Word |
English & Tamil Meaning |
|---|---|
| எல்லை 2 | ellai n. <>எல். 1. Sun; சூரியன். (திவா.) 2. Daytime; 3. Day of 24 hours; |
| எல்லைக்கட்டு | ellai-k-kaṭṭu n. <>எல்லை1+. (W.) 1. Boundary, demarcation; வரம்பு. 2. Restraint, circumscription; |
| எல்லைக்கல் | ellai-k-kal n. <>id.+. Stone fixed up to show the boundary limits; எல்லையறிய நிறுத்துங் கல். எல்லைக்கல்லி னிறீஇ (மீனாட். பிள்ளைத். 388). |
| எல்லைக்கறுப்பன் | ellai-k-kaṟuppaṉ n. <>id.+. The village deity, who guards the boundary of the village; ஒரு கிராமதேவதை. |
| எல்லைக்காவல் | ellai-k-kāval n. <>id.+. Watch-shed, to mark the division of one field from another; ஊரெல்லையிற் காக்கும் வயற்காவல். (W.) |
| எல்லைக்குறிப்பு | ellai-k-kuṟippu n. <>id.+. (W.) 1. Boundary-mark; எல்லையடையாளம். 2. Milestone, mile-post; |
| எல்லைக்கேடு | ellai-k-kēṭu n. <>id.+. (W.) 1. Unsuitableness in regard to time; சமயமொவ்வமை. 2. Unsuitableness, inconvenience in regard to place; |
| எல்லைகட்டு - தல் | ellai-kaṭṭu- v. tr. <>id.+. 1. To limit, restrain, circumscribe; கட்டுப்படுத்துதல். (W.) 2. To decide differences; to settle matters of dispute; |
| எல்லைகட - த்தல் | ellai-kaṭa- v. intr. <>id.+. 1. To trespass; வரம்பு மீறுதல். 2. To exceed limits, transgress; 3. To be beyond all measure; |
| எல்லைகுறி - த்தல் | ellai-kuṟi- v. intr. <>id.+. To mark limits, set boundaries; வரம்பேற்படுத்துதல். |
| எல்லைச்சதிரி | ellai-c-catiri n. <>id.+catura. A highly dexterous person; பெருஞ்சமர்த்தன். (ஈடு.) |
| எல்லைத்தகரார் | ellai-t-takarār n. <>id.+. Boundary dispute; எல்லையைப்பற்றிய விவாதம். |
| எல்லைத்தரிசு | ellai-t-taricu n. <>id.+. Waste land, generally on the outskirts of a village; கிராமவோரங்களிலுள்ள கரம்புநிலம். (C. G.) |
| எல்லைத்தீ | ellai-t-tī n. <>id.+. The fire that destroys all things at the close of an age; ஊழித்தீ. (W.) |
| எல்லைப்படுத்து - தல் | ellai-p-paṭuttu- v. tr. <>id.+. 1. To settle a boundary; எல்லை கட்டுதல். 2. To settle matters, decide, finish; |
| எல்லைப்பத்திரம் | ellai-p-pattiram n. <>id.+. Written agreement, setting forth the terms of settlement of a boundary dispute; எல்லைவழக்குத்தீர்த் தெழுதும் பத்திரம். (சங். அக.) |
| எல்லைப்பிடாரி | ellai-p-piṭāri n. <>id.+. A female demon, believed to preside over spots where roads meet; சந்திப்பிடாரி. (W.) |
| எல்லைமால் | ellai-māl n. <>id.+. The four boundaries of a piece of land; நான்கெல்லை. (C. G.) |
| எல்லைமானம் | ellai-māṉam n. <>id.+. 1. Boundary, limit, circuit; எல்லை. (யாழ். அக.) 2. Measure, extent; |
| எல்லையின்மை | ellai-y-iṉmai n. <>id.+. Boundlessness, immensity, infinity; அளவின்மை. (பிங்.) |
| எல்லையோடி | ellai-y-ōṭi n. <>id.+. 'Boundary runner,' a village officer use. a Pancama, whose testimony in case of boundary disputes is accepted by the disputants, when he shows the boundary line by running round it after having been solemnly sworn to discharge his duty as almost a divine கிராமதேவதையின் கோயிலின்முன்னே சில சடங்குகளைச்செய்து பிறகு எல்லையைக்காட்டி வழக்கைத்தீர்ப்போன். Loc. |
| எல்லையோடு - தல் | ellai-y-ōṭu- v. intr. <>id.+. To march around the bounds of a village or district, a religious ceremony performed by some of the Hindu sects; எல்லையைச் சுற்றிவருதல். (W.) |
| எல்லைவிருத்தி | ellai-virutti n. <>id.+. Office of protecting village boundaries, held hereditarily and carrying with it certain emoluments; ஊரெல்லையைக்காக்கும் உத்தியோகம். (Rd. M. 331.) |
| எல்லோ | ellō int. An exclamation expressive of surprise or pity; ஓர் அதிசயவிரக்கச் சொல். (W.) |
| எல்லோமும் | ellōm-um n. See எல்லேமும். . |
| எல்லோன் | ellōṉ n. <>எல். Sun.; சூரியன். (பிங்.) |
| எல்வளி | el-vaḷi n. <>id.+. Furious wind; பெருங்காற்று. எல்வளியலைக்கும் (அகநா. 77). |
| எல்வை | elvai n. See. ஏல்வை. அவ்வழி நடக்குமெல்வை (உபதேசகா. சிவபுண்ணிய. 375). |
