Word |
English & Tamil Meaning |
|---|---|
| எலிவளை | eli-vaḷai n. <>id.+. See எலிப்பொந்து. . |
| எலிவாற்பந்து | eli-vāṟ-pantu n. A game of ball. See எறிவாற்பந்து. . |
| எலு 1 | elu n. [T. elugu.] Bear; கரடி. (பிங்.) |
| எலு 2 | elu n. Green fruit that is just being formed from the blossom; பிஞ்சு. (பிங்.) |
| எலும்பன் | elumpaṉ n. <>எலும்பு. One who is almost a skeleton, emaciated man; எலும்புதோன்ற மெலிந்தவன். |
| எலும்பி 1 | elumpi n. <>id. Emaciated woman; எலும்புதோன்ற மெலிந்தவள். |
| எலும்பி 2 | elumpi n. Hill olive with dichotomous flowers. See காட்டுமஞ்சரி. (மூ. அ.) . |
| எலும்பிலி | elumpili n. <>எலும்பு+இலி. Worm, or any creature that has no bones; புழுமுதலிய எலும்பில்லாத பிராணி. |
| எலும்பு | elumpu n. [T. emmu, K. Tu. elu, M. elumbu.] Bone. நரம்போ டெலும்பணிந்து (திருவாச. 12, 11). |
| எலும்புக்கரி | elumpu-k-kari n. <>எலும்பு+. Animal charcoal, residue of bones burnt, Carbo animalis; எலும்பைச்சுட்டாக்கிய கரி. (M. M.) |
| எலும்புக்கூடு | elumpu-k-kūṭu n. <>id.+. Skeleton; கங்காளம். |
| எலும்புக்கோறை | elumpu-k-kōṟai n. <>id.+. Hollow interior of a bone; எலும்புத்துவாரம். (யாழ். அக.) |
| எலும்புச்சீப்பு | elumpu-c-cīppu n. <>id.+. (W.) 1. Rib; விலாவெலும்பு. 2. Comb made of bone; |
| எலும்புப்பிசகல் | elumpu-p-picakal n. <>id.+. Dislocation of a joint; எலும்பின்பொருத்து நிலைமாறுகை. |
| எலும்புமுரிவு | elumpu-murivu n. <>id.+. Fracture of a bone; எலும்பு ஒடிகை. |
| எலும்புருக்கி | elumpurukki n. <>id.+ உருக்கு- 1. Variety of tuberculosis, causing great emaciation; க்ஷயரோகவகை. 2. Whites, leucorrhoea; |
| எலும்புவிரணம் | elumpu-viraṇam n. <>id.+. Caries and necrosis of bone; எலும்பைப் பற்றிய புண். |
| எலும்புவீக்கம் | elumpu-vīkkam n. <>id.+. Inflammation of the enveloping membrane of bones, periostitis; எலும்பைச்சுற்றிய தசைவீக்கம். |
| எலுமிச்சந்துளசி | elumiccan-tuḷaci n. prob. எலுமிச்சை+. Large basil. See பெருந்துளசி. (L.) . |
| எலுமிச்சம்பழச்செண்டு | elumiccampaḻa-c-ceṇṭu n. <>எலுமிச்சை+. Nosegay with a lemon at the top; எலுமிச்சம்பழத்தைத் தலையிலுடைய செண்டு. (W.) |
| எலுமிச்சம்பழச்சோறு | elumiccam-paḻa-c-cōṟu n. <>id.+. Boiled rice mixed with lime juice; எலுமிச்சம்பழச்சாறுவிட்டுப் பிசைந்த சோறு. எலுமிச்சம்பழச் சோற்றிலே தடித்தேன் (அருட்பா, vi, அவாவறுப்பு, 7). |
| எலுமிச்சம்பழவுப்பு | elumiccam-paḻa-vuppu n. <>id.+. Salt of lemon; உப்புவகை. |
| எலுமிச்சை | elumiccai n. cf. likuca. [K. ilimici, M. elumicca.] 1. Sour lime, l. tr., Citrus medica acida. ஒரு மரம். 2. Fruit of the sour lime-tree; 3. Sweet lime. See தித்திப்பெலுமிச்சை. (L.) 4. Bergamotte orange, m. tr., Citrus aurantium bergamia; |
| எலுவ | eluva n. Man-friend, always in the voc; தோழன் முன்னிலைப்பெயர். (தொல். பொ. 220, உரை.) |
| எலுவல் | eluval n. Man-friend; தோழன். அரவெழுதிய கொடியுமுடையவ னெலுவலும் (பாரத. பதினாறாம். 28). |
| எலுவன் | eluvaṉ n. See எலுவல். (திவா.) . |
| எலுவை | eluvai n. Lady-companion; தோழி. உனக்கெலுவை யாகுவதெ னெண்ணம் (பாரத. நாடுகரந். 33). |
| எவ் | ev interrog. impers, pron. <>எ3. [T. evi.] What, which things; எவை. எவ்வந்தன? |
| எவ்வது | evvatu adv. <>id. How? in what manner? எவ்விதம். எவ்வ துறைவ துலகம் (குறள், 426). |
| எவ்வம் | evvam n. prob. எவ்வு-. 1. Affliction, distress; துன்பம். கூர்ந்தவெவ்வம்விட (புறநா. 393). 2. Incurability, persistence, as of a disease; 3. Inferiority, degradation, wretchedness; 4. Self-respect; 5. Deceitfulness, guile; 6. Dislike, aversion; |
| எவ்வரும் | evvar-um pron. <>எ3. Anyone; யாரும். ஆங்கவை யெவ்வரும் பெறுகிலர் (கந்தபு. மயை யுப. 14). |
