam n. <>id.+. 1. See அக்கரச்சுதகம். (W.) . 2. Contraction of words or phrases by the use of hypen or dots in place of the omitted letters in the middle, as இ-ள் for இதன் பொருள், எ-று for என்றவாறு; | 
| எழுத்துப்படி - தல் | eḻuttu-p-paṭi- v. intr. <>id.+. To become settled, as the hand-writting; கையெழுத்து ஒரு நிலைப்படுதல். | 
| எழுத்துப்பிசகு | eḻuttu-p-picaku n. <>id.+. See எழுத்துப்பிழை. . | 
| எழுத்துப்பிழை | eḻuttu-p-piḻai n. <>id.+. Misspelling, slip of the pen; எழுத்துத்தவறு. | 
| எழுத்துப்பொருத்தம் | eḻuttu-p-poruttam n. <>id.+. 1. (Poet.) Rule of propriety which enjoins that the word commencing a poem should consist of three, five, seven, or nine letters including the mute consonants, and not of four, six, or eight, one of ten ceyyuṉmutaṉ-moḻi-p-poruttam; q.v.; ஒருகாப்பியத்தின் தொடக்கச்செய்யுளின் முதன்மொழி ஒற்றெழுத்துட்பட மூன்றைந்து ஏழொன்ப தென்னும் எழுத்துக்களுள் ஏதேனும் ஒன்றைப் பெற்றுவருவதாகிய செய்யுண் முதன்மொழிப் பொருத்த வகை. (வெண்பாப். முதன். 4, தலைப்பு.) 2. Choosing such a name for a child, as begins with one of the letters ascribed in astrology to the nakṣatra under which the child was born; | 
| எழுத்துமறைவேளை | eḻuttu-maṟai-vēḷai n. <>id.+. Dusk of the evening, which blurs written characters; மாலைப்போது. | 
| எழுத்துவருத்தனம் | eḻuttu-varuttaṉam n. <>id.+vardhana. See அக்கரவாத்தனம். (தண்டி. 95.) . | 
| எழுத்துவாங்கு - தல் | eḻuttu-vāṅku- v. intr. <>id.+. 1. To imprint one's lord's name on one's breast, in token of becoming his slave; அடிமையாதற்கு அறிகுறியாக ஆண்டான்பெயரை மார்பிலே யெழுதக்கொள்ளுதல். தேவசாதியானது எழுத்து வாங்கும்படியாக வாயிற்று, தோளுந் தோண்மாலையுமாய் . . . கடைந்தபடி (ஈடு, 1, 3, 11). 2. To take one's signature or receipt; | 
| எழுத்துவிசேஷமாய் | eḻuttu-vicēṣam-āy adv. <>id.+. By letter; கடிதமூலம். (W.) | 
| எழுத்துவெட்டுதல் | eḻuttu-veṭṭutal n. <>id.+. Engraving letters; கல் பாத்திரமுதலியவற்றில் எழுத்துச் செதுக்குகை. (C. E. M.) | 
| எழுத்துவேலை | eḻuttu-vēlai n. <>id.+. 1. Writing, transcribing, copying, as an employment; இராயசம். 2. Chintz-painting; | 
| எழுத்தூசி | eḻuttūci n. <>id.+ ஊசி. See எழுத்தாணி. மையெழுத்தூசியின் . . . எழுத்திட்டாள் (சீவக. 1767). | 
| எழுத்தெண்ணிப்படி - த்தல் | eḻutteṇṇi-p-paṭi- v. tr. <>id.+ எண்-+. To study a book so carefully as to obtain a thorough grasp of its contents; ஒன்றும்விடாது கற்றல். தொல்காப்பிய முதலிய நூல்களை எழுத்தெண்ணிப்படித்த சுவாமிநாத மூர்த்தியா! (இலக். கொத். சரித். பக். 4). | 
| எழுதகம் | eḻutakam n. <>எழுது-+. (Arch.) 1. Cornice work; சிற்பவேலயினொன்று. 2. Ornamental stone base for a pillar, | 
| எழுதகமால் | eḻutaka-māl n. <>எழுதகம்+ U. mal. Wooden mould used in cornice work; எழுதகவேலை செய்ய மரததாலியன்ற கட்டளை. (C. E. M.) | 
| எழுதம் | eḻutam n. <>எழுது. See எழுதகம். Loc. . | 
| எழுதாக்கிளவி | eḻutā-k-kiḷavi n. <>எழுது-+ஆ neg.+. The Vēdas, as unwritten and handed down orally; வேதம். (பிங்.) | 
| எழுதாக்கேள்வி | eḻutā-k-kēḷvi n. <>id.+id.+. See எழுதாக்கிளவி. (திவா.) . | 
| எழுதாவெழுத்து | eḻutā-v-eḻuttu n. <>id.+id.+. Printing type, as not written; அச்செழுத்து. Mod. | 
| எழுதிக்கொடு - த்தல் | eḻuti-k-koṭu- v. tr. <>id.+. To grant in writing, to write and deliver, as a voucher, an agreement, a contract; எழுத்துமூலமாக ஆதரவுகொடுத்தல். திருக்கண்களுக்காயிற்று அநந்யார்ஹமாக எழுதிக்கொடுத்தது (ஈடு, 7, 3, 3). | 
| எழுதிக்கொள்(ளு) - தல் | eḻuti-k-koḷ- v. tr. <>id.+. 1. To enrol; பதிவுசெய்தல். புதிதாக வின்னமுநீ சிலசேனை யெடுத்தெழுதிக் கொள்கென்றான் (திருவிளை. மெய்க்கா. 5). 2. To make one a boundslave by registration; 3. To make a written submission to, petition, a great person; | 
