Word |
English & Tamil Meaning |
|---|---|
| எல்கை | elkai n. Corr. of எல்லை. Colloq. . |
| எல்ல | ella int. See எல்லா. (தொல். பொ. 220, உரை.) . |
| எல்லப்பநாவலர் | ellappa-nāvalar n. Author of the Aruṇācala-purāṇam and other works in Tamil; அருணாசலபுராணம் முதலியநூல்களையியற்றிய புலவர். |
| எல்லம் | ellam n. prob. T. allamu. Ginger. See இஞ்சி. (மலை.) . |
| எல்லம்மன் | ellammaṉ n. [T. ellamma.] A village goddess, invoked by fishermen when in danger and by any one bitten by a a poisonous serpent; ஒரு கிராமதேவதை. Loc. |
| எல்லம்மா | ellammā n. See எல்லம்மன். . |
| எல்லரி | ellari n. cf. jhallarī. Kind of drum; பறைவகை. கடிகவர் பொலிக்கும் வல்வா யெல்லரி (மலைபடு. 10). |
| எல்லவரும் | ellavarum n. <>எல்லாரும். [T. ellaru, K. ellarum.] All persons; எல்லாரும். நாமெல்லவரும் (கந்தபு. தேவர்புலம்புறு. 19). |
| எல்லவன் | ellavaṉ n. <>எல். 1. Sun; சூரியன். எல்லவன் வீழு முன்னம் (பாரத. பதினெட். 119). 2. Moon; |
| எல்லா | ellā n. cf. எலா. (always in the vocative.) 1. Here! you!; ஒரு விளிப்பெயர். (தொல். பொ. 220, உரை.) 2. A word used in addressing a woman friend; |
| எல்லாம் | ellām n. [T. K. ella, M. ellām.] 1. Whole; முழுதும். (திருக்கோ. 351, உரை.) 2. All, personal as well as impersonal; |
| எல்லார் | ellār n. <>எல். Devas of Hindu mythology; தேவர். பனிவானத் தெல்லார் கண்ணும் (சீவக. 364). |
| எல்லாரும் | ellār-um n. [T. ellavāru.] All persons; யாவரும். |
| எல்லி | elli n. <>எல். 1. Sun; சூரியன். (பிங்.) 2. Daytime; 3. Night; 4. Darkness; |
| எல்லிநாதன் | elli-nātaṉ n. <>எல்லி+. Moon; சந்திரன். |
| எல்லிநாயகன் | elli-nāyakaṉ n. <>id.+. See எல்லிநாதன். . |
| எல்லிப்பகை | elli-p-pakai n. <>id.+. Sun, enemy of night; சூரியன். (சங். அக.) |
| எல்லிமன் | elli-maṉ n. <>id.+. See எல்லிநாயகன். . |
| எல்லிமனை | elli-maṉai n. <>id.+. Lotus, fancied as the wife of the sun; தாமரை. பிரமபெல்லிமனைமுக்கருணை (தைலவ. தைல. 135). |
| எல்லியறிவன் | elli-y-aṟivaṉ n. <>id.+. cock, Cock, which knows the watches of the night; கோழிச்சேவல். |
| எல்லிருள் | el-l-iruḷ n. <>எல்+. 1. Darkness of night; இராவிருள். 2. Darkness preceding the dawn; |
| எல்லினான் | elliṉāṉ n. <>id. See எல்லோன். புயங்க முண்டுமிழ்ந்த வெல்லினா னென (கந்தபு. அக்கினி. 223). |
| எல்ல¦ரும் | ellīr-um n. You all; எல்லா நீங்களும். எல்ல¦ரு மென்னும் பெயர்நிலைக் கிளவியும் (தொல். சொல். 166). |
| எல்லெண் | el-l-eṇ n. <>எல்+. The number 12, representing the number of ātittar; பன்னிரண்டு. காட்டசைசத்தி யெல்லெண் (தைலவ. தைல. 69). |
| எல்லெனல் | el-l-eṉal n. An onom. expression; ஓர் ஒலிக்குறிப்பு. (பிங்.) |
| எல்லே | ellē int. cf. எல்லா. 1. Here, you! used in addressing a woman-friend; தோழி முன்னிலைச் சொல். எல்லே . . . தோழி (திவ். திருவாய். 5, 3, 5). 2. An exclamation of wonder or pity; - adv. 1. Openly, clearly; 2. Out; |
| எல்லேலெனல் | ellēl-eṉal n. An onom. expression; ஓர் ஒலிக்குறிப்பு. (பிங்.) |
| எல்லேமும் | ellēm-um n. We all; எல்லா நாங்களும். |
| எல்லேளெனல் | ellēḷ-eṉal n. See எல்லேலெனல். (திவா.) . |
| எல்லை 1 | ellai n. [T. M. ella, K. elle.] 1. Limit, border, boundary; வரம்பு. எல்லைக்கணின்றார் (குறள், 806). 2. Measure, extent; 3. End goal, extremity, death; 4. Distance within reach off voice; 5. Specified time, period; 6. Place, spot, locality; 7. (Gram.) The ablative case; |
