Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஏச்சு | ēccu n. <>ஏசு1-. [M. ēṣaṇi.] 1. Abuse, insult, calling names; வைவு. 2. Reproach; |
| ஏச்சுக்காட்டு - தல் | ēccu-k-kāṭṭu- v. tr. <>ஏச்சு+. To reproach pointing to one's fault, twit; பழிப்பைச் சுட்டிக்காட்டிப் பேசுதல். Loc. |
| ஏச்சுரை | ēccurai n. <>id.+ உரை. Reproach, opprobrium, calumny பழிப்புரை. ஏதிலார் தாங்கூறு மேச்சுரையுங் கேட்டேங்கி (சிலப். 29, அடித்தோழியாற்று.) |
| ஏசம் | ēcam n. Bell-metal; வெண்கலம். (மூ. அ.) |
| ஏசல் | ēcal n. <>ஏசு1-. 1. Reproaching, abusing; இகழ்கை. ஏசலொப்பன கோகிலப் பறவைகளிசைத்தல் (கந்தபு. நாட்டு. 44). 2. Slander; 3. Poem in which each of two parties extols himself and depreciates the other; |
| ஏசறவு 1 | ēcaṟavu n. <>id.+ அறு1-. 1. Desire, longing; விருப்பம். தாமுற்ற வேசறவைத் தோழியர்முன் பேசுவார் (பதினொ. ஆளு. திருவுலா. 138). 2. Praise, adoration; |
| ஏசறவு 2 | ēcaṟavu n. Corr. of வேசறவு. Regret, compunction, penitence; துக்கம். (W.) |
| ஏசறு - தல் | ēcaṟu- v. <>ஏசு1-+. intr. 1. To be troubled, to feel sorry; வருத்தமுறுதல். (அகநா. 32.) 2. To long for, desire; - tr. To blame, reproach; |
| ஏசாதவர் | ēcātavar n. <>id.+ ஆ neg.+. Gods; தேவர். (அக. நி.) |
| ஏசி | ēci n. [Kur. eder.] Parrot; கிளி. (அக. நி.) |
| ஏசிக்காட்டு - தல் | ēci-k-kāṭṭu- v. tr. <>ஏசு1-+. See ஏச்சுக்காட்டு-. Loc. . |
| ஏசிடாவகம் | ēciṭāvakam n. cf. yaṣṭi-madhukā. Liquorice-plant. See அதிமதுரம். (மலை.) . |
| ஏசு 1 - தல் | ēcu - 5 v. tr. [T. ēku.] To abuse, reproach, rail at, insult; இகழ்தல். ஏசவெண்டலையிற்பலிகொள்வதிலாமையே (தேவா. 425, 6). |
| ஏசு 2 | ēcu n. <>ஏசு1-. Fault, blemish; குற்றம். (திவா.) |
| ஏசு 3 | ēcu 5 v. tr. <>ஏவு-. To hurl, dart; செலுத்துதல். கொல் லம்பேசி (தேவா. 380, 6). |
| ஏசு 4 | ēcu n. <>Gr. 'Iesoūs. Jesus. See இயேசு. ஏசுநாமமொன்றை நம்பிவீர். Chr. |
| ஏட்சி 1 | ēṭci n. <>எழுச்சி. Rising of a heavenly body; உதயம். ஏட்சிதொட் டெண்ண (சினேந். காண்டப். 3). |
| ஏட்சி 2 | ēṭci n. <>ஏண். Stability, firmbess; ஸ்திரம். ஏட்சியின்விளக்கிடு மென்றனிச் சித்தே (அருட்பா, vi , அருட்பெருஞ்சோதியாக. 1231). |
| ஏட்டிக்குப்போட்டி | ēṭṭikku-p-pōṭṭi n. Redupl. of போட்டி. [T. ētikipōti.] Logomachic retort or tit for tat; விதண்டாவாதம் அல்லது செயல். Colloq. |
| ஏட்டு | ēṭṭu n. <>E. head. Head constable; போல¦ஸ் சேவகருக்குள் தலைவன். Mod. |
| ஏட்டுச்சுரைக்காய் | ēṭṭu-c-curai-k-kāy n. <>ஏடு+. 1. Book-learning that is divorced from practical wisdom; அனுபவத்தொடு கூடாத கல்வியறிவு. 2. A person with such book-learning; |
| ஏட்டுப்படிப்பு | ēṭṭu-p-paṭippu n. <>id.+. Book-learning without practical knowledge; உலகவனுபவமில்லாத கல்வி. |
| ஏட்டுப்பொறி | ēṭṭu-p-poṟi n. <>id.+. Seal set on a letter written on palmyra leaf; ஓலைப் பத்திரத்திற் பதித்த முத்திரை. ஏட்டுப்பொறி நீக்கி மெல்லென விரித்து (பெருங். வத்தவ. 10, 109). |
| ஏட்டுவினை | ēṭṭu-viṉai n. <>id.+. Occupation as writer on palmyra leaves; ஓலையேட்டிலெழுதுந் தொழில். ஏட்டுவினைக் கணக்கன் (பெருங். வத்தவ. 10, 95). |
| ஏட்டை 1 | ēṭṭai n. cf. jyēṣṭhā. 1. Poverty, necessitous state or condition; தரித்திரம். ஏட்டைப் பருவத்து மிற்பிறந்தார் செய்வன (நாலடி, 358). 2. Drooping, pining; |
| ஏட்டை 2 | ēṭṭai n. Corr. of ஏற்றை. Male of animals, as of the buffalo; ஒருசார் விலங்கேற்றின் பெயர். (திவா.) |
| ஏட்டை 3 | ēṭṭai n. cf. ēṣaṇā. Intense desire; விருப்பம். (பிங்.) |
| ஏடகணி | ēṭakaṇi n. <>ஏடு+அகணி. Rib of a palm leaf; ஓலையீர்க்கு. (தைலவ. பாயி. 20.) |
| ஏடகம் 1 | ēṭakam n. <>id.+. 1. Flower; பூ. ஏடகக்குலஞ் சேருமைக் குழலொடு (திருப்பு. 730). 2. Coconut-palm. See தெங்கு. (திவா.) 3. Palmyra-palm. See பனை. (மலை.) |
| ஏடகம் 2 | ēṭakam n. Kind of cloth; ஒருவகைத் துகில் (சூடா.) |
| ஏடணாத்திரயம் | ēṭaṇā-t-tirayam n. <>ēṣaṇā+. Three kinds of attachment, viz., அருத்தவேடணை, புத்திரவேடணை, உலகவேடணை, one of 11 divisions of puṟa-nilai-k-karuvi, q.v.; மூவகையான விருப்பம். (திருவால. கட்.) |
