Word |
English & Tamil Meaning |
|---|---|
| எழுத்ததிகாரம் | eḻuttatikāram n. <>id.+adhi-kāra. (Gram.) Orthography; எழுத்திலகணங் கூறும் பகுதி. |
| எழுத்தந்தாதி | eḻuttantāti n. <>id.+antādi (Pros.) Concatenation in which the letter at the end of a line of verse begins the next line; ஒரு செய்யுளில் ஓரடியினற்றெழுத்து அடுத்த அடியின்முதலெழுத்தாகவரத தொடுப்பது. (யாப். வி. 52, பக். 184.) |
| எழுத்தலங்காரம் | eḻuttalaṅkāram n. <>id.+. Play on lettters; எழுத்தைக்கூட்டல் குறைத்தல் மாற்றல்களால் தோன்றும் அழகு. (W.) |
| எழுத்தலிசை | eḻuttal-icai n. <>id.+ அல் neg.+. Sounds not reducible to writing, as a cough, a sneeze, etc.,; inarticulate sounds; எழுத்த தோசையாகாத முற்கு ஈளை முதலியவை. எழுத்தலிசையினை (இலக். வி. 755). |
| எழுத்தறப்படி - த்தல் | eḻuttaṟṟa-p-paṭi- v. intr. <>id.+ அற+. To read with clear enunciation, pronounce words distinctly; எழுத்தோசை தெளிவாக வாசித்தல். (W.) |
| எழுத்தாணி | eḻuttāṇi n. <>id.+āni, [M. eḻuttāṇi.] 1. Stylus for writing on palmyra leaf; ஓலையிலெழுதுதற்குரிய கருவி. அங்கூரெழுத்தாணி தன்கோடாக (பாரத. தற்சிறப்புப். 1). 2. Style-plant, having a style-like flower, Launoea pinnatifida; |
| எழுத்தாளன் | eḻuttāḷaṉ n. <>id.+. 1. Scholar, savant; புலவன். மதுரை எழுத்தாளன் சேந்தம்பூதனார் (குறுந். 90, குறிப்பு). 2. Writter, clerk; |
| எழுத்தானந்தம் | eḻuttāṉantam n. <>id.+. (Pros.) Use of alapeṭai in the name of a hero, believed to portend evil; a fault in versification; பாடப்படுவோன் பெயரைச்சார்த்தி எழுத்தளபெழப் பாடுவதாகிய செய்யுட் குற்றம். (யாப். வி. 96, பக். 518.) |
| எழுத்திடு - தல் | eḻuttiṭu- v. intr. <>id.+ இடு-. To put one's signature; கைச்சாத்திடுதல். எழுத்திட்டுத் தாருங்கோள் (ஈடு, 5, 10, 4). |
| எழுத்தியல் | eḻuttiyal n. <>id.+. (Gram.) Section of orthography, which treats about the sounds of speech, and their classification, etc.; எழுத்தினகத் திலக்கணத்தைக்கூறும் பகுதி. |
| எழுத்திலாவோசை | eḻuttilā-v-ōcai n. <>id.+ இல் neg.+ ஓசை. See எழுத்திலிசை. (திவா.) . |
| எழுத்தின்கிழத்தி | eḻuttiṇ-kiḻatti n. <>id.+. Sarasvatī, the goddes of letters; சரசுவதி. (பிங்.) |
| எழுத்து | eḻuttu n. <>எழுது-. [M. eḻuttu.] 1. Letter, character; அட்சரம். 2. Writing; 3. Membranous intervals on the skull, fancied as written lines of destiny; 4. The lines in the palm of the hand; 5. Grammar; 6. Letters, science, learning; 7. Signature; 8. Bond, written engagement; 9. Painting, picture, drawing; 10. Entry, enrolment; |
| எழுத்துக்ககப்படு - தல் | eḻuttukkakappaṭu- v. intr. <>எழுத்து+. To suffer one's fate, as a widows; கெடுவிதயின்பயனை அநுபவிக்கவமைதல். அவள் எழுத்துக்ககப்பட்டுக்கொண்டாள். |
| எழுத்துக்காரன் | eḻuttu-k-kāraṉ n. <>id.+. 1. Chirographer; நல்லெழுத்துடையோன். 2. Writer, scribe, clerk, copyist, amanuensis; 3. Painter, limner; |
| எழுத்துக்கிறுக்கு | eḻuttu-k-kiṟukku n. <>id.+. (J.) 1. Making a written agreement; உடன்படிக்கை எழுதுகை. 2. Written agreement; |
| எழுத்துக்குற்றம் | eḻuttu-k-kuṟṟam n. <>id.+. 1. Orthographical error; எழுத்திலக்கணவழு. 2. Fault in versification due to the use of inauspicious letters; |
| எழுத்துக்கூட்டு - தல் | eḻuttu-k-kūṭṭu- v. tr. <>id.+. To spell, as a word.; to pronounce in order the orthographical units of a word and then pronounce the word as completed, dist. fr. reading the word-unit straight off; அட்சரங்களைத் தனித்தனியே உச்சரித்து வார்த்தையைச் சொல்லுதல். |
| எழுத்தச்சந்தி | eḻuttu-c-canti n. <>id.+san-dhi. Coalescence of letters in the formation or combination of words; எழுத்துப் புணர்ச்சி. (W.) |
| எழுத்துச்சாரியை | eḻuttu-c-cāriyai n. <>id.+.(Gram.) 1. Term used in designating a letter of the alphabet, as கரம், காரம், கான்; எழுத்துக்களைச்சொல்லுகையிற் சேர்க்கப்படுகின்ற சாரியைச்சொற்கள். (நன். 126, உரை.) 2. Single letter functioning as euphonic augment, as ஏ in கலனேதூணி; |
