Word |
English & Tamil Meaning |
|---|---|
| எரிசாலை | ericālai n. A medicinal herb; மருந்துப்பூண்டுவகை. பூவி லெரிசாலைப் பூண்டுக்கிழுப்புவவி . . . குறையும் (பதார்த்த. 288). |
| எரிசுடர் | eri-cuṭar n. <>எரி1-+. 1. Fire which has burst out into flames; சுவாலிக்கும் நெருப்பு. 2. Great light; |
| எரிதுரும்பு | eri-turumpu n. <>எரி2-+. See எரிகரும்பு. Loc. . |
| எரிதூவு - தல் | eri-tūvu- v. intr. <>எரி+. To take fire; தீப்பற்றுதல். ஒக்க முப்புர மோங்கெரிதூவ (தேவா. 485, 5). |
| எரிதைலம் | eri-tailam n. <>எரி2-+. Medicinal oil prepared by boiling; காய்ச்சிய தைலம். |
| எரிந்துவிழு - தல் | erintu-viḻu- v. intr. <>எரி1-+. 1. To wax hot and burst into a temper; மூர்க்கங் காட்டுதல். 2. To talk angrily, fall foul of; |
| எரிநகை | eri-nakai n. <>id. A name of the ixora flower; வெட்சிமலர். எரிநகை யிடையிடு பிழைத்த நறுந்தார் (பரிபா. 13, 59). |
| எரிநரகம் | eri-narakam n. <>id.+. The hell of fire, a variety of hell; நரக விசேடம். (சங். அக.) |
| எரிநாள் | eri-nāḷ n. <>எரி+. The third nakṣatra. See கார்த்திகை. (பிங்.) . |
| எரிநோவு | eri-nōvu n. <>எரி1-+. A contagious disease of sheep; ஆட்டுநோய்வகை. [M. Cm. D. [1887], 249.) |
| எரிப்பு | erippu n. <>எரி2-. 1. Burning; எரிக்கை. 2. Pungency; 3. Envy, jealousy; 4. Burning sensation in the throat; |
| எரிப்புத்திட்டம் | erippu-t-tiṭṭam n. <>எரிப்பு+. Degree of heat in calcining medicine; மருந்துப் புடத்தின் சூட்டளவு. (பைஷஜ.) |
| எரிப்புமா | erippu-mā n. <>id.+. A variety of mango that is pungent to the taste; உறைப்புள்ள ஒருவகை மாம்பழம். Loc. |
| எரிப்புறம் | eri-p-puṟam n. <>எரி+. Hell; நரகம். (W.) |
| எரிப்பூ | eri-p-pū n. <>id. Flower that has the hue of fire; எரிபோலும் நிறமுள்ள பூ. எரிப்பூம்பழனம் (புறநா. 249). |
| எரிபடுவன் | eri-paṭuvaṉ n. <>எரி1-+. Cancer, corroding tumour; பிளவை வகை. (W.) |
| எரிபந்தம் | eri-pantam n. <>id.+. 1. Flaming torch; தீவட்டி. 2. Burning sensation all over the body due to disease; |
| எரிபரல்வட்டம் | eri-paral-vaṭṭam n. <>எரி+. A hell of red-hot pebbles, one of eḻu-narakam, q.v.; எழுநரகத் தொன்று. (பிங்.) |
| எரிபிடாரி | eri-piṭāri n. <>id.+. (W.) 1. Enraged, furious female demon; உக்கிரமாகாளி. 2. Peevish, fretful woman, spoken disparagingly; |
| எரிபுண் | eri-puṇ n. <>எரி1-+. Inflamed ulcer; எரிச்சற்சிலந்தி. |
| எரிபுழு | eri-puḻu n. <>எரி2-+. Kind of brownish yellow caterpillar, the touch of which causes smarting irritation; தொட்டால் எரிச்சலுண்டாக்கும் கம்பளிப்பூச்சிவகை. (W.) |
| எரிபுளி | eri-puḷi n. <>id.+. A hot curry of which buttermilk is one of the ingredients; கூட்டுக்கறிவகை. Loc. |
| எரிபூச்சி | eri-pūcci n. <>id.+. A flying insect which, on contract, emits moisture that causes a burning sensation and a discolouring of the skin, usu. found on brinjal leaves; கத்தரிச்செடியி லுண்டாகும் ஒருவகைப்பூச்சி. |
| எரிபொத்து - தல் | eri-pottu- v. intr. <>எரி+. To ignite, light a flame; அழல்மூட்டுதல். கனையெரி பொத்தி (மணி. 2, 42). |
| எரிபொழுது | eri-poḻutu n. <>எரி1-+. Rosy sunset; செவ்வானப்பொழுது. (W.) |
| எரிமணி | eri-maṇi n. <>எரி+. Sparkling jewel, bright gem; பிரகாசமுள்ளமணி. (கூர்மபு. அட்டமூ. 2.) |
| எரிமருந்தன் | eri-maruntaṉ n. <>எரி2-+. Manufacturer of gunpowder; வெடிமருந்து செய்பவன். (Insc.) |
| எரிமருந்து | eri-maruntu n. <>id.+. 1. Calcined medicinal powder; எரித்தமருந்து. (W.) 2. Paungent medicine; 3. Gunpowder; |
| எரிமலர் | eri-malar n. <>எரி+. 1. Flower of the Indian Coral-tree. முருக்குமலர். எரிமலர்ப் பவளச்செவ்வாய் (சீவக. 662). 2. Red lotus; |
| எரிமுகி | eri-muki n. <>id.(=agni)+mukhī.. Marketing-nut tree. See செங்கோட்டை. (தைலவ. தைல. 61.) . |
| எரிமுலை | eri-mulai n. <>எரி1+. Tea of a cow that causes it a burning sensation while milking; கறக்கும்போது எரிவெடுக்கக்கூடிய பசு முலை. Loc. |
| எரியல் | eriyal n. <>id. 1. Burning; எரிவு. 2. Shining; 3. That which is burnt, as charred food at the bottom of a vessel in cooking; |
