Word |
English & Tamil Meaning |
|---|---|
| எவ்வளவு | e-v-v-aḷavu adj. <>id.+ அளவு. How much? எம்மட்டு. |
| எவ்வனம் | evvaṉam n. <>yauvana. Youth; இளமை. மூப்பினைக் கவர்ந்து . . . எவ்வனந்தனை . . . வழங்கிட (நல். பாரத. யயாதி. 100). |
| எவ்வாறு | e-v-v-āṟu adv. <>எ3 + ஆறு. In what manner, how எப்படி |
| எவ்வு - தல் | evvu- 5 v. <>ஏவு- tr. To discharge, as a missile or an arrow; -intr. To rise, spring up; செலுத்துதல். தீக்கணை மேருவைக் கால்வளைத்தெவ்வினான் (கம்பர. ஊர்தே. 177.) எழும்புதல். Loc. |
| எவ்வெட்டு | e-v-v-eṭṭu n. <>எட்டு+எட்டு. Eight each, dist. fr. எண்ணெட்டு; தனித்தனி எட்டு. |
| எவ்வெலாம் | e-v-v-elām pron. <>எ3+எல்லாம். Whatever; உள்ளவெல்லாம். எவ்வெலாவண்டத் துறைதரு மருத்தும் (கந்தபு. சூரனர. 11). |
| எவ்வெவர் | e-v-v-evar n. <>id.+ எவர். Whatsover persons; எவரெவர். எவ்வெவர்க்கு மிறைவற்கு நல்கியே (கந்தபு திருவிளை. 123). |
| எவ்வெவை | ev-v-evai n. <>எவ் + எவை. Whatsover things; எவையெவை. |
| எவ்வேழு | e-v-v-ēḻu n. <>ஏழு+ஏழு. Seven each, dist. fr. ஏழேழு; தனித்தனி ஏழு. |
| எவ்வை | evvai n. prob. எம்+வை. cf. தவ்வை. Our younger sister; எம் தங்கை. எவ்வைக்கெவன் பெரி தளிக்கு மென்ப (ஐங்குறு. 89). |
| எவட்சாரம் | evaṭcāram n. <>yava-kṣāra. Saltpetre. See யவட்சாரம். (W.) . |
| எவண் | evaṇ adv. <>எ3. 1. Where; எவ்விடம். எவண் படர்ந்தனளென (காஞ்சிப்பு. கழுவாய். 91). 2. How; |
| எவரும் | evar-um n. <>id.+. Everyone, anyone; யாரும். இன்னோ ரெவருஞ் சிவனேயென் றிரங்க லோடும் (கந்தபு. திருக்கல். 49). |
| எவள் | evaḷ interrog. pron. <>id. What woman, which woman; யாவள். |
| எவன் 1 | evaṉ interrog. pron. <>எ3 + அன் suff. pers. masc. Which man; யாவன். |
| எவன் 2 | evaṉ <>id. impers. interrog. pron. What, used in both numbers; - adv. 1. How, in what manner; 2. Why; - int. An exclamation of wonder or pity; யாது, யாவை. வானுயர் தோற்ற மெவன்செய்யும் (குறள், 272). எவ்வண்ணம். அருளோனாவதை யெவனோ (ஞானா. 46, 6). ஏன். அதிசய விரக்கச் சொல். (சூடா.) |
| எவை | evai interrog. pron. <>எ3. pl. of எது. Which things; யாவை. |
| எழல் | eḻal n. <>எழு-. 1. Enthusiasm, elation; கிளர்ச்சி. அமரை வேட்டுவந் தெழலுறு மனத்தினர் (கம்பரா. கரன்வ. 43). 2. Starting, departing; 3. Originating, emanating; |
| எழவாங்கு - தல் | eḻa-vāṅku- v. intr. <>id.+. To go to a distance; தூரப்போதல். முகங்காட்டாதே எழவாங்கி யிருக்கை (ஈடு, 4, 7, 2). |
| எழாநிலை | eḻā-nilai n. <>எழு- + ஆ neg.+ நிலை. Stable for elephant; யானை கட்டுங் கூடம். எழாநிலை புகாஅ வினங்கடிசீற்றத்து . . . களிறு (பெருங். உஞ்சைக். 38, 91). |
| எழாயிரம் | eḻāyiram n. <>எழு + ஆயிரம். The numbeer 7,000. (தொல். எழுத்து. 391, உரை.) |
| எழால் | eḻāl n. <>எழு-. 1. Kind of bird; புல்லூறென்னும் பறவை. குடுமி யெழாலொடு கொண்டுகிழக் கிழிய (பதிற்றுப். 36, 10). 2. Musical notes of the yāḷ; 3. The stringed musical instrument known as yāḷ; 4. Human voice; |
| எழில் | eḻil n. <>id. 1. Beauty, comeliness, gracefulness; அழகு. எழுதெழி லம்பலம் (பரிபா. 18, 28). 2. Youth; 3. Imposing appearance; 4. Height, loftiness, elevation; 5. Bigness, bulkiness; 6. Strength; 7. Colour, colouring, paint; 8. Suspicious circumstance; 9. Hint; 10. Witticism, epigram; |
| எழில்காட்டு - தல் | eḻil-kāṭṭu- v. intr. <>எழில்+. To give an inkling of; குறிப்புக்காட்டுதல். (W.) |
| எழில்சொல்லு - தல் | eḻil-collu- v. tr. <>id.+. To hint by words, allude to; குறிப்பிற்சொல்லுதல். (W.) |
| எழிலி | eḻili n. <>எழு-. Cloud; மேகம். எழிலி தானல்காதாகி விடின் (குறள், 17). |
| எழிலிய | eḻiliya adj. <>எழில். Beautiful, comely; அழகுவாய்ந்த. எழிலிய செம்பொறியாகத்து (புறநா. 68, 5). |
| எழிற்கை | eḻiṟ-kai n. <>id.+. Graceful gesture of the hand in dancing; அழகுபெறக் காட்டுங்கை. பிண்டியும் பிணையலு மெழிற்கையுந் தொழிற்கையும் (சிலப், 3, 18). |
