Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஏகம் 1 | ēkam n. <>ēka. 1. (Arith.) Unit; ஒன்று. (திவா.) 2. That which is unique; 3. Solitariness, singleness; 4. Final liberation; 5. Total, whole; 6. Identity, unity; 7. Army consisting of eight akkurōṇis; 8. Abundance; |
| ஏகம் 2 | ēkam n. Long pepper; திப்பிலி. (மூ. அ.) |
| ஏகம்பட்சாரம் | ēkampaṭcāram n. Kind of mineral; உலோகவகை. (W.) |
| ஏகம்பம் | ēkampam n. <>ēkāmra. Name of a šiva shrine in Conjeevaram; காஞ்சியிலுள்ள சிவதலம். ஏகம்பத்துறையீசன் (தேவா. 1033, 6). |
| ஏகம்பன் | ēkampaṉ n. <>id. šiva, worshipped in the shrine at Conjeevaram; காஞ்சீபுரத்திற் கோயில் கொண்ட சிவபிரான். ஏத்தநின்ற வேகம்பன்றன்னை (தேவா. 1039, 7). |
| ஏகமாயிரு - த்தல் | ēkam-āy-iru- v. intr. <>ēka+. 1. To be united; ஒன்றாயிருத்தல். நானேகமாய் நின்னோடிருக்குநாளெந்தநாள் (தாயு. எங்கு நிறை. 6). 2. To be abundant; |
| ஏகரா | ēkarā n. <>ē. See ஏக்கர். . |
| ஏகராசி | ēka-rāci n. <>ēka+. New moon; அமாவாசை. ஒளியோனை யேகராசியினி னெய்த வெதிர்க்கும் வேகராகு (கம்பரா. இராவணன்றா. 19). |
| ஏகலபுச்சன் | ēkala-puccaṉ n. Crazy fellow; பைத்தியக்காரன். |
| ஏகவசனம் | ēka-vacaṉam n. <>ēka+. 1. (Gram.) Singular number; ஒருமை. வாருமென்றவர்களேகவசனமுஞ்சொல்வர் (திருவேங். சத. 78). 2. Disrespectful term, sing. for hon. pl.; 3. Honesty, uprightness, truth, as singleness of statement; |
| ஏகவட்டம் | ēka-vaṭṭam n. <>id.+ வடம். See ஏகவடம். இனமணிப்பூணுமேகவட்டமும் (பெருங். இலாவாண. 5, 139). |
| ஏகவடம் | ēka-vaṭam n. <>id.+. Necklace of a single string. See ஏகாவலி. பொங்கிளநாகமொ ரேகவடத்தோடு (தேவா. 350, 7). |
| ஏகவல்லி | ēka-valli n. <>ēkāvali. See ஏகாவலி. (பெருங். உஞ்சைக். 46, 211.) . |
| ஏகவாசம் 1 | ēka-vācam n. <>ēka+. (W.) 1. Solitary life, as of a hermit; தனிமையாயிருக்கை. 2. Dwelling together; |
| ஏகவாசம் 2 | ēka-vācam n. cf. yakṣāvāsa. Banyan. See ஆல். (மூ. அ.) . |
| ஏகவாணை | ēka-v-āṇai n. <>id.+ā-jā. Sole dominion; பொதுவற ஆளுகை. ஏகவாணை வெண்குடை (சீவக. 141.) |
| ஏகவாரம் 1 | ēka-vāram n. <>id.+vāra. Partial fasting, such as taking only one meal; ஒருபோது. இன்று ஏகவாரந்தான் உணவு. |
| ஏகவாரம் 2 | ēka-vāram n. <>id.+āhra. See ஏகாவலி. ஏகவார மிலங்கு கழுத்தினன் (பெருங். நரவாண. 2, 26). |
| ஏகவிடுகொடி | ēka-viṭu-koṭi n. <>id.+. See ஏகாவலி. ஏகவிடுகொடி யெழிற்றோ ளெழுதி (பெருங். உஞ்சைக். 34, 201). |
| ஏகவீரன் | ēka-vīraṉ n. <>id.+. Unique or incomparable warrior; தனிவீரன். (திவ். திருவிருத். 13, வ்யா.) |
| ஏகவீரியன் | ēka-vīriyaṉ n. <>id.+. Vīrabhadra; வீரபத்திரன். (பிங்.) |
| ஏகவெளி | ēka-veḷi n. <>id.+. Wide, open space; பெருவெளி. |
| ஏகவேணி | ēka-vēṇi n. <>id.+. Goddess of misfortune, wearing one lock; ஒற்றைச் சடையுடைய மூதேவி. (பிங்.) |
| ஏகன் | ēkaṉ n. <>id. 1. One man; ஒருவன். 2. God, as one; |
| ஏகஸ்தாய் | ēkastāy adv. prob. ēka+stha+ ஆ-. Jointly, unanimously; ஒருப்பட்டு. இருவரும் ஏகஸ்தாய் எழுதிக்கொடுத்த உடம்படிக்கை. (W.) |
| ஏகாக்கிரசித்தம் | ēkākkira-cittam n. <>ēkāgra+. Mind concentrated on one object; ஒன்றிலே ஊன்றிய மனம். ஏகாக்கிரசித்தமென்னும் விரதங்கெடாத திடவிரதம் (சிவப். பிரபந். அபிஷே. 8). |
| ஏகாக்கிரதை | ēkākkiratai n. <>ēkāgratā. Concentration of mind; ஒன்றிலே மனம் பதிந்திருக்கை. |
| ஏகாக்கிரம் | ēkākkiram n. <>ēkā+agra. ஏகாக்கிரதை. . |
| ஏகாகம் | ēkākam n. <>ēkāha. Ceremony for the deceased on the 11th day; இறந்தவர்க்குப் பதினோராநாளிற்செய்யுங் கிரியை. Brāh. |
| ஏகாகாரம் | ēkākāram n. <>ēka+ā-kāra. 1. Unchanging form; மாறாத உருவம் சூரியன் சந்திரனைப்போலன்றி ஏகாகாரமாய்த் தோன்றுகின்றான். 2. Uniform manner; |
