Word |
English & Tamil Meaning |
|---|---|
| எலா | elā int. cf. எல்லா. [K. elā.] Here, you! used in addressing a person in a familiar and friendly manner; நண்பினரை விளிக்கும் ஒரு விளிப்பெயர். (தொல். பொ. 220, உரை.) |
| எலி 1 | eli n. [T. elika, K. M. Tu. eli.] 1. Rat, Mus rattus; எலிப்பகை நாக முயிர்ப்பக் கெடும் (குறள், 763). 2. Bandicoot. See பெருச்சாளி. |
| எலி 2 | eli n. 1. Toddy; கள். (பிங்.) 2. Spurge. See கள்ளி. 3. The 11th nakṣatra. See பூரம். (திவா.) |
| எலிக்காது | eli-k-kātu n. <>எலி1+. A plant whose branches creep along the ground, s. sh., Ipomoea reniformis; எலிச்செவி. (M. N.) |
| எலிக்குச்சிப்புல் | eli-k-kucci-p-pul n. <>id.+. Water-pink, a seashore grass, Spinifex squarrosus; இராவணன்மீசை என்று வழங்கும் கடற்கரையிலுள்ள ஒரு வகைக் கூரியபுல். (L.) |
| எலிக்குஞ்சப்புல் | eli-k-kuca-p-pul n. <>id.+. See எலிக்குச்சிப்புல். (L.) . |
| எலிக்குட்டி | eli-k-kuṭṭi n. <>id.+. Young rat; எலிக்குஞ்சு. (தொல். பொ. 561, உரை.) |
| எலிச்செவி | eli-c-cevi n. <>id.+.[T. elukacevi, K. M. eliccevi.] 1. Pea-fruited aodder, m. cl., Cuscuta reflexa; கொடியாள்கூந்தல் என்ற செடி. (மலை.) 2. A plant whose branches creep along the ground, s. sh., Ipomoea reniformis; |
| எலிச்செவித்துத்தி | eli-c-cevi-t-tutti n. <>id.+. A kind of shrub; பூண்டுவகை. (சங். அக.) |
| எலித்திசை | eli-t-ticai n. <>id.+. (Astrol.) North-west, opp. to pūṇai-t-ticai; வடமேற்கு. (W.) |
| எலித்துருமம் | eli-t-turumam n. prob. kali-druma. Beleric myrobalan. See தான்றி. (மூ. அ.) . |
| எலித்துன் | eli-t-tuṉ n. <>எலி1+. Rat's hole; எலிதோண்டிய பொந்து. Loc. |
| எலிப்பகை | eli-p-pakai n. <>id.+. Cat; பூனை. |
| எலிப்பயல் | eli-p-payal n. <>id.+. Little boy; சிறியபையன். Loc. |
| எலிப்பயறு | eli-p-payaṟu n. <>id.+. Wild horse-gram. See வயற்பயறு. (I. P.) . |
| எலிப்பாகம் | eli-p-pākam n. <>id.+. See எலியாமணக்கு. (மூ. அ.) . |
| எலிப்பாலை | eli-p-pālai n. <>id.+. See எலியாமணக்கு. (மூ. அ.) . |
| எலிப்பாஷாணம் | eli-p-pāṣāṇam n. prob. id.+. Ratsbane, white arsenic, Acidum arseniosum; வெள்ளைப்பாஷாணம். (மூ. அ.) |
| எலிப்பிடுக்கன் | eli-p-piṭukkaṉ n. <>எலி1+பிடுக்கு. Rattlewort, species of Crotalaria; பூடுவகை. (மூ. அ.) |
| எலிப்புலி | eli-p-puli n. <>id.+. Cat; பூனை. ஈப்புலியோ டெலிப்புலியாய் வடிவங்கொன்டு (தனிப்பா. i, 86, 169). |
| எலிப்பொந்து | eli-p-pontu n. <>id.+. Rat-hole; எலிவளை. Loc. |
| எலிப்பொறி | eli-p-poṟi n. <>id.+. 1. Rat-trap; எலியைப்பிடிக்கும் எந்திரம். 2. See எலிப்பிடுக்கன். (L.) |
| எலிமயிர்க்கம்பலம் | eli-mayir-k-kampalam n. <>id.+. Blanket made of rat's fur; எலிமயிரினாற் செய்யப்பட்ட கம்பளி. (சீவக. 2686, உரை.) |
| எலிமயிர்ப்போர்வை | eli-mayir-p-pōrvai, n. <> id. +.n. <> id. +. Shawl made of rat's fur; எலிமயிராற் செய்யப்பட்ட போர்வை. எலிமயிர்ப்போர்வைவைத் தெழினி வாங்கினார் (சீவக. 2671) |
| எலியளை | eli-y-aḷai n. <>id.+ அளை. Rat's hole; எலிவளை. (W.) |
| எலியன் | eliyaṉ n. <>id. Little boy; பொடியன். Loc. |
| எலியாமணக்கு | eli-y-āmaṇakku n. <>id.+. Glaucous-leaved physic-nut. See காட்டாமணக்கு. (பதார்த்த. 249.) . |
| எலியால் | eli-y-āl n. <>id.+. See எலியாமணக்கு. (மூ. அ.) . |
| எலியாலங்காய் | eli-y-ālaṅ-kāy n. <>id.+. Seed of the glaucous-leaved physic-nut, காட்டாமணக்குவிதை. (தொல். எழுத். 405, உரை.) |
| எலியிடுக்கி | eli-y-iṭukki n. <>id.+. Rat trap; எலிபிடிக்கும் பொறி. |
| எலியெலும்பன் | eli-y-elumpaṉ n. <>id.+. Weak man, he who is as weak as a rat; அற்பசக்தியுள்ளவன். இவ்வெலியெலும்பனான சம்சாரி (ஈடு, 4, 9, 8). |
| எலியொட்டி | eli-y-oṭṭi n. prob. id.+. A grass whose seeds stick to the clothes; ஓட்டங்காய்ப்புல். (மூ. அ.) |
| எலியோட்டி | eli-y-ōṭṭi n. prob. id.+. Mexican poppy, s. sh., Argemone mexicana; குருக்குப்பூண்டு. (மூ. அ.) |
| எலியோடி | eli-y-ōṭi n. <>எலி1+ஓடு-. Thin timber on the top of a roof, ridge-pole; நடுமுகட்டிலேவைக்கும் உருட்டுமரம். (W.) |
