Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஏ 4 | ē part. 1. Suffix having the force of (a) disjuction, as அவருள் அவனேசொன்னான்; (b) Interrogative, as நீயே கொண்டாய்; (c) Copulative, as நிலமே நீரே தீயே; (d) Emphasis, as in அதுமெய்யே; (e) Terminative expletive, as சென்னபட்டணத்திலே; பிரிநிலை யேகாரம்: வினா வேகாரம். எண் ணேகாரம்: தேற்ற வேகாரம்: ஈற்றசை யேகாரம்: 2. A poetic expletive for completing the metre, as ஏயே இவளொருத்தி பேடி; |
| ஏ 5 | ē int. cf. hē. 1. An exclamation inviting attention; ஒரு விளிக்குறிப்பு. ஏயெம்பெருமான் (தேவா. 746, 7). 2. An exclamation of contempt; |
| ஏஎ | ēe n. Sāma-vēda; சாமவேதம். ஏஎ இன கிளத்தலின் (பரிபா. 3, 62). 1. See ஏ5, 2. See ஏ5, 3. An exclamation of pity; |
| ஏக்கம் | ēkkam n. <>ஏங்கு-. [M. ēkkam.] 1. Despondency, depression of spirits; விரும்பியது பெறாமையால்வருந் துக்கம். வானவ ரேக்கமுஞ் சிதைய (கந்தபு. துணைவர்வரு. 30). 2. Fear, fright, panic; 3. Craving, eager desire; |
| ஏக்கம்பிடி - த்தல் | ēkkam-piṭi- v. intr. <>ஏக்கம்+. To be in low spirits; to languish, used impers; துக்கமிகுதல். மகன்செத்ததினாலே அவளுக்கு ஏக்கம் பிடித்தது. |
| ஏக்கழுத்தம் | ē-k-kaḻuttam n. <>ஏ2+கழுத்து. 1. Superciliousness, strutting, lit., stretching the neck; தலையெடுப்பு. காதிரண்டு மில்லாதா னேக்கழுத்தஞ் செய்தலும் (சிறுபஞ். 5). 2. Arrogance, pride; 3. Sitting majestically; |
| ஏக்கழுத்து | ē-k-kaḻuttu n. <>id.+. See ஏக்கழுத்தம். மோட்டுடைப் போர்வையோ டேக்கழுத்தும் (ஆசாரக். 92). |
| ஏக்கர் | ēkkar n. <>E. Acre; 43, 560 சதுர அடிகொண்ட நிலவளவை. |
| ஏக்கரா | ēkkarā n. <>id. See ஏக்கர். . |
| ஏக்கறவு | ēkkaṟavu n. <>ஏக்கறு-. Desire, lust; இச்சை. ஒருத்தி முலைக்கிடந்த வேக்கறவால் (கம்பரா. மாயாசன. 83). |
| ஏக்கறு - தல் | ēkkaṟu- v. <>ஏங்கு-+. intr. 1. [T. ēkāru.] To suffer from weariness, to languish; இளைத்து இடைதல். கடைக்க ணேக்கற (சீவக. 1622). 2. To bow before superiors, as one seeking some favour at their hands; tr. To desire; |
| ஏக்கன்போக்கன் | ēkkaṉ-pōkkaṉ n. Redupl. of போக்கன். Man of no consequence, worthless fellow; ஒன்றுக்குமுதவாதவன். (J.) |
| ஏக்கிபோக்கி | ēkki-pōkki n. <>id. Woman of no consequence; ஒன்றுக்கு முதவாதவள். (J.) |
| ஏக்கெறி - தல் | ēkkeṟi- v. intr. <>ஏங்கு-+எறி-. 1. To cast away care, get rid of anxiety; கவலை யொழிதல். 2. To be frightened; |
| ஏக்கை | ēkkai n. cf. ஏக்கம். Contempt, abuse; இகழ்ச்சி. (சங். அக.) |
| ஏககண்டமாய் | ēka-kaṇṭam-āy adv. <>ēka+kaṇṭha+ ஆய். All together, unanimously, with one voice; ஒரே குரலாய். ஏககண்டமாய் அதனை அவர்கள் ஒப்புக்கொள்ளுகிறார்கள். Mod. |
| ஏககுடும்பம் | ēka-kuṭumpam n. <>id.+. Undivided family; பாகிக்கப்படாத சொத்துள்ள குடும்பம். அவர்கள் ஏககுடும்பமாக இருக்கிறார்கள். |
| ஏககுண்டலன் | ēka-kuṇṭalaṉ n. <>id.+. Balarāma, who had ear-ring in one ear only; ஒற்றைக்குழையை யணிந்த பலராமன். |
| ஏகசக்கரவர்த்தி | ēka-cakkaravartti n. <>id.+. Paramount sovereign, suzerain, emperor; தனியாணை செலுத்துவோன். |
| ஏகசக்கராதிபத்தியம் | ēka-cakkarātipattiyam n. <>id.+. Paramount sovereignty; தனியரசாட்சி. |
| ஏகசக்கராதிபதி | ēka-cakkarātipati n. <>id.+. See ஏகசக்கரவர்த்தி. . |
| ஏகசகடு | ēka-cakaṭu n. <>id.+. Colloq. 1. Aggregate, whole; மொத்தம். 2. Average; |
| ஏகசமன் | ēka-camaṉ n. <>id.+. Uniformity, likeness, sameness; ஒரு நிகர். (W.) |
| ஏகசமானம் | ēka-camāṉam n. <>id.+. See ஏகசமன். (W.) . |
| ஏகசிந்தை | ēka-cintai n. <>id.+. 1. Unanimity; ஒத்தமனம். தம்பதிகள் இருவரும் ஏகசிந்தை யுள்ளவர்கள். 2. Singleness of purpose, undivided attention; |
| ஏகசுபாவம் | ēka-cupāvam n. <>id.+. (W.) 1. Evenness of disposition in a person; ஒரே தன்மை. 2. Similarity of nature in different persons; |
| ஏகத்துவம் | ēkattuvam n. <>ēka-tva. Oneness, unity, identity; ஒன்றாயிருக்குந் தன்மை. ஏகத்துவத்திலே சுழுத்தி யிதயமுற் றின்பமே பெறுவாய் (ஞானவா. தாசு. 101). |
