Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஏகாகி | ēkāki n. <>ēkākin. One who is alone, solitary man; தனித்திருப்போன். |
| ஏகாங்கநமஸ்காரம் | ēkāṅka-namaskā-ram n. <>ēka+aṅga+. Bowing the head in worship, at the act of a single member of the body; தலைவணங்கிச் செய்யும் நமஸ்காரம். (சங். அக.) |
| ஏகாங்கி 1 | ēkāṅki n. <>ēkāgin. A class of Vaiṣṇava devotees; திருமாலடியாருள் ஒருவகையார். (குருபரம். ஆறா. 172.) |
| ஏகாங்கி 2 | ēkāṅki n. <>ēkākin. Single person, one who has no family; குடும்பமின்றித் தனித்து வசிப்பவன்-ள். |
| ஏகாசம் | ēkācam n. prob. ēka+amšu Loose cloth worn over the shoulders, scarf; உத்திரீயம். ஐந்தலைய மாசுணங்கொண் டம்பொற்றோண்மே லேகாசமா விட்டு (தேவா. 257, 3). |
| ஏகாட்சரம் | ēkāṭcaram n. <>Ekāksara. Name of an Upanisad; நூற்றெட்டுபநிடங்களுள் ஒன்று. |
| ஏகாட்சரி | ēkāṭcari n. <>ēkākṣari. 1. Monosyllabic mantra; ஓரெழுத்தாலாய மந்திரம். 2. Quatrain composed of the same consonant in combination with various vowels, as தித்தித்த தோதித்திதி; |
| ஏகாட்சி | ēkāṭci n. <>ēkāṭci 1. One-eyed person; ஒற்றைக்கண்-ணன்-ணி. 2. Crow, supposed to see only with one eye at a time; |
| ஏகாண்டம் | ēkāṇṭam n. <>ēka+a-khaṇda. [T. ekāndamu.] That which is one piece, not made of parts; முழுக்கூறு. ஏகாண்டமான தூண். |
| ஏகாதசம் | ēkātacam n. <>ekādašan. (Astrol.) The 11th sign from one's caṉmalakkiṉam; பதினோராமிடம். ஏகாதசந்தன்னி லெக்கோளுநிகரென்ன (பாரத. பதினேழாம். 228). |
| ஏகாதசர் | ēkātacar n. <>ēkādaša. 1. See ஏகாதசருத்திரர். எண்வசுக்க ளேகாதசர்கள் (தேவா. 1040, 5). 2. Kirakam in the 11th sign from one's caṉma-lakkiṉam; |
| ஏகாதசருத்திரர் | ēkātaca-ruttirar n. <>ēkādaša+. The 11 Rudras, a class of gods, viz., மாதேவன், சிவன், உருத்திரன், சங்கரன், நீலலோகிதன், ஈசானன், விசயன், வீமதேவன், பவோற்பவன், கபாலி, சௌமியன் (திவா.) அரன் for சிவன். (பிங்.) |
| ஏகாதசி | ēkātaci n. <>ēkādašī. The 11th titi of a bright or dark fortnight; பதினோராந்திதி. |
| ஏகாதசிவிரதம் | ēkātaci-viratam n. <>id.+. Fast in honour of Viṣṇu on the ēkātaci; ஏகாதசியிற் செய்யப்படும் பட்டினிநோன்பு. |
| ஏகாதிபத்தியம் | ēkātipattiyam n. <>ēkā+ādhipatya. Paramount sovereignty, empire; தனியரசாட்சி. ஏகாதிபத்தியம்விடாமல் (இராமநா. பாலகா. 2). |
| ஏகாதிபதி | ēkātipati n. <>id.+adhi-pati. Paramount sovereign; சக்கரவர்த்தி. |
| ஏகாந்தசேவை | ēkānta-cēvai n. <>ēkānta+. The appearance of the God in a temple in procession at midnight during some festivals; சில உற்சவங்களிலே இரவில் ஏகாந்தமாக நிகழும் ஸ்வாமி ஸேவை. Loc. |
| ஏகாந்தஞ்சமர்ப்பி - த்தல் | ēkānta-camarppi- v. intr. <>id.+. To fasten an idol to its vehicle for a procession; வாகனங்களில் விக்கிரகங்களைவைத்துக் கச்சுச்சாத்துதல். |
| ஏகாந்தநித்திரை | ēkānta-nittirai n. <>id.+. 1. Sweet sleep, undisturbed repose; அமைதியான தூக்கம். 2. Entire abstraction of the ascetic, free from wordly cares; |
| ஏகாந்தம் | ēkāntam n. <>ēka+anta. 1. Solitude, loneliness, retirement, as in the practice of Yōga; தனிமை. ஏகாந்தமினிது (தனிப்பா. i, 112, 55). 2. Solitary place; 3. Secret; 4. Certainty; 5. Sole end, one only end; 6. That which is appropriate or fit; |
| ஏகாந்தவாதி | ēkānta-vāti n. <>ēkānta+. vādin. (Jaina.) Non-jain, as one who looks at things from only one point of view; ஆருகதரல்லாத சமயி. ஏகாந்தவாதிக ளெண்கெட்ட வாதம்போல் (அறநெறி. 18). |
| ஏகாந்தவாழ்வு | ēkānta-vāḻvu n. <>id.+. 1. Single life; தனிவாழ்க்கை. 2. Monastic life, life of an ascetic; |
| ஏகாம்பரநாதர் | ēkāmpara-nātar n. <>ēkāmra+. šiva at Conjeevaram; காஞ்சீபுரத்திற் கோயில்கொண்டுள்ள சிவபிரான். |
| ஏகாம்பரர் | ēkāmparar n. <>id. See ஏகாம்பரநாதர். . |
